Showing posts with label தொழிநுட்பம். Show all posts
Showing posts with label தொழிநுட்பம். Show all posts

Tuesday, May 1, 2012

அமெரிக்கா முழுவதும் வியப்போடு கவனிக்கப்படும் தமிழர்....!!!




கே.ஆர். ஸ்ரீதர் - இன்றைய தேதியில் அமெரிக்கா முழுமைக்கும் வியப்போடு கவனிக்கப்பட்டு வரும் பெயர்....
இதுவரை யாருமே செய்திராத ஓர் அதிசயத்தை செய்து காட்டியதன் மூலம் அமெரிக்க பிஸினஸ் உலகமே இவரை அண்ணாந்து பார்த்துக் கொண்டிருக்கிறது. இதில் பெருமைக்குரிய விஷயம், இவர் ஒரு தமிழர் என்பதே.

அப்படி என்னதான் சாதனை செய்துவிட்டார் இந்தத் தமிழர்? கே.ஆர். ஸ்ரீதர்....

திருச்சியில் உள்ள ரீஜினல் என்ஜினீயரிங் காலேஜில் (தற்போது என்.ஐ.டி.) மெக்கானிக்கல் என்ஜினீயரிங் படித்து முடித்தவுடன் அமெரிக்காவில் உள்ள இல்லினாய்ஸ் பல்கலைக்கழகத்தில் நியூக்ளியர் என்ஜினீயரிங் படித்து விட்டு, அதே பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி செய்து டாக்டர் பட்டமும் பெற்றார் ஸ்ரீதர். மிகப் பெரிய புத்திசாலியாக இருந்த இவரை நாசா அமைப்பு உடனடியாக வேலைக்கு எடுத்துக் கொண்டது.

அரிசோனா பல்கலைக் கழகத்தில் உள்ள ஸ்பேஸ் டெக்னாலஜீஸ் லேபரட்டரியின் இயக்குநராக அவரை நியமித்தது.
செவ்வாய்க் கிரகத்தில் மனிதன் வாழ முடியுமா? அதற்குத் தேவையான சாத்தியக்கூறுகளைக் கண்டுபிடிப்பது எப்படி? என்பது பற்றி ஆராய்ச்சி செய்வதே ஸ்ரீதரின் வேலை. முக்கியமாக செவ்வாய்க் கிரகத்தில் மனிதன் சுவாசிக்கத் தேவையான ஆக்ஸிஜனை தயார் செய்ய முடியுமா என்கிற ஆராய்ச்சியை மேற்கொண்டார். இந்த ஆராய்ச்சியில் மிகப் பெரிய வெற்றியும் பெற்றார்.

ஆனால் அமெரிக்க அரசாங்கமோ திடீரென அந்த ஆராய்ச்சியை ஓரங்கட்டிவிட்டது. என்றாலும் தான் கஷ்டப்பட்டு கண்டுபிடித்த விஷயத்தை ஸ்ரீதர் அப்படியே விட்டுவிடவில்லை. அந்த ஆராய்ச்சியை அப்படியே ரிவர்ஸில் செய்து பார்த்தார் ஸ்ரீதர். அதாவது, ஏதோ ஒன்றிலிருந்து ஆக்ஸிஜனை உருவாக்கி வெளியே எடுப்பதற்குப் பதிலாக அதை ஒரு இயந்திரத்துக்குள் அனுப்பி, அதனோடு இயற்கையாகக் கிடைக்கும் எரிசக்தியை சேர்த்தால் என்ன நடக்கிறது என்று ஆராய்ந்து பார்த்தார். அட, என்ன ஆச்சரியம்! மின்சாரம் தயாராகி வெளியே வந்தது.

