Showing posts with label படித்ததில் பிடித்தது. Show all posts
Showing posts with label படித்ததில் பிடித்தது. Show all posts

Tuesday, July 20, 2021

கற்றது கையளவு கல்லாதது உலகளவு


 சந்தைக்கடையில் இரண்டு பையன்கள் மீன் விற்றுக் கொண்டிருந்தனர். வியாபாரம் மிகவும் மந்தமாகத் தான் இருந்தது.*

சற்று நேரம் கழித்து ஒரு வாடிக்கையாளர் வந்தார். முதல் பையனிடம் சென்று மீன் விலை விசாரித்தார். “ஒரு கிலோ 1௦௦ ருபாய் ஆகும், சார்,” என்று அவன் கூறினான். சற்று தூரத்தில் இரண்டாவது பையனும் அதே வகை மீனை வைத்துக் கொண்டிருந்ததால், அவனிடம் சென்று இந்த விலைக்குக் குறைவாகக் கொடுக்கச் சொல்லி, பேரம் பேசி வாங்கலாம் என்று நினைத்து அவனை அணுகினார். விலை என்னவென்று விசாரித்த போது, அவனோ, “ மீன் விலை ஒரு கிலோ 5௦௦ ருபாய் ஆகும், சார்,” என்று கூறினான். விலையைக் கேட்டுத் திடுக்கிட்டுப் போன அவர், “ என்னப்பா இது ? அந்தப் பையனும் இதே மாதிரி மீன் தான் வைத்திருக்கிறான். அவன் விலை 1௦௦ ருபாய் என்று சொல்கிறான். நீ அதே மாதிரி மீனுக்கு விலை 5௦௦ ருபாய் என்று சொல்கிறாயே. இது நியாயமா?” என்று வினவினார். அந்தப் பையனோ கொஞ்சமும் அலட்டிக் கொள்ளாமல் சொன்னான்: “ சார், பார்க்கத் தான் இரண்டும் ஒரே மாதிரியாகத் தெரியும். ஆனால் என்னுடைய மீன் மிகவும் விசேஷமானது. அதனால் தான் கூடுதல் விலை,” என்றான். “அப்படி என்னப்பா விசேஷம் உன் மீனில் இருக்கிறது?” என்று கேட்டார் வாடிக்கையாளர். “சார், இது புத்திசாலியான மீன். இதைச் சாப்பிடுபவர்களும் நாளடைவில் புத்திசாலியாகி விடுவார்கள். அதனால் தான் இவ்வளவு விலை,” என்றான் பையன். “உண்மையாகவா ?” என்று வியந்தார் வாடிக்கையாளர். “வாங்கிப் பாருங்கள், சார், உங்களுக்கே தெரியும்,” “சரி,சரி, ஒரு கிலோ கொடு. ‘ட்ரை’ பண்ணிப் பார்க்கிறேன்”, என்று சொல்லி, ஒரு கிலோ மீனை 5௦௦ ருபாய்க்கு வாங்கிச் சென்றார். அடுத்தடுத்து தொடந்து 6 நாட்களுக்கு அதே மீனை அதே பையனிடம் அதே விலைக்கு வாங்கிச் சென்று சாப்பிட்டு வந்தார். புத்திசாலித்தனத்தில் ஏதாவது முன்னேற்றம் ... ? ம்ஹும். ...! எதுவும் தெரியவில்லை. அப்போது தான் அவருக்குப் புரிந்தது “புத்திசாலி மீன்” என்று அந்தப் பையன் சொன்னது எல்லாம் வெறும் பித்தலாட்டம் என்று. கடுமையான கோபம் வந்து விட்டது அவருக்கு. ‘இன்று அவனைப் போய் ‘உண்டு அல்லது இல்லை’ என்று ஆக்கி விட வேண்டியது தான் என்ற தீர்மானத்துடன் சந்தைக்குச் சென்றார்.. அந்தப் பையனிடம் சென்று, தன் கோபத்தை வெளிக்காட்டாமல், “என்னப்பா, அந்த புத்திசாலி மீன் இருக்கா? ”, என்று இவர் கேட்க, இவரின் கோபத்தைப் புரிந்து கொள்ளாமல் அவனும், “ ஓ, இருக்கே. உங்களுக்காகவே தனியாக எடுத்து வைத்திருகிறேனே ! ”, என்று உற்சாகமாகக் கூறினான். வந்ததே கோபம் அவருக்கு ! “அயோக்கியப் பயலே! என்னையா ஏமாற்றப் பார்க்கிறாய் ? உன் பேச்சைக் கேட்டு ஒரு வாரமாக நானும் அந்த மீனை வாங்கிச் சாப்பிட்டுப் பார்த்து விட்டேன். அணுவளவும் முன்னேற்றம் இல்லை. புத்திசாலி மீனும் கிடையாது, ஒரு மண்ணும் கிடையாது. என்னை ஏமாற்றி விட்டாய். உடனடியாக என் பணத்தையெல்லாம் திருப்பித் தந்துவிடு. இல்லையென்றால் உடனடியாகப் போலீசைக் கூப்பிட்டு விடுவேன்”, என்று கத்தினார். பையனோ அலட்டிக் கொள்ளாமல் பதில் சொன்னான்: “ சார், இங்கே பாருங்க. இதே மீனை புத்திசாலி மீன் என்று நான் ஒரு வாரத்திற்கு முன்னால் சொன்ன போது நீங்கள் ஆட்சேபிக்கவேயில்லை. இப்போ பாருங்க, ஒரு வாரத்திலேயே இது புத்திசாலி மீன் இல்லை என்று நீங்களே கண்டு பிடித்து விட்டீர்கள். அப்படி என்றால் தற்போது நீங்கள் புத்திசாலி தானே சார்.. என்ன பிரமாதமான முன்னேற்றம்! இதைப் போய் முன்னேற்றம் இல்லை என்று சொல்கிறீர்களே, சார் ! தொடர்ந்து சாப்பிடுங்க, சார். இன்னும் பிரமாதமான முன்னேற்றம் கிடைக்கும்.” வாடிக்கையாளர் வாயடைத்து நின்றார். கற்றது கையளவு கல்லாதது உலகளவு.

