Thursday, June 14, 2012

A/L செல்ல இருக்கும் மாணவர்களுக்காக ஒரு பதிவு....


நண்பர்களே !!!

இன்னும் குறைந்தது 2 மாதங்களே A/L பரீட்சைக்கு உள்ள நிலையில் தங்களை தயார்படுத்திக்கொண்டிருக்கும் எனது நண்பர்களே... என்னுடைய சொந்த அனுபவங்களையும் பார்த்த அனுபங்களையும் கொண்டு இந்த பதிவினை எழுதுகின்றேன்.

இந்தப் பதிவு நன்கு படித்தவனுக்கும் அதாவது எந்த கேள்வி வந்தாலும் என்னால் பதில் கொடுக்க முடியும் என்பவனுக்கும் எதுவுமே என்னால் இம் முறை செய்ய இயலாது, அடுத்த முறை பார்த்துக்கொள்ளலாம் என்பவனுக்கும் எழுதப்படவில்லை.... 

இது இரண்டுக்கும் நடுவில் நின்று  அவஸ்தைப்படும் நண்பர்களுக்காக......

இப்படிப்பட்டவர்களுக்கு முதலில் எழும் சந்தேகம் என்னால் இதை செய்து முடிக்க முடியுமா??? மற்றவங்க எப்பிடி செய்றாங்க என்னால இப்பிடி எல்லாம் செய்ய முடியாது. எங்களை நாங்களே குறைவாக எடைபோட்டுக்கொள்வது. முதல்ல மற்றவங்களோட உங்களை எடை போட்டுக்கொள்றத நிறுத்துங்க. எல்லோருக்கும் ஒரு capacity இருக்கும், இதுக்கு ஏற்றது போல நாங்க எங்களால எவளவு best கொடுக்க முடியுமோ, அவளவு கொடுத்தா போதும். 

எனக்கு எங்க அப்பா சொல்லுவார்... உன்னால முடிஞ்ச அளவுக்கு try பன்னு அதுக்கு மேலயும் முடியாட்டி என்ன செய்ய முடியும். ஒரு இல்லக்கினை அடையனும் என்றால் அதுக்கு பின்னால ஓடு அதுவும் முடியலயா பறந்து போயாவது அந்த இலக்கினை அடைஞ்சிடு.... எந்த சந்தர்ப்பத்திலயும் சோர்ந்து போயிடாதே.!!! உன்னில உனக்கு நம்பிக்கை இருந்தா மற்றவங்கள பார்த்து நீ பயப்படத்தேவையில்லை.  நானும் அதைத்தான் சொல்றேன்...உங்களால் முடிஞ்ச மட்டும் try பன்னுங்க. “ முயற்சி திருவினையாக்கும்”. நீங்க செய்து பார்க்கிற past paper bookல கூட இருக்கு." work hard victory shall follow "  . maximum உங்கள் முயற்சில தான் உங்க வெற்றி தங்கியிருக்கு.

இரெண்டும்கெட்டான் நிலையில உள்ளவங்களுக்கு ..... 

இன்னும் 2 மாதம் தான் இருக்கிறபடியா நீங்க pass பண்றளவுக்கு கட்டாயம்  படிச்சுக்கொடுத்திருப்பாங்க. ஆக நீங்க இனி புதுசா ஒரு பாடத்தை தொடங்கிறத நிப்பாட்டுங்க. உங்களால அதை படிச்சு முடிக்க முடியும் என்றால் படியுங்க. அல்லது தொடங்காதீங்க. நீங்க இவளவு நாளும் படிச்சதில இருக்கிற past paper கேள்விகளை செய்யுங்க. ஒன்னுக்கு இரண்டு தரம் செய்து பார்த்தாலும் தப்பில்லை. maximum past paper செய்து பாருங்க. இந்த நேரத்தில தான் எல்லோரும் தங்கள் வித்துவத்தைக் காட்ட எல்லாரும் paper அடிச்சு விடுவாங்க... அந்த school paper இந்த school paper என்று சாகடிப்பானுங்க. நீங்க எதையும் செய்வீங்க என்றால் அந்த paper செய்யுங்க இல்லாட்டால் அந்த paper செய்யாதீங்க. past paper போதும் நீங்க exam pass பண்றதுக்கு.