இனி அவரவர்கள் அவரவருக்குத் தேவையான மின்சாரத்தை இந்த இயந்திரம் மூலம் தயார் செய்து கொள்ளலாம் என்கிற நிலையை ஸ்ரீதர் உருவாக்கி இருக்கிறார். தான் கண்டுபிடித்த இந்தத் தொழில் நுட்பத்தை அமெரிக்காவில் செய்து காட்டிய போது அத்தனை விஞ்ஞானிகளும் அதிசயித்துப் போனார்கள். ஆனால் இந்த புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, வர்த்தக ரீதியில் மின்சாரம் தயாரிக்க வேண்டுமெனில் அதற்கான இயந்திரங்களை உருவாக்க வேண்டும். இதற்கு பெரிய அளவில் பணம் வேண்டும்.

இப்படிப்பட்ட தொழில்நுட்பத்தைப் உருவாக்கும் பிஸினஸ் பிளான்களுக்கு வென்ச்சர் கேப்பிட்டல் நிறுவனங்கள்தான் பணத்தை முதலீடு செய்யும். ஸ்ரீதருக்கும் அப்படி ஒருவர் கிடைத்தார். அவர் பெயர், ஜான் டூயர். சிலிக்கன் பள்ளத்தாக்கில் பிரபலமாக இருக்கும் மிகப் பெரிய வென்ச்சர் கேப்பிட்டல் நிறுவனமான கிளீனர் பெர்க்கின்ஸை சேர்ந்தவர் இந்த ஜான் டூயர். அமெரிக்காவில் மிகப் பெரும் வெற்றி கண்ட நெட்ஸ்கேப், அமேசான், கூகுள் போன்ற நிறுவனங்கள் இன்று பிரம்மாண்டமாக வளர்ந்து நிற்கக் காரணம், ஜான் டூயர் ஆரம்பத்தில் போட்ட முதலீடுதான்.
கூகுள் நிறுவனத்தை ஆரம்பிக்க ஜான் டூயர் தொடக்கத்தில் போட்ட முதலீடு வெறும் 25 மில்லியன் டாலர்தான். ஆனால், ஸ்ரீதரின் தொழில்நுட்பத்தை வர்த்தக ரீதியில் செயல்படுத்த ஜான் டூயர் போட்ட முதலீடு 100 மில்லியன் டாலர்.

இது மிகப் பெரும் தொகை. என்றாலும் துணிந்து முதலீடு செய்தார் ஜான். காரணம், ஸ்ரீதர் கண்டுபிடித்த தொழில்நுட்பம் சுற்றுச்சூழலுக்கு உகந்தது. பொதுவாக மின் உற்பத்தி செய்யும்போது சுற்றுச்சூழல் பிரச்னைகள் நிறையவே எழும். அது நீர் மின் உற்பத்தியாக இருந்தாலும் சரி, அனல் மின் உற்பத்தியாக இருந்தாலும் சரி. எனவே சுற்றுச்சூழலுக்கு எந்த வகையிலும் பங்கம் வராத மின் உற்பத்தித் தொழில்நுட்பத்துக்கு மிகப் பெரிய வரவேற்பு இருக்கும் என்று நினைத்தார் அவர். தவிர, ஸ்ரீதரின் தொழில்நுட்பத்தைக் கொண்டு குறைவான செலவில் மின்சாரம் தயார் செய்ய முடியும். இந்த பாக்ஸிலிருந்து உருவாகும் மின்சாரம் குறைந்த தூரத்திலேயே பயன்படுவதால் மின் இழப்பு என்கிற பேச்சுக்கே இடமில்லை. இது மாதிரி பல நல்ல விஷயங்கள் ஸ்ரீதரின் கண்டுபிடிப்பில் இருப்பதை உணர்ந்ததால் அவர் அவ்வளவு பெரிய தொகையை முதலீடு செய்தார்.

நல்லவேளையாக, ஜான் டூயரின் எதிர்பார்ப்பு பொய்க்கவில்லை. கிட்டத்தட்ட எட்டு ஆண்டுகள் கஷ்டப்பட்டு பலரும் உழைத்ததன் விளைவு இன்று 'ப்ளூம் பாக்ஸ்' என்கிற மின்சாரம் தயாரிக்கும் பாக்ஸ் தயார் செய்துள்ளார்.