படித்ததில் பிடித்தது

Friday, July 24, 2020

தனிமைப்படுத்தலும் நோய்தடுப்பும் தொடர்பான சட்டவிதிகள் - 03

இச்சட்டத்தை நிருவகித்தல் அல்லது அமுலாக்கம் தொடர்பில் நோக்குமிடத்து 03 விடயங்கள் அல்லது 03 படிநிலைகள் காணப்படுகிறது.
1. தகுதிவாய்ந்த அதிகாரி (Proper Authority)
2. அதிகாரக் கையளிப்பு (Delegation of Powers)
3. பரிசோதகர்களை நியமித்தல் (Appointment of Inspectors)
7481 இலக்க 28.08.1925 திகதிய மற்றும்
9134 இலக்க 11.06.1943 திகதிய அரச வர்த்தமானிகளில் பிரசுரிக்கப்பட்ட தானியங்களைக் களஞ்சியப்படுத்தலும் புழுவியாதியைத் தடுத்தலுக்குமான தனிமைப்படுத்தல் ஒழுங்குவிதிகள் (Quarantine Regulations related to Storage of Grains and Ancylostomiasis) 1897ம் ஆண்டின் 03ம் இலக்க தனிமைப்படுத்தலும் நோய்த்தடுப்பும் கட்டளைச் சட்டத்தின் பிரிவு 02 மற்றும் பிரிவு 03 இன் நோக்கெல்லையை விரிவுபடுத்தியுள்ளது. அதாவது தகுதிவாய்ந்த அதிகாரிகள் எனும் விடயம் தொடர்பான பொருட்கோடல் இவ் ஒழுங்குவிதிகளில் வழங்கப்பட்டுள்ளது. அதன் பிரகாரம்
(1) தீவு முழுவதற்குமான தகுதிவாய்ந்த அதிகாரியாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகமும்,
(2) உள்ளூர் இடப்பகுதிகளுக்கான தகுதி வாய்ந்த அதிகாரிகளாக அந்தந்த மாநகர சபை, நகர சபை அல்லது பட்டின/கிராம சபைகளின் (தற்போது பிரதேச சபைகள்) தவிசாளர்கள் அல்லது அந்த இடப்பரப்புகளுக்கான சுகாதார வைத்திய அதிகாரிகள்,
(3) துறைமுகங்கள் மற்றும் விமான நிலையம் தொடர்பில் Director of Qurantine அல்லது துறைமுக சுகாதார அதிகாரி (Port Health Officer),
(4) இராணுவம், கடற்படை மற்றும் வான்படை ஆகிய படைத்துறைகளின் விடயத்தில் அந்தந்த படைப்பிரிவின் வைத்தியர்கள் (Medical Officer),
(5) மேற்படி விடயப்பரப்பினுள் அடங்காத ஏனைய விடயங்கள் தொடர்பில் அந்தந்த பிரிவுக்குப் பொறுபான சுகாதார சேவைகள் அத்தியட்சகர்கள் (தற்போது பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் - RDHS) இடப்பரப்புக்கான தகுதிவாய்ந்த அதிகாரியாக நியமிக்கப்படலாம்.
இதனடிப்படையில் காலத்துக்குக் காலம் பல ஒழுங்குவிதிகள் ஆக்கப்பட்டுவந்துள்ளது. அதில் பெரும்பாலான ஒழுங்குவிதிகளில் இடப்பரப்பிற்கான தகுதிவாய்ந்த அதிகாரிகளாக உள்ளூராட்சி சபையின் தவிசாளர்கள் குறிப்பிடப்பட்டுள்ளனர்.
புழுவியாதி தெடர்பான ஒழுங்குவிதியில் உள்ளூராட்சி சபையின் தவிசாளர்களும், அந்த இடப்பரப்புக்குரிய சுகாதார வைத்திய அதிகாரிகளும் இடப்பரப்புக்குரிய தகுதி வாய்ந்த அதிகாரிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.
#அதிகாரக் #கையளிப்பு தொடர்பில் நோக்குமிடத்து 1897ம் ஆண்டின் 03ம் இலக்க தனிமைப்படுத்தலும் நோய்த்தடுப்பும் கட்டளைச் சட்டத்தின் பிரிவு 11 பிரகாரம் அமைச்சர் இச்சட்டத்தின் அல்லது ஒழுங்கு விதிகளின் அமுல்ப்படுத்துகை தொடர்பில் தனது அதிகாரங்களை உள்ளூர் அதிகார சபைகளுக்குக் கையளிக்கலாம்.
அத்துடன் 10713 இலக்க 17.09.1954 இலக்க வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதிக்கமைய பிரிவு 37 பிரகாரம் தகுதி வாய்ந்த அதிகாரியானவர் எழுத்துமூலமாக தனது அதிகாரத்தை கையளிப்பு செய்ய முடியும். இதன் மூலமாக இடப்பரப்புகளுக்கான தகுதிவாய்ந்த அதிகாரிகளை ஏற்பாடுசெய்து கொள்ளலாம்.
1897ம் ஆண்டின் 03ம் இலக்க தனிமைப்படுத்தலும் நோய்த்தடுப்பும் கட்டளைச் சட்டத்தின் 3(1)(r) பிரிவில் இச்சட்டதிலும், இதன்கீழ் ஆக்கப்படும் ஒழுங்குவிதிகளிலும் ஏற்பாடு செய்யப்படும் சட்டவிதிகளை நடைமுறைப்படுத்தும் நோக்கத்திற்காக பரிசோதகர்களை நியமித்தலுக்கும், அவர்கள் தமது கடமையை ஆற்றுவதற்கு அவசியமான அதிகாரங்களை வழங்குவதற்குமான ஒழுங்குவிதிகளை ஆக்குவதற்காக அமைச்சர் அதே சட்டத்தின் பிரிவு 2 இன்கீழ் தனது ஒழுங்குவிதிகளை ஆக்குவதற்கான தத்துவத்தைப் பிரயோகிக்க முடியும்.
அத்துடன் 9134 இலக்க 11.06.1943 திகதிய வர்த்தமானியிலும் 6365 இலக்க 22.04.1938 திகதிய வர்த்தமானியிலும் பிரசுரிக்கப்பட்ட பொது ஒழுங்குவிதிகள் எனும் தலைப்பின் கீழான பிரிவு 38 "பரிசோதகர் (Inspector)" என்பதற்கான வரைவிலக்கணத்தைக் குறிப்பிடுகிறது. அதன்படி பரிசோதகர் என்பது சுகாதார சேவைகள் திணைக்களத்தின் "சுகாதார உதவியாளர்கள் (Sanitary Assistants) அல்லது மாநகர சபைகள்/ நகர சபைகளின் சுகாதாரப் பிரிவுக்குப் பொறுப்பான ஏவரேனும் பரிசோதகர் அல்லது உப பரிசோதகரை அல்லது Director of Quarantine Department இனால் நியமிக்கப்பட்ட எவரேனும் பரிசோதகரை குறிப்பதாக அர்த்தம் கொள்ளவேண்டும். Sanitary Assistant என்பது பின்னர் Sanitary Inspector/ Sanitary Board Inspector எனவும் தற்போது Public Health Inspector(PHI) எனவும் பெயர் மாற்றம் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.
அதே ஒழுங்குவிதிகளின் பிரிவு 39 பிரகாரம் தகுதி வாய்ந்த அதிகாரி தனது தற்துணிபின் அடிப்படையில் இச்சட்டத்தின் பணிகளை ஆற்றுவதற்கான பரிசோதகர்களை நியமனம் செய்யவும், இரத்துச் செய்யவும் முடியும்.
இங்கு பரிசோதகர்கள் நியமிக்கப்படாவிடின் அல்லது பரிசோதகர்களுக்கான அதிகாரம் வழங்கப்படாவிடின் சட்டம் அல்லது ஒழுங்குவிதிகளின் அமுலாக்கல் முழுமை பெறாது.
அத்துடன் 1897ம் ஆண்டின் 03ம் இலக்க தனிமைப்படுத்தலும் நோய்த்தடுப்பும் கட்டளைச் சட்டத்தின் கீழ் ஆக்கப்படும் ஒழுங்குவிதிகள் அனைத்தும் அதன் பிரிவு 12 இன் பிரகாரம் வர்த்தமானியில் பிரசுரிக்கப்படல் வேண்டும். அத்தகைய வர்தமானி பிரசுரிக்கப்பட்ட திகதியிலிருந்து அது சட்ட வலுக்கொள்ளும் எனவும் 12ம் பிரிவு குறிப்பிடுகிறது.