இயன்றளவு ஒரிடமும் ஓடித்திரியாமல் உங்களால எவளவு நேரம் முயற்சி எடுத்து படிக்க முடியுமோ அந்த அவளவுக்கு உங்களால் வெற்றி பெறமுடியும். 
எனக்கு தெரிஞ்ச நண்பன்(university of peradeniya) ஒருத்தன், அப்போ எங்க நாட்டில சண்டை நடந்து கொண்டிருந்த நேரம்.. வன்னில இருந்தவன்.. யாழ்பாணத்தில ஓடி ஓடி tuition போறமாதிரி அவனுக்கு வசதி எல்லாம் இல்லை. அவனுக்கு இருந்த ஒரே ஒரு வசதி maths, physics, chemistry books மட்டும் தான்.. அந்த புத்தகங்களை தன்னுடைய சொந்த முயற்சில படிச்சு இப்போ peradeniya university ல 3 ஆம் வருடம் படிக்கிறான். இப்பியான வங்கள முன்னுதாரணமா வைச்சு நாங்களும் முன்னேறலாம். அவனுக்கு அவனில இருந்த அளவுகடந்த தன்னம்பிக்கை முன்னேற்றிவைச்சுது. அது போல உங்களில உங்களுக்கு எப்போ நம்பிக்கை வருதோ... நீங்களும் ஜெயிக்கலாம். O/L  நல்லா செய்தவன் ஒன்னுமே செய்ய முடியாமல் இருக்கிறதும், O/L பெரிசா செய்யாதவன் A/L வந்த பிறகு நல்லா செய்றதும் என் கண்ணால் கண்ட உண்மை. எல்லாம் எங்கள் முயற்சில தங்கியிருக்கு...

இந்த நேரம் தான் ரொம்ப நித்திரைவரும்... படுத்திருக்க நல்லா இருக்கென்று படுத்திருந்தோமோ !!! எங்களோட எதிர்காலமும் அதோடபடுத்திடும்.. ஞாபகம் இருக்கட்டும். நீ தூக்கத்தில் இருந்து எழும் போது இன்னும் ஒரு 10 நிமிடம் தூங்கிவிட்டு எழும்பலாம் என்று எப்பொழுது சிந்திக்கத்தொடங்குகிறாயோ.. அப்பொழுதே உன்னுடை முயற்சிகள் அனைத்தும் பின்நோக்கி செல்ல ஆரம்பித்துவிடுகிறதென்று ஒரு பெரியவர் சொல்லியிருந்தார்.. உன்னுடைய முதல் எதிரி தூக்கம். ஆனால் அதுக்காக தூங்காமல் படிக்கிறவன் எல்லோரும் தன்னுடைய இலக்கினை அடைந்ததாகவும் சரித்திரம் இல்லை. 

படிக்க உனக்கு எப்போ  பிடிக்குதோ அந்த நேரம் படி. எங்கப்பா சொல்லுவங்க  “தூக்கம் வரும் போது படு. தூக்கத்தோட இருந்தியென்றால் இவளவு நேரம் இருந்த நான் என்று சொல்லலாமே தவிர மூளைக்கு ஏறினது பூச்சியமாத்தான் இருக்கும். படிக்கும் போது ரசிச்சுப் படி. எப்ப படிச்சாலும் எல்லாம் விளங்கும்”. என்னதான் நல்ல விடயமா இருந்தாலும் அதில் ஒரு ஈடுபாடிருந்தா தான் அதில முழுகவனமும் செலுத்த முடியும். படிப்பும் அது மாதிரி தான். முதல்லயே கஸ்ரம் இந்த கேள்வி என்னால் செய்ய முடியாது என்று நினைச்சா எப்பிடி easy யான் கேள்வியாக இருந்தாலும் கடைசி வந்தாலும் செய்யேலாது. அதே கேள்வியை சில நேரம் அடுத்த நாள் பார்த்தா ரொம்ப சுலபமாக இருக்கும்.. அப்பதான் கவலைப்படுவோம்.. தெரியுமோ தெரியாதோ.. முயற்சி செய்து பாருங்க. முடியலயா??? மனசில இருக்கிற போட்டி பொறாமையை விட்டிட்டு உங்க friends கிட்ட கேளுங்க ... அதுவும் முடியாம போனா உங்க teachers கிட்ட கேளுங்க.. ஆனா நீங்க அந்த கேள்விய செய்து பார்த்திட்டு கேட்டாதான் அவங்க சொல்றது விளங்கும். இல்லாட்டால் ஏதோ அங்க விசரில அலம்பிற மாதிரி இருக்கும்.

