Tuesday, July 19, 2011

காமம் என்பது......................???


காமம் என்பது உன்னுடைய படைப்பு அல்ல. அது
கடவுளால் உனக்கு அளிக்கப்பட்ட வெகுமதி.

காமம் என்பது ஆரம்பம், ஆனால் முடிவல்ல.

நீங்கள் ஆரம்பத்தை தவறவிட்டால், முடிவையும்
தவற விட்டு விடுவீர்கள்.

தந்திரா என்பது காமத்தை அடைவது அல்ல. காமம் என்பது
பேரின்பத்தின் மூலஸ்தானம் என்று சொல்லுகிறது.

தந்திரா சொல்லுகிறது; நீங்கள் தியானத்திற்குள்
செல்வீர்களேயானால் காமம் முற்றிலுமாக மறைந்து விடுகிறது.

இந்த எளிமையான காமத்தில் தவறு ஏதும் கிடையாது.

ஒருவர் காமத்தை ஏதேனும் ஓர் நாள் கடந்தே
ஆகவேண்டும், ஆனால் காமத்தின் மூலமாகத்தான் கடந்து
சொல்வதற்கான வழி உள்ளது. நீங்கள் அதனுள் சரியானபடி
செல்லாமல், கடந்து செல்வது மிகவும் கடினமானது.

ஆகவே காமத்தின் மூலமாகச் செல்வது அதைக் கடந்து
செல்வதற்கான வழியில் ஒரு பகுதியேயாகும்.

உங்கள் விழிப்புணர்வற்ற நிலையில்,
இயந்திரத்தன்மையுடன் கூடிய காமம் தவறானது.

காமம் என்பது தவறே இல்லை. அதை இயந்திரத்
தன்மையுடையதாகச் செய்யும்போதுதான் அது தவறாகி
விடுகிறது.

காமம் என்பது இயற்கையான நிகழக்கூடியதே.

காமத்தின் துணையுடன் கிடைக்கும் இன்பமே, தியானத்தில்
அளவுக்கு அதிகமாக காமத்தின் துணையின்றிக் கிடைக்கிறது.

நீங்கள் முக்தி நிலை அடைவதற்கு காமஉணர்வுதான்
போக்ஷாக்கு அளிக்கிறது.





 “....... சிற்றின்பத்தில் இருந்து
     மனிதனை பிரிக்கமுடியாது
     என்பது மற்றொரு முக்கியமான
     கருத்து. காமம்தான்
    ஆரம்ப இடம்: மனிதன்
    அதில்தான் பிறந்துள்ளான்.
    கடவுள் காமத்தைத்தான்
    படைப்பின் ஆரம்ப
    நிலையாக ஏற்படுத்தியுள்ளார்.
    கடவுளேகூட பாவச்
   செயல் என்ற கருதாத ஒன்றை
   மிகப்பெரும் மனிதர்கள்
   பாவச்செயல் என்றழைக்கின்றனர்.
   கடவுள் காமத்தை
   ஒரு பாவச் செயலாக
   கருதியிருப்பாரேயாகில் இந்த
   உலகில் கடவுளைத் தவிர
   மிகப்பெரிய பாவி வேறு
  யாரும் இருக்க முடியாது;
  இந்த பிரபஞ்சத்திலேயே
  அவரைவிட மிகப்பெரிய பாவி
  இருக்க முடியாது......”

                                                                                                     - ஓக்ஷோ.

2 comments:

  1. அனைத்தும் சரி. ”நீங்கள் முக்தி நிலை அடைவதற்கு காமஉணர்வுதான் போக்ஷாக்கு அளிக்கிறது.” என்பதனை ஏற்றுக் கொள்ள முடியாது தோழரே. தியானம், முக்தி இரண்டிலும் கிடைக்கும் இன்பம் ஒன்றேயாயினும் தியானம் மட்டுமே உம்மை முக்திக்கு இட்டுச் செல்லும்.ஓஷோ சொல்வதனால் அனைத்தும் உண்மையாகிவிட முடியாது.காமம் என்பது தவறே இல்லை எப்போது? யாருக்கிடையே? அதற்கும் வரையறை உண்டல்லவா. ஓஷோ இவையொன்றையும் கூறவில்லையே. வெறுமனே காமம் என்பது தவறே இல்லை என்று கூறுவதன் மூலம் சமூகத்தில் அல்லவா குழப்பத்தை ஏற்படுத்த முயல்கிறார்.நம் கலாச்சாரமே இக்கட்டில் இருக்கும் இச் சூழலில் இவ் வகையான கருத்துக்களைத் தவிர்ப்பது நல்லது தோழரே!!!

    ReplyDelete
  2. எளிமையான காமத்தில் தவறு ஏதும் கிடையாது.உங்கள் விழிப்புணர்வற்ற நிலையில்,இயந்திரத்தன்மையுடன் கூடிய காமம் தவறானது.
    காமம் என்பது தவறே இல்லை. அதை இயந்திரத்
    தன்மையுடையதாகச் செய்யும்போதுதான் அது தவறாகி
    விடுகிறது.

    ஓக்ஷோவின் கருத்தில் எந்த தப்பும் கிடையாது.. தெளிவாக வாசியுங்கள் புரியும்.

    ReplyDelete