Saturday, July 9, 2011

முல்லாவின் கதைகள் (நீதிக் கதைகள்)

Mulla Nasruddin 

முல்லா நஸ்ருத்தீன் என்பது அவருடைய முழுபெயர். இதில் முல்லா என்பது அறிஞர் - கல்விமான் என்பதைக் குறிக்கும் சிறப்பு அடைமொழியாகும். இவர் துருக்கி நாட்டைச் சேர்ந்த ஒரு முஸ்லீம் ஆவார். துருக்கியிலுள்ள எஸ்கி ஷஹர் என்பது அவருடைய பிறந்த ஊர் எனக் கூறப்படுகின்றது. அந்த ஊரில் முல்லாவின் பிறந்தநாளை ஒவ்வொரு ஆண்டும் மக்கள் கோலாகலமாகக் கொண்டாடுகின்றனர்.

முல்லா நஸ்ருத்தீன் சிறந்த கவிஞர், சிறந்த நகைச்சுவையாகக் கவிதை எழுதுவதிலும் பேசுவதிலும் வல்லவர் ஆவார். இவருடைய இந்த புகழுக்கு அவர் எழுதிய கதைகள் சான்றாகும். இவருடைய கதைகள்யாவும் அவருடைய வாழ்க்கையில் நடந்தவற்றை ஒட்டியதாக இருந்தது. 
                                                                                        (முல்லாவின் கதைகள் தொடரும்.......)

முகம் தெரியாத அவளுக்காக...




***
இருண்ட இரவுகளில் உன் 
விழியின் ஒளியையே
விளக்காகக் கொண்டு
நான் எழுதும்
இந்தக் கவிதைகளை
பகலின் வெளிச்சத்தில்
படித்துப் பார்ப்பவர்களால்
புரிந்து கொள்ள முடியாது.
***
பேசக் கூடாதா?
என்னதான்
மெளனம்
மொழிகளிலேயே சிறந்த
மொழியென்றாலும்
இன்னொரு மொழியைத்
தெரிந்து வைத்துக் கொள்வதில்
என்ன குற்றம்?
பேசு!
***
ஒரு மூங்கிற் காட்டையே
அழித்து
புல்லாங்குழல் செய்தேன்
ஊதும்போதுதான்
அது
ஊமையென்று தெரிந்தது
உன்னைப் போல்!
***
என் வீதியில்
எல்லா வாகனங்களும்
வருகின்றன-ஆனால்
எனக்கு மட்டும் 
இடம் இல்லை
என்கிறார்கள்
***
எத்தனை தேசங்கள்
சுற்றி வந்தாலும்
என் கால்கள்
உன் தெருவிற்கே
வந்து சேர்கின்றன
அவை அறிந்தது
உன் தெரு மட்டும் தான்
***
நிலவைப் பார்வையிடும்
நட்சத்திரங்களைப் போல
அணைந்தணைந்து எரியும் என்
ஆசைகள் உன்னைப்
பார்வையிடுகின்றன.
***
எத்தனை விருது கிடைத்தாலும்
இதயம்
நிறைவுபெற மறுக்கிறது
ஒரே ஒரு முறை உன்
கண்களால் என்னை
கெளரவிக்க மாட்டாயா?
***
என் செய்தியை 
நான் எழுதத் துடிப்பது
உன் இதயத்தில்தான்
அறிந்தும் அறியாதவள்போல்
நீ ஏன்
ஆட்டோகிராஃபை
நீட்டுகிறாய்?
***
வாசிக்கத் தெரிந்த கரங்களுக்குத்தான்
ராகம் பிடிக்கிறது
நேசிக்கத் தெரிந்த மனிதர்களுக்குத்தான்
என் நெஞ்சம் புரிகிறது
உனக்கெங்கே
புரியப்போகிறது?
***
இந்த ஆரவாரம்
எங்கிருந்து கேட்கிறது..
எங்கிருந்து??

என் நினைவுகளை
கொள்ளை கொண்ட
நீ
எங்கிருக்கிறாய்?
எங்கிருக்கிறாய்?
***
வீதியில் கொட்டும்
போர் முரசுதான்
வீட்டுக்கு வந்ததும்
வீணையாகி விடுகிறது!

அதுவும் 
சோக கீதத்தை மட்டுமே
மீட்டுகின்றது
***
எந்தச் சோக வீணையையும்
தூக்கிச்
சுமக்க வேண்டியிருக்காது
நீ மட்டும் என்
தோளில் இருந்தால்!
***
என் இதயத் தோட்டத்தில்
ரோஜாக்களைப் பயிரிட்டேன்
அறுவடை செய்ய 
உன்னை அழைத்தேன்
அரிவாளோ
நீ வந்த பிறகுதான்
என் தவறு
எனக்குப் புரிந்தது!
***
சில பேர் காவியங்களைப் படைக்கிறார்கள்
சிலர் காவியங்களில் வாழ்கிறார்கள்
என்றேன்.