சுமார் 10 முதல் 12 அடி உயரமுள்ள இரும்புப் பெட்டிதான் ஸ்ரீதர் உருவாக்கியுள்ள இயந்திரம். இதற்கு உள்ளே ஆக்ஸிஜனையும் இயற்கை எரிவாயுவையும் செலுத்தினால் அடுத்த நிமிடம் உங்களுக்குத் தேவையான மின்சாரம் தயார். இயற்கை எரிவாயுவுக்குப் பதிலாக மாட்டுச்சாண வாயுவையும் செலுத்தலாம். அல்லது சூரிய ஒளியைக் கூட பயன்படுத்தலாமாம். இந்த பாக்ஸ்களை கட்டடத்துக்குள்ளும் வைத்துக் கொள்ளலாம். வெட்ட வெளியிலும் வைத்துக் கொள்ளலாம் என்பது சிறப்பான விஷயம்.

உலகம் முழுக்க 2.5 பில்லியன் மக்கள் மின் இணைப்புப் பெறாமல் இருக்கிறார்கள்ஆப்பிரிக்காவில் ஏதோ ஒரு காட்டில் இருக்கும் கிராம மக்களுக்கு மின்சாரம் கொடுத்தால், அதனால் அரசாங்கத்துக்கு எந்த லாபமும் இல்லை என்பதால் அவர்கள் மின் இணைப்புக் கொடுப்பதில்லை. கிராமத்தை விட்டு வந்தால் மட்டுமே பொருளாதார ரீதியில் முன்னேற முடியும் என்கிற நிலை அந்த கிராம மக்களுக்கு. ஆனால் இந்த 'ப்ளூம் பாக்ஸ்' மட்டும் இருந்தால் உலகத்தின் எந்த மூலையிலும் மின்சாரம் தயார் செய்யலாம்'' என்கிறார் ஸ்ரீதர். ஒரு 'ப்ளூம் பாக்ஸ்' உங்களிடம் இருந்தால் இரண்டு வீடுகளுக்குத் தேவையான மின்சாரம் கிடைத்துவிடும். இதே பாக்ஸ் இந்தியாவில் இருந்தால் நான்கு முதல் ஆறு வீடுகளுக்குத் தேவையான மின்சாரம் கிடைத்துவிடும்.

அமெரிக்க வீடுகளில் அதிக மின்சாரம் பயன்படுத்தப்படுவதே அங்கு வீடுகளின் எண்ணிக்கை குறையக் காரணம். இன்றைய தேதியில் அமெரிக்காவின் 20 பெரிய நிறுவனங்கள் ஸ்ரீதரின் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மின்சாரம் தயார் செய்கின்றன. கூகுள் நிறுவனம்தான் முதன் முதலாக இந்தத் தொழில்நுட்பத்தை வாங்குவதற்கான கான்ட்ராக்ட்டில் கையெழுத்திட்டது. 'ப்ளூ பாக்ஸ்' மூலம் கூகுள் உற்பத்தி செய்யும் 400 கிலோ வாட் மின்சாரமும் அதன்
ஒரு பிரிவுக்கே சரியாகப் போகிறது. வால் மார்ட் நிறுவனமும் 400 கிலோ வாட் மின்சாரம் தயாரிக்கும் பாக்ஸை வாங்கி இருக்கிறது. இப்போது Fedex, E bay, கோக்கா கோலா, அடோப் சிஸ்டம், சான் பிரான்சிஸ்கோ ஏர்போர்ட் போன்ற பல நிறுவனங்களும் இந்த புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மின்சாரம் தயார் செய்கின்றன.
100 கிலோ வாட் மின்சாரம் தயார் செய்யும் ஒரு பாக்ஸின் விலை 7 முதல் 8 லட்சம் டாலர்! அட, அவ்வளவு பணம் கொடுத்து வாங்க வேண்டுமா? என நீங்கள் நினைக்கலாம். ஆனால் இந்தத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் E bay நிறுவனம் கடந்த ஆண்டு ஸ்ரீதரிடமிருந்து ஐந்து பாக்ஸ்களை வாங்கியது. தனக்குத் தேவையான 500 கிலோ வாட் மின்சாரத்தை இந்த பாக்ஸின் மூலமே தயார் செய்துவிடுகிறது. இந்த பாக்ஸ்களை வாங்கிய ஒன்பதே மாதத்துக்குள் 1 லட்சம் டாலர் வரை மின் கட்டணத்தை சேமித்திருக்கிறதாம் E bay.

