இனியும் வேணாமடி வள்ளி விடுமுறை இனியும் வேணாமடி….01


அதிர்வுகள்(Viber) பகிரி( whats)
வயிறு வெடிக்கப் போகுது
தொலை பேசி சேமிப்பு(Phone storege)
மூச்சு விட முடியாம திணறி
இறக்கத்தான் போகுது
எழுதி எழுதியே கை முறியப்போகுது
தொலைபேசி(Phone) இல்லாத குடும்பம் நகைகளை அடைவுவைச்சு மீட்க முடியாம
திண்டாடப்போகுது
பல குடும்பம் தரவு அட்டை (Data carde) வாங்கியே கடன் காறன்
ஆகப்போகுது குழந்தைகளின்ட
கட்புல செவிப்புல அங்கங்கள்
பாதிப்படையப்போகுது
வீட்டுப்பாடம் செய்தே
பிள்ளைகளுக்கு கல்வி வெறுக்கப்போகுது
பணிச்சுமை தாங்காம பலருக்கு
தலை வெடிக்கப்போகுது
டயலொக் காரனின்ட காசு
வங்கி நிறைய போகுது
Zoom இல பேசிப்பேசி
விசர் பிடிக்கப்போகுது
காசை கரியாக்கி
பல குடும்பம் பட்டினியில
சாகப்போகுது
சவப்பெட்டி இனித்தான்
தங்கம் விற்கும் விலைக்கு
வில்படப்போகுது
இனியும் வேணாமடி
வள்ளி
விடுமுறை இனியும்
வேணாமடி
நித்தி கவியழகன்

No comments:

Post a Comment