Kajenthiran Sathithasan

------ தொடர்ச்சி விரைவில் -----

Tuesday, July 21, 2020

யாழ்ப்பாணத்தில் இப்படி ஒரு இடமா?

யாழ்பாணத்தில் பெரியதொரு மணல் மேடு போன்று காட்சியளிக்கும் இந்த குட்டி தீவு ஒன்றும் இலங்கை கிடையாது!
பார்வைக்கு அச்சொட்டாக இலங்கையை போன்று காட்சியளிக்கும் இது இந்தோநேசியாவின் பரப்பிலுள்ள KENAWA_ISLAND எனும் ஒரு குட்டி தீவாகும்.
சுற்றுலாத்துறையினரின் கவனத்தை இந்த குட்டித்தீவு வெகுவாக ஈர்த்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.












Monday, July 20, 2020

ஏலுமெண்டால் வாங்க பாப்பம்???

ஏலும் எண்டால் வாங்கோவன் பார்ப்பம் !
ஏலும் எண்டால் எங்களை ஒருக்கால் நல்லது கதைக்க சேர்த்துப் பாருங்கோவன் பார்ப்பம்!
நாங்கள் யாரு தெரியும் தானே!! எங்களைப் போல யாராளையும் உங்களை பேக்காட்ட முடியுமே!
நாங்கள் வெளியால அப்பிடி தான் கதைப்பம்!
உள்ளுக்குள்ள எங்களுக்கும் நடுங்குமெல்ல!
நாங்கள் எங்களுக்குள்ள மேடையில பேசேக்குள்ள பகிரங்க விவாதத்துற்கு அழைப்பம்!
அதை நீங்கள் நம்பிறதே!!!
ஹையோ!!! ஹையோ!!!
😀😀😀😀😀😀
மேடேல கதைக்கேக்க ஆர்வக் கோலாறுகள் சிலதுக்காக நாங்கள் அடிக்கிற பம்பல் கதையளையும் நம்பிறியளே!
நாலு பேர் கைதட்டோனும் என்று வாய்க்கு வந்ததை நாங்கள் அடிச்சு விடுறது!
அதைப் பிடிச்சு வைச்சுக் கொண்டு பகிரங்க விவாதம் என்று போஸ்டர் அடிச்சுக் கூப்பிட்டால்…!!!
குப்புன்னு வேர்க்குமெல்ல!!!
😀😀😀😀😀
நாங்கள் போடிற கூட்டங்களை கவனிக்கிறனியலோ???
யார் கேள்வி கேட்கமாட்டாங்களோ அங்க தான் நாங்கள் கூட்டம் போட்டு கத்துவம்!!!
அல்லது
இந்த விளையாட்டுக் கழக பெடியள் கூப்பிட்டா 4 பற்றும் 5 பந்தும் கொண்டு போய் குடுத்து அவங்களை கேள்வி கேட்கவிடாமல் பண்ணிடுவம்!!!
நீங்கள் இப்பிடி பகிரங்க விவாதம் எண்டு கூப்பிட்டால்…!!!
குப்புன்னு வேர்க்குமெல்ல!!!
😀😀😀😀😀
கொள்கையே இல்லாமல் தமிழ் தேசிய கொள்கையை சொல்லிச் சொல்லி பேக்காட்டிக் கொண்டு ஏதோ ஐஞ்சு பத்தை பார்த்துக் கொண்டு இருக்கிறம்!!!
அதில மண்ணள்ளிப் போடிறமாதிரி எங்களை பகிரங்க விவாதத்திற்கு வா எண்டால்….!!!
குப்புன்னு வேர்க்குமெல்ல!!!
😀😀😀😀😀
ஒரே கொள்கையுடைய இரண்டு பேர் சேர்ந்து கதைச்சு ஒரு முடிவுக்கு வரலாம் என்றால் அதுக்கே மணித்தியாலக் கணக்காகும்!!!
கொள்கையே இல்லாமல் சுத்திக்கொண்டு ஒருத்தனை ஒருத்தன் குற்றம் சொல்லிக் கொண்டு தேர்தல் வரைக்கும் பம்மாத்திக் கொண்டு திரியிற எங்களை பகிரங்க விவாதத்திற்கு வா எண்டால்…!!!
குப்புன்னு வேர்க்குமெல்ல!!!
😀😀😀😀😀
ஒருத்தருமே இல்லாத இடத்தில் ஒருத்தன் மட்டும் வந்து நிண்டு கொண்டு,
அவன் செய்யிற அளப்பறை தாங்கவே முடியுதில்லை!!!
அடே !!! உங்களை விலங்குகளின்ர பெயரை சொல்லி கூப்பிடலாம் என்றால் அதுகள் பாவம்!!!
அட மானங்கெட்ட மனித கூட்டமே!!!
தமிழ் தேசியத்தை நேசிக்கும் ஒருவன் இப்போதுள்ள உங்கள் கூத்துக்களை நேசிக்க மாட்டான்!!!
உங்கள் கூத்துக்களால் உடையப்போவது எங்கள் தனித்துவமான வாக்குகள் மட்டுமே!!!
வாக்குகளை சின்னாபின்னமாக்கி இனிவரும் காலங்களில் சிங்களப் பிரதான கட்சிகளை தமிழர் தாயகங்களில் இருந்தும் பாராளுமன்றம் அனுப்பிவைக்கப் போறியள்!!!


VTamil குழுமத்தினால் கொடுக்கப்பட்ட விளக்கம்


மக்கள் மன்றில் ஓரணியாக நிற்க முன்வராதவர்கள்,எவ்வாறு பாராளுமன்றில் தமிழர் தரப்பை ஓரணியாக பிரதிநிதித்துவப்படுத்தப்போகிரார்கள். ????
கட்சி பிரதிநிதிகள் கேட்கிறார்கள் இல்லை,பிரசார கூட்டங்கள் காரணமாக பிரதிநிதிகளை பிரேரிக்க முடியவில்லை - திரு.விக்னேஷ்வரன்
கட்சி வேலைகள்,பிரசார பணி நிமித்தம் கலந்துகொள்ள முடியாதுள்ளது - திரு.கஜேந்திரகுமார் பொன்னம்பலம்.
கஜேந்திர குமார் கலந்து கொண்டால் நானும் வருகிறேன் - திரு.சுமந்திரன்.




இந்தப் பகிரங்க விவாதம் தொடர்பாக முகப்புத்தகங்களில் வாசித்த சில பதிவுகளையும் இணைக்கிறேன்.