இன்னும் ஐந்து முதல் பத்து ஆண்டுகளில் அமெரிக்காவின் பல வீடுகளில் இந்த 'ப்ளூம் பாக்ஸ்' இருக்கும். சாதாரண மனிதர்களும் இந்த பாக்ஸை வாங்கி பயன்படுத்துகிற அளவுக்கு அதன் விலை 3,000 டாலருக்குள் இருக்கும்'' என்கிறார் ஸ்ரீதர். அந்த அளவுக்கு விலை குறையுமா என்று கேட்டால், ஒரு காலத்தில் லட்சத்தில் விற்ற கம்ப்யூட்டர் இன்று ஆயிரங்களுக்குள் கிடைக்கிறதே என்கிறார்கள் ஸ்ரீதரின் ஆதரவாளர்கள். ஸ்ரீதரின் இந்த தொழில்நுட்பம் எதிர்காலத்தில் நிஜமாகும் பட்சத்தில் உலகம் முழுக்க மக்கள் அந்தத் தமிழரின் பெயரை உச்சரிப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை.

இந்தப் பக்கம் பிடித்திருந்தால் உங்கள் சமூகவலைப் பக்கங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Wednesday, March 28, 2012

முதலீடு இல்லாமல் நம்மால் பணம் சம்பாரிக்க ஒரு அறிய வாய்ப்பு

 நண்பர்களே,

இணையத்தில் முதலீடு இல்லாமல் நம்மால் பணம் சம்பாரிக்க ஒரு அறிய வாய்ப்பினை Wazzub நமக்கு வழங்குகிறது. இவர்கள் "அவர்களின் வருமானத்தில் நமக்கு பிரித்து தருகிறார்கள்" . Google மற்றும் Facebook தளங்களை  போல இவர்களும் ஒரு பெரிய தளத்தை ஆரம்பிக்க போகிறார்கள் அதன் மூலம் வரும் வருமானத்தினை நமக்கு பிரித்து தருகிறார்கள்.
 
நாங்கள் எந்த ஒரு காரணத்திற்க்காகவும் உங்களிடம் "முதலீடாக ஒரு பைசா கூட வாங்க மாட்டோம்" என்று கூறுகிறார்கள், என்றும் இலவசம் தான் என்று கூறுகிறார்கள்.
 
இந்த தளத்தில் நீங்கள் இணைந்து உங்கள் நண்பர்கள் மூன்று நபர்களை இணைத்து விட்டால் போதும். பிறகு இதன் சேவையை பயன்படுத்தினால் போதும் மாதம் கணிசமான வருமானத்தினை நாம் கண்டிப்பாக பெற முடியும்.

WAZZUB is in pre-launch until April 9, 2012. இந்த தளத்தில் இணைந்தவுடன் உங்களுக்கு ஒரு Confirmation மெயில் வரும் அதை கிளிக் செய்து மறக்காமல் Verify செய்துவிடவும்.


இந்த தளத்தில் இதுவரை ( 27.03.2012, 8.30Pm ) 4,001,532க்கும் மேற்பட்டவர்கள் இணைந்து உள்ளனர்.   

கூகுள் சேவையை அனைவரும் பயன்படுத்தி வருகிறோம் ஆனால் அதன் வருமானம் அவர்களுக்கு மட்டும் தான் ஆனால் இவர்கள் வரும் வருமானத்தில் பாதியை நமக்கு பிரித்து தருகிறார்கள். 

