Wednesday, December 19, 2012

நட்பா....? உறவா...?


உணவருந்த காகமானேன்
உணவருந்தி நாயானேன்
காகம் போல் ஒற்றுமையும் 
நாயை போல் நன்றியும் 
நட்பதில் அல்லால் 
பெற்றுவிட்டால் சொல்லிவிடு
                                                               - ரூபன்
காலத்தின் கட்டாயத்தில் இலைமறை காய்கள் ஆக்கப்பட்டவர்கள். ஒருவன் உயர்ந்தால் மட்டும் அனைப்பதற்கெண்டு ஒரு கூட்டம் உண்டு உறவுகளாம். உயர்ந்தாலும் தாழ்ந்தாலும் தன்நிலை மறவாது ஒரு சமூகம் இருக்கும் “நட்பு” .

இது ஒருவனுடைய எல்லாப்பரிமாண வளர்ச்சியிலும் செல்வாக்கு செலுத்தினாலும் ஒரு தனிமனிதன் குடும்பஸ்தன் ஆகும் வரைக்குமே அதிகளவு ஆதிக்கம் செலுத்துகின்றது. அதாவது ஒருவன் நல்ல நிலையினை அடையும் அடையும் வரையிலேயே செல்வாக்கு செலுத்துகின்றது. அதன் பின்பு ஒவ்வொருவனுடைய வாழ்க்கையிலும் உறவினர் என்னும் மாயை மேகம் சேர்ந்து கொள்கிறது. ஒருவரின் வளர்ச்சிக்கு காரணமான நண்பர் கூட்டம் ஓரங்கட்டப்படுகிறது.

               “ எந்தக் குழந்தையும் நல்ல குழந்தை தான் 
                      மண்ணில் பிறக்கையிலே -அது
                 நல்லவனாவதும் தீயவனாவதும் 
                       அன்னை வளர்ப்பதிலே”
எனக்கு இந்த வரிகளில் உடன்பாடில்லை. ஏனெனில் நடத்தைகள் மாறப்படுவது அல்லது மாற்றப்படுவது  அவு ஜௌவப்புவத்ில். இந்த ிலையில் அவன் உறுகள் மத்ியில் இருப்பைவிடண்பர்கள் மத்ியில் இருப்புவே அிம். ஆக ஒருவன் நல்லன் ஆவீயன் ஆவும் அவுடைய ேர்க்கையிலேயே செல்வாக்கு செலத்ுகிறு. 

ஒருவன் நாசமாக போனால் நண்பர்களை வறுத்தெடுக்கு உலகம் அதே ஒருவன் நல்லநிலையில் இருக்கும் போது நட்புவட்டத்தை சுட்டிக்காட்ட மறந்துவிடுகிறது. இந்த நிலையில் அவன் உறவுகளைப் புகழ்கிறது. எந்தவிதத்தில் இது நியாயம் ???

அண்மையில் பங்குபற்றிய ஒரு பட்டிமன்றத்தில் இதே தலைப்பு முன்வைக்கப்பட்டது. அதில் உறவுகள் அணிக்கே வெற்றித்தீர்ப்பு வழங்க்கப்பட்டது. வெட்டி வாதிடும் தன்மை நண்பர் அணிக்கு இருக்கவில்லை. ஆதல்லால் வந்த நிலை.அதுவே என்னை இந்தப் பதிவினை எழுதத் தூண்டியது.

அவ்விடத்தில் வாதாட நான் இருந்திருந்தால் கேட்டிருப்பேன் பல கேள்விகளை........

அங்கு முன்வைக்கப்பட்ட கருத்து “ என்ன தான் நண்பன் என்றாலும் அவனை மச்சான் எண்டு தானே கூப்பிடுறீங்க..இதில இருந்து விளங்கலயா உறவுதான் சிறந்ததெண்டு.... இவ் விவாதத்திற்கு பலத்த கரகோசம்..இது தேவையில்லை..”
  
நண்பன் என்பவன் “ நான் ஆனவன்”.. இப்படி இருக்கும் போது மச்சான் என்று கூப்பிடுவது உறவுக்கான ஏற்பாடல்ல.. அப்பிடி கூப்பிடிறாங்க எண்டதுக்காக அவன் அப்பா, அம்மா .. மாமா, மாமி ஆகிட முடியுமா??? இவை விதண்டாவாதம். கூப்பிடுவதை வைத்து உறவுதான் சிறந்ததல்ல. 