கஜேந்திரகுமார் வரமாட்டார் என்பதால் தங்கள் தரப்பில் சுகாஸ் காண்டிபன் வருவதாக க.குமார் அறிவித்தாராம். அப்படி என்றால் தங்கள் தரப்பிலும் சுமந்திரன் வராமல் இரண்டு பிரதிநிதிகளை அனுப்புவதாக சுமந்திரன் சொன்னதால் நிகழ்ச்சி ஒழுங்கமைப்பாளர்கள் நிகழ்ச்சியை ரத்து செய்தார்கள்.
விக்னேஷ்வரன் எந்த பதிலும் வழங்கவில்லை. என்கிறார்கள் ஏற்பாட்டாளர்கள்.
கட்சியின் பொறுப்பு கூறக்கூடியவர்கள் பங்குபற்றுவதன் மூலம் எதிர்கால திட்டங்கள் தொடர்பில் பேசுவது தான் ஏற்பாட்டாளர்களின் நோக்கம். அடுத்த ஐந்தாண்டுகால திட்டத்தை பற்றி பேசுவது.
யாழ்பாணத்தின் அடிப்படை தேவைகள்,பிரச்சனைகள் தொடர்பில் ஆய்வுசெய்து வைத்திருப்பதாகவும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் சொல்கிறார்கள்.
ஆக சில்லறை தனமான விவாதமாக இல்லாமல் ஒரு நல்ல நோக்கத்திற்காக ஒழுங்கு செய்திருக்கிறார்கள் ஏற்பாட்டாளர்கள்.
அதை சில்லறை தனமாக கையாண்டது க.குமாரும் விக்னேஷ்வரனும்.
அதை சில்லறை தனமாக உருட்டுவது சுகாஸ்.
சுகாஸ் உருட்டினதை சில்லறைத்தனமாக உருட்டுவது தொண்டரடிப்பெடியல்.
தனிய தீர்வு இனப்பிரச்சனை என்று மட்டும் கூவிட்டு திரிஞ்சா கோவணமும் போயிரும், மக்களின் இருப்புக்கான விடையங்களையும் சிந்திக்கோனும்.
அதைவிட்டிட்டு செம்மறி கூத்துகள்.
மக்களுக்கான உருப்படியான செயற்திட்டம் இல்லை.


நேரடி விவாதம்- நிகழ மறுக்கும் அதிசயம்!
கட்சி ஆதரவாளர்கள், தொண்டர்களின் கூச்சல்கள் குழப்பங்கள் அற்ற நிலையில், தெளிவான நிகழ்ச்சி நிரலோடும், வரையறைகளோடும் ஒழுங்கமைக்கப்படும் நேரடி அரசியல் விவாத நிகழ்ச்சிகள் தமிழ் அரசியலில் சூழலில் நிகழ்வதே இல்லை. அப்படியான ஆரோக்கியமான விவாதங்கள் தமிழ் அரசியலில், குறிப்பாக தமிழ்த் தேசிய அரசியல் சூழலில் ஆரம்பிக்க வேண்டும் என்கிற எதிர்பார்ப்பு பலரிடமும் இருக்கின்றது. அப்படியொரு விவாத நிகழ்வு இன்று நிகழும் என்று எதிர்பார்த்திருந்தேன். ஆனால், அது நிகழ மறுக்கும் அதிசயமாகவே போயிருக்கின்றது.
தேர்தல் கால நேரடி விவாதங்களில் நெறிப்படுத்தல்கள், வரையறைகளுக்குள் நின்று விவாதிக்கும் அளவுக்கான மனநிலையை எந்தவொரு அரசியல் தலைவரும் வளர்த்துக் கொள்வது சார்ந்து ஆர்வம் கொள்வதில்லை. தங்களுக்கு தோதான களத்தில் நின்று ‘கத்தி ஓய்வது’ குறித்தே அவர்கள் கவனம் செலுத்துகிறார்கள். அதுதான், அவர்கள் அளவில் பாதுகாப்பானது என்றும் கருதுகிறார்கள். அதனை, அவர்களின் ஆளுமை குறைபாடு என்று கொள்ள முடியும்.
‘V தமிழ்’ குழு யாழ்ப்பாணத்தில் இன்று நடத்தவிருந்த, விவாத நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ், தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி ஆகிய கட்சிகளைச் சேர்ந்த முக்கியஸ்தர்களை கலந்து கொள்ளுமாறு அழைத்திருக்கின்றது. கூட்டமைப்பின் சார்பில் எம்.ஏ.சுமந்திரன் அழைக்கப்பட்டிருக்கின்றார். அவர், காங்கிரஸ் சார்பில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், கூட்டணி சார்பில் சி.வி.விக்னேஸ்வரன், சுரேஷ் பிரேமச்சந்திரன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டால், தன்னால் பங்கேற்க முடியும் என்றிருக்கிறார். கஜேந்திரகுமாரும் சுமந்திரன் கலந்து கொண்டால் தானும் கலந்து கொள்வதாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களிடம் உறுதியளித்திருக்கின்றார். விக்னேஸ்வரனோ, கூட்டணியின் ஏனைய முக்கியஸ்தர்களோ விவாதத்தில் கலந்து கொள்வது சார்ந்து ஆரம்பம் முதல் பின்னடித்திருக்கின்றனர். (விக்னேஸ்வரன், கேள்விகளுக்கு நேரடியாக பதிலளிப்பது சார்ந்து தொடர்ச்சியாக பின்னடிப்பவர். அதுதான், கேள்வி- பதில் அறிக்கைகளில் அவர் தங்கியிருப்பதற்கு காரணம். அவரிடம் நேரடி விவாதமொன்றுக்கான அழைப்பு விடுக்கப்படுவது வேண்டாத வேலை. அவர் அதற்கு சரிப்பட்டு வர மாட்டார்.)
ஆக, சுமந்திரனுக்கும் கஜேந்திரகுமாருக்கும் இடையிலான மற்றொரு நேரடி விவாதம் நிகழும் வாய்ப்பு உருவாகியிருக்கின்றது. ஆனால், ஒரு கட்டத்தில் கஜேந்திரகுமாரும் கழன்று கொள்ள நிகழ்வு இரத்தாகியிருக்கின்றது. கஜேந்திரகுமார் தனக்குப் பதிலாக இருவரை பிரேரித்திருக்கின்றார், ஆரம்பத்திலேயே கஜேந்திரகுமார் கலந்து கொண்டால் தானும் கலந்து கொள்வதாக அறிவித்த சுமந்திரன், கஜேந்திரகுமாரும் விலகிக் கொண்ட நிலையில், தானும் இருவரை பிரேரித்திருக்கின்றார். ஆக, இந்த விவாதத்தில் யார் யார் எப்போது, என்ன காரணங்களுக்காக விலகியிருக்கின்றார்கள் என்பதை சரியாக புரிந்து கொள்ளலாம். நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் நிகழ்ச்சி இரத்துத் தொடர்பில் தெளிவுபடுத்தி காணொலியையும் வெளியிட்டிருக்கின்றார்கள்.
சுமந்திரனுக்கும் கஜேந்திரகுமாருக்கும் இடையில் கடந்த பொதுத் தேர்தல் காலங்களில் நேரடி விவாதங்கள் இரண்டு இடம்பெற்றிருக்கின்றன. ஆனால், அவை ஆதரவாளர்கள், தொண்டர்களின் கூச்சல்களினால் சரியான நிகழ்வுகளாக அமைந்திருக்கவில்லை. அத்தோடு, அந்த நிகழ்வுகளில் வரையறுக்கப்பட்ட நிகழ்ச்சி நிரலும் இருக்கவில்லை. ஒருவகையில், குறிவைத்து திட்டமிட்டு தாக்கும் நிகழ்வுகளாகவே அவை முடிந்திருக்கின்றன. அப்படியான நிலையில், இன்றைய நிகழ்வினை ஆரோக்கியமான விவாதங்களை எதிர்பார்த்திருக்கும் தரப்புக்கள் எதிர்பார்ப்பது இயல்பானதே.
ஆனால், நேரடி விவாதமொன்று வெற்றி- தோல்வி என்கிற கட்டத்தினுள் மட்டும் வைத்துப் பார்க்கப்படும் மனநிலையினால், நிகழ முடியாமல் போயிருக்கின்றது. ஆரோக்கியமான விவாதமொன்றுக்கான கடப்பாடுகள், வரையறைகள் சார்ந்து அரசியல் தலைவர்கள் மாத்திரமல்ல, அவர்களின் ஆதரவாளர்களும் தொண்டர்களும் கூட தேடி அறிந்து கொள்ள வேண்டும். அதுதான், அவர்களை அடுத்த கட்டத்துக்கு நகர்த்தும். அதனைச் செய்யாதுவிட்டுவிட்டு, சமூக ஊடகங்களில் உண்மை தெரிந்த பின்னரும் சமாளிப்புக்களைச் செய்வது என்பது, ஒரு வகையிலான இயலாமை. அந்த இயலாமையை அரசியலின் ஒரு கட்டமாக கொண்டு நடக்காதீர்கள். அது உங்களை நிச்சயமாகத் தோற்கடிக்கும். தேறுவதற்கான வாய்ப்புக்களை மறுதலிக்கும். ஏனெனில், மக்கள் எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டேயிருக்கிறார்கள்.