இந்த தளம் ஒரு புதிய முயற்சியாக இந்த வாய்ப்பினை நம் அனைவருக்கும் வழங்குகிறது ஆகையால் நாமளும் இணைந்து பயன்பெறுவோம்.
   

இந்த தளம் தன் சேவையை ஆரம்பிக்க 13 நாட்கள் மட்டுமே உள்ளது அதற்குள் இதில் நீங்கள் இணைந்துவிடுங்கள்.


மேலும் இந்த தளத்தினை பற்றி அறிய இந்த காணொளியை காணுங்கள் 


மேலும் இந்த தளத்தினை பற்றியும் இவர்கள் Charity பற்றி அறிய இங்கு செல்லவும் : http://heywazzub.blogspot.in/


முக்கிய குறிப்பு : நீங்கள் Verify செய்தால் மட்டுமே உங்களால் பணம் சம்பாரிக்க முடியும் ஆகையால். இந்த http://signup.wazzub.info/login.php Link சென்று பின் அந்த பக்கத்தின் இறுதியல் உள்ள  Please re-Send my verification email என்பதை கிளிக் செய்து பின் உங்கள் முகவரியை கொடுத்து Send கொடுக்கம்.

உடனே உங்கள் முனஞ்சல் முகவரிக்கு ஒரு Email வந்து இருக்கும் அந்தில் உள்ள Linkய் கிளிக் செய்து உங்கள் Accountய் Verify செய்து கொள்ளுங்கள்.


குறிப்பு : இந்த தளத்தில் நீங்கள் இணைந்து உங்கள் நண்பர்கள் மூன்று நபர்களை இணைத்து விட்டால் போதும். பிறகு இதன் சேவையை பயன்படுத்தினால் போதும் மாதம் கணிசமான வருமானத்தினை நாம் கண்டிப்பாக பெற முடியும்.


http://signup.wazzub.info/?lrRef=4bb50
 

 நன்றி : http://puthuputhuthagavalgal.blogspot.com/

Wednesday, July 20, 2011

கூகுள் +, பேஸ்புக்கிற்கு போட்டியாக மைக்ரோசொப்டின் இணையம்

பேஸ்புக் மற்றும் கூகுள் வரிசையில் மைக்ரோசொப்டும் சமூக வலையமைபொன்றினை உருவாக்கி வருவதாக ஆதாரங்கள் கசிந்துள்ளன.
இதற்கான ஆதாரமாக www. socl.com என்ற இணைய முகவரி வெளியாகியுள்ளது. இம்முகவரியினை மைக்ரோசொப்ட் அண்மையில் கொள்வனவு செய்ததாக தெரிவிக்கப்படுகின்றது. இது மைக்ரோசொப்டின் சமூக வலையமைப்பின் முன்வடிவம் எனவும் தவறுதலாக வெளியாகியிருக்கலாம் எனவும் இணையத்தளங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மேலும் இச்சமூக வலையமைப்பின் பெயர் "டுலாலிப்" ஆக இருக்கலாம் எனத் தெரிவிக்கப்படுகின்றது. காரணம் அப்பக்கத்தில் "With Tulaip you can find what you need and share what you know easier than ever" எனக்குறிப்பிடப்பட்டுள்ளமையாகும்.
இதேவேளை இப்பக்கம் அத்தளத்திலிருந்து பின்னர் அகற்றப்பட்டுள்ளதுடன் வேறொரு பக்கம் காட்சி படுத்தப்பட்டுள்ளது. அதில் ஒரு செய்தியும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இது மைக்ரோசொப்டின் சமூகவலையமைப்பு என்பதினை உறுதி செய்யும் பல ஆதாரங்கள் உள்ளதாக இணையத்தளங்கள் சுட்டிக் காட்டுகின்றன.
அதாவது இதன் பெயர் "Tulalip" என்பது அமெரிக்க வொசிங்டனின் ரெட்மொண்ட் நகரின் பூர்வீகக் பழங்குடியினரைக் குறிக்கும் பெயர் எனவும் இங்கேயே மைக்ரோசொப்ட்டின் தலைமையகமும் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
மைக்ரோசொப்டின் தேடல் பொறியான bing நான்கு எழுத்துக்களை கொண்டதுடன் தற்போது அது socl.com தளமும் 4 எழுத்துக்களை கொண்டதாகும்.
சமூக வலையமைப்புகளுக்கிடையிலான போட்டியில் பேஸ்புக் ஏற்கனவே ஜாம்பவானாக உள்ள நிலையில் கூகுள் தனது கூகுள் + ஐ அண்மையில் அறிமுகப்படுத்தியது. இந்நிலையில் மைக்ரோசொப்டின் இரகசிய முயற்சியும் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
 