உங்களுக்கு தெரியாதது ஏதாவது இருந்தா யாரிட்டயாவது கேட்டுப்படியுங்க. தெரியாததை கேட்க வெட்கப்பட தேவையில்ல. அது போல உங்களுக்கு தெரிஞ்சா சொல்லிக்கொடுங்க. இது தான் படிக்கிறதுக்கான வழிமுறை. சில பேரோட கதைச்சதில அவங்க சொன்னது .. 

அண்ணா..!!!

நான் இந்த முறை exam எழுதல்ல அடுத்த முறை எழுத்தப்போறேன்.. இன்னும் கொஞ்சபேர் சொன்னது 2 ஆம் முறை பார்ப்போம்.. இப்போ ஏதோ எழுதுவம் என்று தான் எழுதப்போறேன்.!!! இது எவளவு முட்டாள் தனமான கதை.. அந்த துன்பத்தை அனுபவிச்சு பார்த்தால் தான் விளங்கும். அனுபவிச்சபடியால் தான் சொல்றேன்.. இப்பிடி ஒரு எண்ணம் இருந்தா அந்த எண்ணத்தை இன்றோட விட்டிட்டு படியுங்க. எதுவும் அந்தந்த பருவத்தில செய்து முடிச்சிடனும்.. பிறகு கஸ்ரம் தான் மிஞ்சும். நான் சொல்றது ஜோக்கா இருக்கும். சிலருக்கு அனுபவப்பட்டால் தான் விளங்கும். அனுபவத்தினைப் போல நல்ல ஒரு ஆசான் எதுவும் இல்லை. அதனால தான் சொல்றேன். அடுத்தமுறை பார்ப்போம் என்ற கதையை விட்டிட்டு படியுங்க. pass பண்றதுக்கு இந்த 2 மாதமும் போதும். முயற்சி எடுத்தீங்க என்றால்.

உனக்கென்று easyயாக செய்யக்கூடிய கேள்விகள் இருக்கும். exam செய்யும் போது அந்த கேள்விகளை எடுத்து செய். அதுவே மற்ற கேள்விகளை பயமில்லாமல் செய்றதுக்கு ஒரு உந்துசக்தியாக இருக்கும். கேள்வி செய்ய முடியாதென்று ஒன்றையும் விட்டு போகாதே. உனக்கு தெரிஞ்சத எழுது. நீ சரியா எழுதிற எல்லாத்துக்கும் உனக்கு marks இருக்கு. “ சிறு துளி தான் பெரு வெள்ளம்”. ஞாபகம் இருக்கட்டும். 

எனக்கு தெரிஞ்ச.. இந்தப் பதிவு எழுதும் போது ஞாபகம் வந்த அனைத்தும் எழுதி இருக்கிறேன். இதைவிட வேறு ஏதாவதும் சொல்ல வேண்டியிருக்கலாம். அப்பிடி ஏதாவது இருந்தால் கீழுள்ள comment  box இல் சேர்த்துக்கொள்ளுங்கள். 

இந்தப் பதிவினைப் பார்த்து 2 பேர் தம் முயற்சியால் முன்னேறினாலே சந்தோசம்.

 “தன் நம்பிக்கை உள்ளவன் இத் தரணியில் சறுக்கியதாக சரித்திரம் இல்லை”


இந்த பதிவினை இயன்றளவு share பண்ணிக்கொள்ளுங்கள். பிழைகள் ஏதும் இருப்பினும் சுட்டிக்காட்டுங்கள்.

நன்றியுடன்....
இ.சுகானன்.