தமிழ் தேசிய முண்ணனி சார்பில் சுகாஸ், காண்டீபன் ஆகிய இருவரும் பங்கு பற்றும் நிலையில் ஏன் கூட்டமைப்பு சார்பில் சுமந்திரன் பங்கு பற்றமுடியவில்லை. கட்டாயம் கஜேந்திரகுமார் தான் வேணும் என்று ஏன் ஆடம் பிடிக்கவேண்டும்?
இதை ஒரு தம்பி கேட்டிருந்தார்.
தம்பி சுகாஸ் பற்றி அனைவருக்கும் தெரியும், மிக சிறந்த தமிழ் தேசிய செயற்பாட்டாளர். ஆனால் வாதாடல் நிகழ்வு என்று வந்துவிட்டால் அது வாக்கு வாதம் அளவுக்கு செல்லும். மூச்சை பிடித்து தம் கட்டி கொண்டு அவர் பேசும் தோரணை அது ஒருவகை பட்டிமன்றம் போன்ற தன்மையை கொண்டுவரும். அது ஒரு இயல்பான அரசியல் கலந்துரையாடல் போன்று நிச்சயம் இருக்காது.
இதை சுமந்திரன் விரும்புவதில்லை. அல்லது ஆள் பட்டிமன்றத்தில் அவ்வளவு கெட்டிக்காரர் இல்லை.
காண்டீபன் அவர்கள் பற்றி சொல்ல தேவையில்லை. அவர் ஒரு பிழைக்கான மன்னிப்பை கூட கவிதையில் சொல்லி கழுத்தறுப்பார் . ஆகவே சுமந்திரன் ஒரு கவிஞர் அல்ல. அதனால் அவரை தவிர்க்க விரும்பி இருக்கலாம்.
எதிரில் யாருடன் வாதாட வேண்டும் என்பதை தீர்மானிக்கும் உரிமை எல்லோருக்கும் உண்டு.
ஆகவே இங்கு கஜேந்திரகுமார் அவர்கள் இன்றைய திருநெல்வேலி கூட்டத்துக்கு காண்டீபனை அனுப்பிவிட்டு அவர் அந்த நிகழ்வுக்கு சென்று இருக்கலாம்.
இது ஒரு தவறு அல்லது திட்டமிட்ட தவறு . அவ்வளவு தான்.


விக்கினேஸ்வரனுக்கு பதில் சொல்லத் தெரியாது ஓகே, கஜேந்திரகுமார் ஏன் வராமல் ஓடினார் என்று கேட்கிறார்கள். எனக்கு அதில் ஒரு ஆச்சரியமும் இல்லை என்றேன்.ஏன்?
நிகழ்வு எதைப்பற்றியது?
-அடுத்த ஐந்து வருடத்தில் தமிழருக்கு என்ன செய்வீர்கள், என்ன ப்ளான் என்பது பற்றியது.
முன்னணியின்(காங்கிரஸின்) கொள்கை என்ன?
-ஒரு நாடு இருதேசம்
அடுத்த 5 வருடங்களில் இந்த தனித் தேசகோஷம் தொடர்பில் என்ன measurable முன்னேற்றம் காட்டமுடியும்?
-ஒன்றுமில்லை
தட்டுத்தவறி ஒரு சீட் வென்றால், அதைவைத்து அரசுடன் எந்த பேரம்பேசல் செய்ய முடியும்?
-ஒன்றுமில்லை.கணக்கே எடுக்காமல் கடந்துபோவார்கள்
கூட்டமைப்பு தொடர்பிலான இவர்களின் குற்றச்சாட்டுகளில் முக்கியமானது என்ன?
-தீர்வு தொடர்பில் எந்த measurable முன்னேற்றமும் செய்யவில்லை என்பது.
அடுத்த 5ஆண்டுகளில் முன்னணி தன் கோஷம் தொடர்பில் அடையக்கூடிய அடைவு என்ன என்று சொல்லமுடியும்?
-தீர்வு தொடர்பில் பல இடங்களில் வலியுறுத்தினோம் என்று சொல்லமுடியுமே தவிர வேற எதுவும் செய்யமுடியாது.
அப்ப இதுக்கும் கூட்டமைப்பின் பதில்களுக்கும் என்ன வித்தியாசம்?
-ஒன்றுமில்லை. கூட்டமைப்பாச்சும் எதோ ஒரு சாத்தியமான யாப்புருவாக்கத்தில் பயணித்தது. முன்னணி பூகோள அரசியல் வகுப்பெடுக்கத்தான் சரி.2009லயே வராத அமெரிக்காவும் இந்தியாவும் இனியுமா வந்து தூக்கிப்பிடிக்கப்போகுது.
அப்போ அடுத்த 5 வருஷங்களில் தீர்வு எடுத்து குடுக்க முடியாது. தீர்வு இல்லாமல் அபிவிருத்தியும் தேவையில்லை என்றார்கள், ஆக அபிவிருத்தியும் இல்லை.அப்போ அடுத்த ஐந்து ஆண்டுகளில் மக்களுக்கு எந்த உறுதிமொழியை கொடுப்பார்கள்?
-ஒன்றுமில்லை. கூட்டமைப்பை குற்றம்சாட்டுவதை தொடர்ந்து செய்வோம் என்று வேண்டுமானால் உறுதிமொழி கொடுக்கலாம்.
அதுக்கு எதுக்கு இவர்கள்?டக்ளஸும் அங்கஜனும் போதுமே?
-ஆமாம்.
கூட்டமைப்பை குறை சொல்வதை விடுத்து, தங்களின் அரசியல் கோஷம் என்ன, அதை எப்படி எப்போ,எந்த சாத்திய வழியில் அடையப்போகிறார்களென்றோ, எதிர்ப்பதை மட்டுமே செய்யாமல் “பெரும்பான்மைத் தமிழ்” மக்களின் எதிர்பார்ப்பை எப்படிப் பூர்த்தி செய்யப்போகிறார்கள் என்றோ,இதுதான் எங்க பிரச்சனை என்று மாற்று சமூகத்தினருடனோ இவர்கள் எப்போதாவது விளக்கிப் பார்த்திருக்கிறீர்களா?
-இல்லை
இப்ப புரியுதா ஏன் வரலைனு? கடந்த வரலாறு பற்றி கதைக்காமலோ, கூட்டமைப்பை குறை சொல்லாமலோ, மக்களுக்கு என்ன செய்வோம், தீர்வை எப்படி எடுப்போம் என்பதுதொடர்பில் சாத்தியமான வழிமுறைகளோ கைவசம் இல்லை. பின்னர் எப்படி எதிர்காலம் தொடர்பில் சடையாத கட் அண்ட் ரைட் பதிலை கொடுக்கமுடியும்? சடைஞ்சு சடைஞ்சு பூகோள அரசியல் பேசலாம்.ஒரு கேள்வி கேட்டால் கேள்வியையே மறக்கடிக்கிறமாதிரி பதில் அலட்டலாம்.மூன்று நிமிஷத்தில் அரசியல் தீர்வுக்கான வழிமுறையைச் சொல்லச்சொன்னால் எப்படிச் சொல்வது? அதுக்கு பதிலா வெடிமுருகேசனை அனுப்பினால் விவாத நடுவில் சுமந்திரனை அடுத்த தேசியத்தலைவர் எண்டு அடிச்சுவிடுவான்..அதை வைச்சு கொஞ்ச அரசியலாச்சும் செய்யலாமே என்று கஜேந்திரகுமார் நினைத்ததில் தப்பில்லையே.!