                                                                                                                   -  நன்றி இணையம்.

Saturday, July 9, 2011

என் கண்ணை என்னால நம்ப முடியலயே...........











மேலே உள்ள முக்கோணத்தில் காணப்படும் வடிவங்களை மாற்றி அதே அளவிலான முக்கோணத்தை அமைக்கும் போது இடைவெளி உருவாகிறது. எப்படி???

Monday, July 4, 2011

கூகிளின் புதிய அறிமுகம் கூகிள் + பேஸ்புக்குக்கு போட்டியா…?

கூகுள் தற்போது புதிய சமூக வலைப்பின்னல் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது.இதற்கு கூகிள் பிளஸ் என பெயரிட்டுள்ளது.
கூகிள் நிறுவனம் கடந்த ஒருவருடமாக இதனை மறுத்து வந்த போது தற்போது பரீட்சார்த்தமாக அதனை வெளியிட்டுள்ளது. அத்தோடு பேஸ்புக்கில் உள்ள வசதிகளோடு ஸ்கைப் இனை ஒத்த வீடியோ தொடர்பாடலினையும் கொண்டுள்ளது.அத்தோடு இது ஸ்கைப் நிறுவனத்துக்கும் போட்டியாக அமையலாம்.
இதோ கூகிள் பிளஸ் தொடர்பான படங்கள் உங்களுக்காக

                                                                      நன்றி: பாருங்கோ.கொம்

Sunday, June 26, 2011

கூகுள் மொழிபெயர்ப்பு..(google translate)

எமது ஆங்கில அறிவின் புலமையை சோதித்துப்(சும்மா சொன்னேன்) பார்க்க கூகுள் புதிதாக ஓர் மொழிபெயர்ப்பு மென்பொருள் தளத்தினை அறிமுகப்படுத்தி உள்ளது.

அதன் இணைப்பு இதோ...



Here you can find the Tamil to English translator.  
The link is. 
Here you can find the English to Tamil translator. 
The link is. 




இதுவும் அதில அடிச்சது தானுங்க.........

Wednesday, June 22, 2011

Search by Image: கூகுளின் பயனுள்ள புதிய வசதி..