புராணங்களிலும் சரி இதிகாசங்களிலும் சரி நண்பனால் உயர்ந்தவனை சொல்லியிருக்கிறார்களே தவிர தாழ்ந்தவன் என்று சொன்னவர்கள் குறைவு. 

உறவுகள் தன்னுயிர் காக்க ஓடிப்போயின. ஆனால் நட்பு தன்னுயிரையே மாய்த்தது. ராமாயணம் , மகாபாரதத்தில் கண்ட உண்மை. நண்பன் உயிர் காத்தான் கண்ணன். நண்பனுக்காக உறவையே எதிர்த்தான் கர்ணன். வளர்த்த அண்ணை விட்டு ஓடினான் விபீசனன். ஊராரின் சந்தேகத்திற்கு தன் மனைவியையே காட்டில் விட்டான் இராமன்.பச்சிளம் பாலகனை ஆற்றில் விட்டாள் குந்தி...இப்படி புராணங்களில் கூறப்பட்டுள்ளது.
 
தன் காமவேட்க்கையை தீர்த்துக்கொள்ள பெற்ற பிள்ளையையே காமுறும் தந்தை.. சகோதரிகளைக் காமுறும் சகோதரர்கள். உறவினர் வீட்டில் பாதுகாப்பிற்கு விடப்படும் பிள்ளைகளை பாலியல் ரீதியாக துன்புறுத்துபவர்கள். இப்படியான கீழ்த்தரமான வக்கிர புத்திகளைக் கொண்டவர்களைப் பற்றி பத்திரிகைகளில் படித்திருக்கிறோம். இப்படியான துர்நடத்தைகளை நண்பர்களிடம் காண முடியாது.

பெற்ற பிள்ளைகளை வேலைக்கு அனுப்பும் பெற்றோர்களையும் பாத்திருக்கிறோம். அதேவேளை நண்பர்களை தம் செலவில் படிக்க வைக்கும் நண்பர்களையும் கண்டிருக்கிறோம். பெயருக்காக உதவி செய்பவர்கள் உறவினவர்கள். செய்த உதவிகளை மேடை போட்டுக்காட்டுபவர்கள். அதற்கான சந்தர்ப்பத்தை எதிர்பார்த்துக் கொண்டிருப்பவர்கள். ஒருவனை உயர்ந்த இடத்தில் ஏற்றிவைத்து அழகு பார்ப்பது நட்பு மட்டுமே..(இங்கு ஒன்று சொல்ல ஆசைப்படுகிறேன் அம்மா என்ற உறவை இதில் இணைப்பது அழகல்ல. அது எல்லைகள் கடந்தது. எதிர்பார்ப்பு அற்றது. தன்நலன் கருதாதது. என்னைப் பொறுத்தவரை அம்மா என்ற தன்னிகரற்ற தெய்வத்தை விவாதங்களில் சேர்த்துக்கொள்வது ஏற்புடையது அல்ல என்றே கருதுகிறேன்.)

பச்சோந்தி உலகில் போலி மனிதர் ராஜாங்கம்
செத்துப்போன மனச்சாட்சியுடன் சிரித்து திரியும் மனிதர்கள்
சில்லறை எண்ணங்களுடன் சிறிய வட்டத்துள்
சிம்மாச இருப்பிற்காய் வீணீர் வடிக்கும் கூட்டம் நடுவே 
வெறுப்புக்களை சகஜமாக்கி
பிரிவுகளை தொடர்கதையாக்கலாம?
பதில் தெரியாத வினாவுடன் - என்றும்
பதைபதைக்கும் ஒரு உறவு நட்பு.
                                                                      - ரூபன்
  

மேல்மட்டத்தில் இருப்பவனையே உற்று நோக்கிக்கொண்டிருக்கும் உறவு. எப்போதும் தாழ்வாக இருப்பதையே விரும்பும் நட்பு. காரணம் அதற்கு தான் தெரியும் உறுதி என்பது கீழே தான் அதிகம் என்று. 
                                           தாழும் போது விட்டுச்சென்ற உறவு
எழும்போது எட்டிப்பிடிக்கிறதே
விழுப்போது கைகொடுத்த உன்னை ஒதுக்கிவிட்டு .

                                                           “ உணர்ந்தவர்களால் மட்டுமே உணரமுடியும்”




இப்பதிவு பிடித்திருந்தால் பகிர்ந்து கொள்ளுங்கள். விமர்சனங்களை கீழேயுள்ள இடுக்கைகளில் இட்டுக் கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களும் வரவேற்க்கப்படுகிறது.
- இ.சுகானன்