 

Friday, July 17, 2020

முருகா!!! உனக்கும் கறுப்புக்கும் என்னையா சம்பந்தம்… ???


” தாக்க தாகக் தடையறத் தாக்க
பார்க்க பார்க்க பாவம் பொடிப்பற”

தம்மை படித்தவர்களாகவும், பண்பாளர்களாகவும், நாத்திகவாதிகளாகவும், பகுத்தறிவாளர்களாகவும் காட்டிக் கொள்ளும் பன்னாடை ஒன்று புது விளக்கம் ஒன்றை கூறுகின்றது, 

இப்படியான ஈனங்களும் தமிழ் நாட்டில் இருக்கின்றது. இந்த ஈனங்களுக்கு கொடிபிடிக்க ஒரு கூட்டமும் வேற....

இந்த நாய்க்கு ஈழத்து இளைஞனின் செருப்படிப் பதில்....


நன்றி: உமாகரன் இராசையா! உன்னைப்பற்றிய பல விமர்சனங்கள் இருந்தாலும் இது ரொம்ப சூப்பர்!!!

Thursday, July 9, 2020

மு. மேத்தாவின் கவிதைகளில் இருந்து.....

💗💗💗காதலர் பாதை💗💗💗

💖
கல்யாண மேடையை 
அலங்கரிப்பதற்காகக் 
கனவு கண்ட 
கன்னிப் பூக்கள்
சவப்பெட்டியின் மேனியில்
சரிந்து விழுந்தன !
💖

💞💞💞என் முதற் காதல்💞💞💞

😍
முகவரி
சரியாக எழுதப்படாத
ஒரு கடிதம்
முட்டி மோதி அலைந்து விட்டு
என்னிடமே திரும்பிவிட்டது!
😍

😌😌😌அரலிப்பூ அழுகிறது😟😟😟

💀
பூக்களே நானுமொரு
பூவாய்த்தான் பிறப்பெடுத்தேன்

பூவாகப் பிறந்தாலும்
பொன் விரல்கள் தீண்டலையே!

பொன் விரல்கள் தீண்டலையே - நான்
பூமாலை யாகலையே!
💀



Sunday, May 31, 2020

தாலியின் ஒன்பது இழைத் தத்துவம்...


தாலி என்பது ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே
திருமண பந்தத்தை ஏற்படுத்தும் ஓர் அடையாளம் ஆகும்.
தாலி.
குங்குமம்.
மெட்டி.
அணிந்துள்ள ஒரு பெண் திருமணமானவள் என்பதை வெளிப்படுத்துகிறது.

இந்த தாலி பொன்னால் இருக்க வேண்டியது அல்ல. மகிமை நிறைந்த மஞ்சளால் கூட ஆகியிருக்கலாம்.

இந்துக்களுக்கு மஞ்சள் நிறம் புனிதமான நிறம் என்பதால் அந்த திருமணப் பரிசும் மஞ்சள் நிறத்தில் தரப்பட்டது.
தமிழர் திருமணங்களில் ஆரம்பத்தில் தாலி இருந்ததாக இலக்கியங்களில் குறிப்பிடப்படவில்லை.

சங்க காலத்தின்போது நடந்த திருமணங்களில் புதுமணல் பரப்பி விளக்கு ஏற்றி வயதில் மூத்த பெண்கள் மண பெண்ணை நீராட்டி வாழ்த்தி அவள் விரும்பியவனுடன் அவளை ஒப்படைத்தனர். நாளடைவில் தாலம் என்ற பெயர் தான் தாலியாக மாறியிருக்கிறது.

பதினோராம் நூற்றாண்டில் தான் தாலி என்ற பெயர் உபயோகப்படுத்தப்பட்டது என்கிறது உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்டிருக்கும் தமிழர் திருமணம் என்கிற புத்தகம். மாங்கல்யச் சரடானது ஒன்பது இழைகளைக் கொண்டது.

ஒவ்வொரு இழைகளும் ஒவ்வொரு நற்குணங்களைக் குறிக்கிறது.

திருமணத்தின் போது பெண் கழுத்தில் கட்டுப்படுகிற மாங்கல்ய தாலிக் கயிறானது ஒன்பது நுல் இழைகளைக் கொண்டது.
அந்த ஒன்பது இழைகளுக்கும் ஒவ்வொரு பொருளுண்டு.

1.தெய்வீகக் குணம்.
2.தூய்மைக் குணம்.
3.தொண்டு.
4.தன்னடக்கம்.
5.ஆற்றல்.
6.விவேகம்.
7.உண்மை.
8.உள்ளதை உள்ளபடி
புரிந்து கொள்ளுதல்
9.மேன்மை.

இத்தனைக் குணங்களும் ஒரு பெண்ணிடம் இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் ஒன்பது இழைகள் கொண்ட திருமாங்கல்யச்சரடு அணியப்படுகிறது...

Tnx- Face book

Wednesday, May 27, 2020

சக்கர வியூகத்தின் இரகசியம்


சக்கர வியூகத்தில் மிகப்பெரிய கணிதம் ஒன்று ஒளிந்துள்ளது, அதனை அறிந்தால்தான் அதனை முறியடிக்க முடியும். அதனை அர்ஜுனன் துருபதனுடன் நடந்த போரில் சிறப்பாய் செய்திருப்பார். அதவாது சக்கர வியூகத்தில் மொத்தம் ஏழு அடுக்குகள் இருக்கும். எனவே அதனை உடைக்கும் போது 1/7 என்ற அளவீட்டில் கணக்கிட வேண்டும். இந்த கணக்கின் படி 1/7 = 0.142857142857142857 என்று அளவிடும்போது 142857 என்ற எண் திரும்ப திரும்ப வரும். இதுதான் தந்திரம் ஒவ்வொரு சக்கரமும் உடையும்போது அந்த இடத்திற்கு வேறு வீரர்கள் வந்துவிடுவதால் இந்த சக்கரம் சுழன்றுகொண்டே இருக்கும். ஒவ்வொரு அடுக்கையும் கடக்கும் போது ஒரு எண்ணை அதிகரிக்க வேண்டும், இறுதியாக கடைசி சக்கரத்தில் நுழையும் போது ஏழு மடங்கு ஆற்றலுடன் போர் புரிய வேண்டும், அப்பொழுதான் சக்கர வியூகத்தை உடைக்க இயலும். இந்த 0.142857-ஐ 7 உடன் பெருக்கும்போது தான் இந்த எண் சூழல் உடையும். 0.142857142857142857*2 = 0.2857142285714285714, 0.142857142857142857*3 = 0.42857142857144285714 இப்படிய நீண்டு கொண்டே இருக்கும், இந்த எண்ணை 7-ஆல் பெருக்கும்போது மட்டும்தான் இந்த சூழல் எண் மாறும். 0.142857142857142857*7 = 0.99999999999999 இப்படித்தான் சக்கர வியூகத்தை உடைக்க முடியும். இதனை அறிந்துதான் போரில் துருபதனை அர்ஜுனன் வீழ்த்தியிருப்பார். ஆன்மீகமும், அறிவியலும் இரட்டை குழந்தைகள் போல என்பதை நிரூபிப்பதற்கான உதாரணம்தான் இந்த சக்கர வியூகம்.