வாசகர்கள் பயன்பெறும் வகையில் அடிக்கடி ஏதாவது ஒரு பயனுள்ள வசதியை கூகுள் வெளியிட்டு கொண்டே உள்ளது. அந்த வரிசையில் கூகுள் இமேஜில் புதிய வசதியாக Search by Image என்ற வசதியை வெளியிட்டுள்ளனர்.நாம் ஏதாவது ஒரு புகைப்படத்தை நம் கணணியில் வைத்திருப்போம். அதே படம் அல்லது அதற்கு தொடர்பான படங்கள் வேறு அளவுகளில் நமக்கு தேவைபடும் பொழுது அந்த நேரங்களில் நாம் வைத்திருக்கும் படத்தின் குறிச்சொல்லை சரியாக கூகுளில் கொடுத்தால் அந்த படங்களை கண்டுபிடிக்க முடியும்.
குறிச்சொல் கொடுப்பதில் தவறு ஏற்ப்பட்டால் அந்த படங்களை கண்டறிய மிகுந்த சிரமம் எடுக்க வேண்டும். ஆனால் இனி இந்த பிரச்சினை இல்லை. நாம் அந்த படத்தை கூகுள் இமேஜில் கொடுத்து தேடினால் அதற்க்கு சம்பந்தமான படங்களை வெவ்வேறு அளவுகளில் சுலபமாக பெற்று கொள்ளலாம்.
உங்களுடைய புகைப்படத்தை கூகுளில் கொடுத்து தேடினால் உங்களுடைய புகைப்படம் எந்தெந்த தளத்தில் உள்ளது என சுலபமாக கண்டறியலாம்.
இந்த பயனுள்ள வசதியை பெற Google Image  இணைய தளத்திற்கு செல்லவும். அங்கு நாம் குறிச்சொல் கொடுக்கும் இடத்தில் ஒரு கமெரா போன்ற புதிய ஐகான் இருப்பதை காண முடியும். அதில் க்ளிக் செய்யுங்கள்.
அந்த ஐகான் மீது க்ளிக் செய்தவுடன் உங்களுக்கு இன்னொரு சிறிய விண்டோ ஓபன் ஆகும். அதில் நீங்கள் தேட விரும்பும் படத்தின் URL தெரிந்தால் அந்த URL அங்கே கொடுத்து தேடவும்.
புகைப்படம் உங்களுடைய கணணியில் இருந்தால் Upload an Image என்ற லிங்க் க்ளிக் செய்து உங்கள் புகைப்படத்தை பதிவேற்றம் செய்து தேடவும். உங்கள் புகைப்படத்தை டிராக்(Drag) செய்து இங்கு கொண்டு வந்தும் தேடலாம்.

                                                                                                      - நன்றி இணையம்.

யூடியூப் வீடியோக்களின் திரையை மாற்றியமைப்பதற்கு.....





நாம் அனைவரும் வீடியோவினை பார்க்க அதிகமாக நாடும் தளம் யூடியூப் ஆகும். இந்த தளத்தில் எண்ணற்ற வீடியோக்கள் உள்ளன. அவற்றில் ஒரு சில வீடியோக்களை புக்மார்க் செய்து வைத்திருப்போம்.யூடியூப் வீடியோவினை நாம் முழுத்திரையிலையோ அல்லது குறிப்பிட்ட வடிவில் மட்டுமே பார்க்க முடியும். யூடியூப் வீடியோக்களை ஓன்லைனில் இருந்த படியே நமக்கு விருப்பமான வடிவில் பார்க்க முடியும். மேலும் இதனுடைய தோற்ற திரையையும் நம்முடைய விருப்பபடி மாற்றியமைத்துக் கொள்ள முடியும். இதற்கு Youtube Embeded Code என்னும் மென்பொருள் உதவி செய்கிறது.
இந்த மென்பொருளை இணையத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து பின் ஒப்பன் செய்யவும். பின் தோன்றும் விண்டோவில் உங்களுக்கு விருப்பமான யூடியூப் வீடியோவில் URLயை உள்ளிடவும்.
பின் அகலம், உயரம், நிறம் போன்றவற்றை மாற்றியமைத்துக் கொள்ளவும். பின் Generate Code என்னும் பொத்தானை அழுத்தி அந்த XHTML கோடினை கணணியில் சேமித்து வைத்துக் கொள்ளவும்.
வேண்டுமெனில் குறிப்பிட்ட திரையிலேயே Perview பார்த்துக் கொள்ளவும் முடியும். பின் சேமித்த XHTML கோப்பை உலவியில் ஒப்பன் செயதால் நீங்கள் வடிவமைத்த வடிவில் வீடியோவானது இருக்கும். இனி வழக்கம் போல வீடியோவினை காண முடியும்.

தரவிறக்க...

                                                                                     - நன்றி இணையம்.