உலகின் மிகப்பெரிய போர் மகாபாரதத்தின் குருக்ஷேத்ரா போர். இத்தகைய கடுமையான போர் வரலாற்றில் ஒரு முறை மட்டுமே நடந்தது. மகாபாரதத்தின் குருக்ஷேத்ரா போரிலும் அணு ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டதாக மதிப்பிடப்பட்டுள்ளது. 'சக்ரா' என்றால் 'சக்கரம்' என்றும், 'வரிசை' என்றால் 'உருவாக்கம்' என்றும் பொருள். சக்ரவ்யு என்பது ஒரு சக்கரம் போன்ற சுழலும் வரிசை. குருக்ஷேத்ரா போரின் மிகவும் ஆபத்தான போர் வழிமுறை சக்ரவ்யுஹ் ஆகும். இன்றைய நவீன உலகத்திற்கு கூட சக்ரவ்யு போன்ற ரான் அமைப்பு பற்றி தெரியாது. சக்ரவ்யு அல்லது பத்மவியேவைத் துளைப்பது சாத்தியமில்லை. த்வபரியுகத்தில் ஏழு பேருக்கு மட்டுமே இது தெரியும். பகவான் கிருஷ்ணரைத் தவிர, அர்ஜுனன், பீஷ்மா, திரணாச்சார்யா, கர்ணன், அஸ்வத்தம் மற்றும் பிரதியுமான் ஆகியோருக்கு மட்டுமே அவர்கள் வரிசையைத் துளைக்க முடியும் என்பதை அறிந்திருந்தனர். அபிமன்யுவுக்கு சக்ரவ்யூவுக்குள் நுழைவது மட்டுமே தெரியும்.


சக்ரவ்யூவில் மொத்தம் ஏழு அடுக்குகள் இருந்தன. உட்புற மிக அடுக்கில், மிகவும் துணிச்சலான வீரர்கள் நிறுத்தப்பட்டனர். இந்த அடுக்குகள் வெளிப்புற அடுக்கின் வீரர்களை விட உட்புற அடுக்கின் வீரர்கள் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் சக்திவாய்ந்தவர்களாக இருந்தன. காலாட்படை வீரர்கள் வெளிப்புற அடுக்கில் நிறுத்தப்பட்டனர். உட்புற அடுக்கில் அஸ்ர் எதிரிகளுடன் கூடிய யானைகளின் இராணுவம் இருந்தது. சக்ரவ்யூவின் கலவை ஒரு தவறு போன்றது, அதில் ஒரு முறை எதிரி சிக்கிக்கொண்டால், கன சதுரம் ஒரு வட்டமாக மாறும்.
ஒவ்வொரு அடுக்கின் இராணுவமும் ஒவ்வொரு கணமும் விரிசலில் ஒரு கடிகாரத்தின் முள் போல சுழலும். இதன் காரணமாக, வரிசைக்குள் நுழையும் நபர் உள்ளே சாப்பிட்டுவிட்டு வெளியே செல்லும் வழியை மறந்திருப்பார். மகாபாரதத்தில், குரு திரனாசார்யா வரிசைகளை இயற்றுவார். சக்ரவ்யு சகாப்தத்தின் சிறந்த இராணுவ சதுப்பு நிலங்களாக கருதப்பட்டது. யுதிஷ்டிராவைக் கட்டுப்படுத்த இந்த வரிசை உருவாக்கப்பட்டது. 48 * 128 கிலோமீட்டர் பரப்பளவில் குருக்ஷேத்ரா என்ற இடத்தில் ஒரு போர் நடந்ததாக நம்பப்படுகிறது, இதில் பங்கேற்ற வீரர்களின் எண்ணிக்கை 1.8 மில்லியன்!

சக்ரவ்யு சுழலும் மரண சக்கரம் என்றும் அழைக்கப்பட்டார். ஏனெனில் ஒரு முறை இந்த பார்வையாளருக்குள் சென்ற ஒருவர் ஒருபோதும் வெளியே வர முடியாது. இது பூமி போன்ற அதன் ஆகாசாவில் சுழலும், அதே போல் ஒவ்வொரு அடுக்கையும் சுற்றி வருகிறது. இந்த காரணத்திற்காக, வெளியேறும் வாயில் எல்லா நேரத்திலும் வேறு திசையில் திரும்பப் பயன்படுகிறது, இது எதிரியைக் குழப்பியது. ஆச்சரியமான மற்றும் கற்பனை செய்ய முடியாத போர் எந்திரம் சக்ரவ்யு. இன்றைய நவீன உலகத்தால் கூட இதுபோன்ற சிக்கலான மற்றும் அசாதாரணமான போர் முறையை போரில் பின்பற்ற முடியாது. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சக்ரவ்யு போன்ற கொடிய போர் உத்திகளை எத்தனை புத்திசாலிகள் கடைப்பிடித்திருக்க வேண்டும் என்று சற்று யோசித்துப் பாருங்கள்.

சக்ரவ்யு ஒரு இடியுடன் கூடிய மழை போல் இருந்தது, அதன் பாதையில் வரும் ஹராஸ் சித்ராவை வைக்கோல் போல அழித்தது. இந்த வரிசையை இடைமறிக்க தகவல் ஏழு பேருக்கு மட்டுமே இருந்தது. அபிமன்யு ஃபாலன்க்ஸில் நுழைவதை அறிந்திருந்தார், ஆனால் வெளியேறத் தெரியவில்லை. இந்த காரணத்திற்காக, க aura ரவர்கள் அபிமன்யுவை வஞ்சகத்தால் கொன்றனர். சக்ரவ்யூவின் உருவாக்கம் எதிரி இராணுவத்தை உளவியல் ரீதியாகவும் மன ரீதியாகவும் இழிவுபடுத்தியதாக நம்பப்படுகிறது, ஆயிரக்கணக்கான எதிரி வீரர்கள் ஒரு நொடியில் இறந்துவிடுவார்கள். கிருஷ்ணர், அர்ஜுனன், பீஷ்மா, திராஞ்சார்யா, கர்ணன், அஸ்வத்தம் மற்றும் பிரதியும்னா ஆகியோரைத் தவிர, சக்ரவ்யுவிலிருந்து வெளியேறும் உத்தி யாருக்கும் கிடைக்கவில்லை.

இசை அல்லது சங்கு ஓடு ஒலியின் படி, சக்ரவ்யூவின் வீரர்கள் தங்கள் நிலையை மாற்ற முடியும் என்பதை அறிந்து நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள். எந்த தளபதியோ அல்லது சிப்பாயோ விருப்பப்படி தனது நிலையை மாற்ற முடியாது. ஆச்சரியமாக நினைத்துப் பார்க்க முடியாதது. பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் ரன் நிதியை இவ்வளவு விஞ்ஞான ரீதியாக ஒழுங்குபடுத்துவது பொதுவான விஷயமல்ல. மகாபாரதப் போரில் மொத்தம் மூன்று முறை சக்ரவ்யு உருவாக்கப்பட்டது, அவற்றில் ஒன்று அபிமன்யுவின் மரணம். அர்ஜுனன் மட்டுமே கிருஷ்ணரின் அருளால் சக்ரவ்யூவைத் துளைத்து ஜெயத்ரத்தை கொன்றான். பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் அற்புதமான ஆர்ப்பாட்டம் காணப்பட்ட அந்த நாட்டில் நாங்கள் வசிப்பவர்கள் என்பதில் நாம் பெருமைப்பட வேண்டும். சந்தேகத்திற்கு இடமின்றி சக்ரவ்யு ஒரு பேய் அல்லது எதிர்கால போர் நுட்பம் அல்ல. கடந்த காலத்தில் யாரும் பார்த்ததில்லை, எதிர்காலத்தில் யாரும் பார்க்க மாட்டார்கள்.
மத்திய பிரதேசத்தின் 1 இடத்திலும், கர்நாடகாவில் சிவமந்திர் என்ற இடத்திலும் சக்ரவ்யு உள்ளது, இது இமாச்சல பிரதேசத்தில் பதினாறு சீங்கி என்ற இடத்திலும் பொறிக்கப்பட்டுள்ளது.



Tnx: Via Fb Siva Prakash

Saturday, December 21, 2013

ஒரு பெண்ணின் டைரியிலிருந்து...

10 வயதில் : நானும் அவனும் வீட்டுப்பாடம் படித்துக்கொண்டிருந்தபோது அவன் வேண்டுமென்றே என் கைகளைத் தொட்டுப் பேனா வாங்கும்போது எனக்கு ஏற்பட்ட உணர்வுதான் காதல் என்பதோ? ஒரு நிமிடம் பரவசத்தில் உடல் சிலிர்க்க, அதை மறைத்துக்கொள்ளப் பெரும் பிரயத்தனப்பட்டேன். அப்போது என் கண்களில் நான் உணர்ந்த்துதான் ஒருவேளை சந்தோஷக் கண்ணீராக இருக்குமோ?

15 வயதில் :
நானும் அவனும் தனியாக இருந்த ஒரு சமயத்தில் கொஞ்சம் எல்லை மீறிப் பிடிபட்டுக்கொண்டோம். சற்றும் தயங்காமல் அவன் பழியைத் தன்மேல் போட்டுக்கொண்டு மரண அடி விழுந்தபோதும் மற்றவர்களின் முன்னால் என்னை ஏறெடுத்தும் பார்க்கவில்லை. அவன் ரத்தம் பார்த்து என் விழிகளில் கண்ணீர் ரத்தமாக வழிந்தது.

18 வயதில் :
பள்ளிப் பிரிவுபச்சார விழா முடிந்ததும் மனம் முழுதும் இறுக்கமும் தவிப்புமாக நான் அவனிடம் குட்பை சொல்ல முயற்சித்தபோது அவன் என்னை இறுக அணைத்து ‘என்னை மறந்து விடுவாயா?’ என்று கலங்கிய கண்களுடன் கேட்டான். என் கண்கள் ஏற்கனவே கண்ணீர் சாகரத்தில் நனைந்திருந்தன.

21 வயதில் :
நானும் அவனும் கல்லூரிக்கு மட்டம் போட்டுவிட்டு நீண்ட பயணத்துடன் கூடிய டேட்டிங் செய்தோம். எத்தனையோ வாய்ப்புக்கள் இருந்தும், ஏன் நானே ஒருவகையில் தயாராக இருந்தும் எண்ணற்ற முறை என்னை முத்தமிட்டிருந்த அவன் அன்று ஏனோ என்னைத் தொடக்கூட இல்லை. சாதகமான சூழ் நிலையில் கூடச் சுயக் கட்டுப்பாடுடன் நடந்துகொள்ளும் அவனைப் புரிந்து கொண்ட என் கண்கள் பெருமிதத்தில் வெளியிட்ட கண்ணீரை அவனுக்குத் தெரியாமல் துடைத்துக் கொண்டேன்.

26 வயதில் :
அந்த நாள் வந்தே விட்டது. கையில் சிவப்பு ரோஜாவுடன் முழந்தாளிட்டு அவன் என்னை ப்ரபோஸ் செய்தான். அவனை அவனே முட்டாளாக்கிக் கொண்டதைப்போல அப்படியொரு அறியாமையான வேண்டுதல். அப்போது சொன்னான்: “நான் உன்னை விரும்புகிறேனென்று நீயும் அறிந்திருப்பாய்”. உன்னதப் புன்னகை புத்த என் இதழ்களின் சிருங்காரத்தை உணரவில்லை அப்போதும் கண்களில் வழிந்த அதே சந்தோஷக் கண்ணீர்.

35 வயதில் :
நான் களைப்பாக இருப்பதைப் பார்த்தால் எனக்குக் காஃபி போட்டுக்கொடுத்துத் தூங்க வைத்துவிட்டு அவர் வீட்டுவேலைகளை முழுமையாகச் செய்து முடிப்பார். கடைசியில் அவர் என்னருகில் படுத்துக்கொள்ளும்போது நான் விழித்திருப்பதை அறியாமல் நெற்றியில் முத்தமிட்டுக் ‘குட் நைட்’ என்று தனக்குத்தானே சொல்லிக்கொள்வார். என் மூடிய விழிகளுக்குள் நன்றியின் கண்ணீர் தளும்பும்.

50 வயதில் :
சிக்கலான சமயங்களில் அவர் ஆஃபீஸ் கவலையில் அல்லது உடல் நிலை சரியில்லாமல் இருந்தாலும் என்னைச் சிரிக்க வைப்பதற்காக ஜோக்கடித்து என் சிரிப்பை ரசிப்பார். ஆனால்,பாவம் அப்போதும் என் ஆனந்தக் கண்ணீரை அவர் உணர முடியாமல் துடைத்துக் கொள்வேன். அவரும் சிரித்துக்கொண்டிருப்பார்.

60 வயதில் :
தனது கடைசி மூச்சின் சுவாசத்தின்போது அவர் சொன்னார் : “... எனக்கு எல்லையில்லாத காதலைக் கொடுத்தாய். என் ஆண்மையைப் பெருமிதத்துடன் வாழ் நாள் முழுக்க உணரச் செய்தாய். ஒரு காதலின் பின்னால் எனக்கு இவ்வளவு உன்னதமான வாழ்வு கிடைக்குமென்று நான் எதிர்பார்த்திருக்கவில்லை. நன்றி...”

என் கைகளைப் பற்றியிருந்த அவரின் கரங்கள் இறுதியாகத் துவண்டுவிட்டன. என் விழிகளில் நிரந்தரக் கண்ணீர்த்துளிகளைப் பரிசளித்துவிட்டு எப்போதும் எங்கேயும் என்னைக் கூடவே அழைத்துச்செல்லும் அவர் இப்போது முதல்முறையாக என்னை விட்டுவிட்டுச் சென்றார்.
இந்தமுறை நான் கண்ணீரைத் துடைக்கவில்லை.