காவியமாகவே வாழ்ந்து விடுகின்றேன்
என்றாய்!

எழுதி வைக்கப்படாத
எந்தக் காவியமும்
நிலைக்காது என்பதை
நினைத்துப் பார்த்தாயா?
***
கனவுகளை நான் வெறுக்கிறேன்
அவை எத்தனை
அழகாய் இருந்தாலும்,

நிழல்களின் ஒப்பந்தங்களைவிட
நிஜங்களின் போராட்டமே
எனக்குப் பிடிக்கும்.

உன் பிடிவாதம்
எனக்குப் பிடிக்கிறது
அதனால் தான்
இதயம் கிடந்து துடிக்கிறது!

நீ
நீயாகத்தான் இருக்கிறாய்
நான்தான்
நானாக இல்லை.
***
தொட முடியாத
தொலைவில்
இருப்பதாகக்
கனவு காணாதே!

இந்த பூமியின்
விளிம்பையே
தீண்டிவிடும்
அளவிற்கு
என் விரல்கள்
நீளமானவை.

ஏனென்றால்
என் கைகள்
வெறும் கைகளல்ல...

கவிதைகள்!
***


                   - மு.மேத்தாவுடன் என் கற்பனையும்










குறிப்பு: இந்தத் தளத்தை உங்களுடைய ஃபேஸ்புக்குடன் இணைத்துக் கொள்ள

FB ஐ நோக்கி எனது தளம்.......



இதிலுள்ள like button ஐ அழுத்தவும். நான் இடும் இடுக்கைகளை உடனுக்குடன் உங்கள் fb இல் காணமுடியும்.
                - நன்றி.

என் கண்ணை என்னால நம்ப முடியலயே...........











மேலே உள்ள முக்கோணத்தில் காணப்படும் வடிவங்களை மாற்றி அதே அளவிலான முக்கோணத்தை அமைக்கும் போது இடைவெளி உருவாகிறது. எப்படி???

நிழல்கள்

சூரிய நெருப்பு
சுடுகிறது பாதத்தில்
ஒத்தடம் கொடுக்கும்
நிழல் ஒற்றர்கள்

வெய்யில் தாங்காமல்
விரைந்து வரும்
காலுக்குச்
சிறிது நேரச் செருப்புகள்!

வெளிச்சத்தின்
காலடிச் சுவடுகள்!

பங்களா தேசத்துப்
படுகொலை வீதியில்
மானம் இழ்ந்த
மங்கலப் பெண்களின்

கறுப்பு முக்காடுக்கள்
கண்ணீரின் பர்தாக்கள்!

மண்ணின் மச்சங்கள்
மரத்தின் எச்சங்கள்!

Thursday, July 7, 2011

சமூகச் சீர்திருத்தவாதிகள் எனச்சொல்லிக் கொள்ளும் கோமாளிகளே......(பாகம் 2)

அண்மையில் ஓர் இணையத்தளத்தில் பார்வையிட்ட பதிவினை உங்களுடன் பகிர்ந்து கொள்ளலாம் என எண்ணிக் கொள்கிறேன்.. அந்த பதிவின் நகல் உங்கள் பார்வைக்காக.....
  
உங்கள் பார்வைக்கு..
இப்பொழுது இந்தப் பதிவினை அணைவரும் பார்த்திருப்பீர்கள் என நினைக்கின்றேன்.

இவருடைய பதிவு சரியானதா??????????
தன்னுடைய இணையத்தளத்தினை பிரபல்யம் அடைய வைக்கும் ஒரே நோக்கத்திற்காக இவ்வாறான தேவையற்ற இடுக்கைகளை போட்ட வண்ணம் உள்ளார். இவர் இந்த தளத்திற்கு யாழ்ப்பாணத்தின் பெயரினை பாவிக்காது வேறு ஏதாவது பெயரினை வைத்திருக்கலாம். இவர் இப்படியோர் பிழைப்பு பிழைப்பதற்கு வேறு ஏதாவது(தப்பா நினைக்க வேணாம் ஒழிந்திருந்து வீடியோ எடுத்ததற்காக சொன்னேன்) தொழில் செய்யாலாம்.

இந்த வீடியோ பதிவில் அப்படி என்ன இருக்கிறது( நன்றாக அவதானித்தால் தெரியும், சாரம் கட்டிய பெரியவரின் பின்னால் உள்ளவரை..). அப்படி எனின் இவர் இதே வீடியோவினை வைத்து இன்னுமோர் இடுக்கையினை இடுவார் என நினைக்கிறேன்.(யாழ்ப்பாணப் பேருந்துகளில் ஆண்களை ஆண்களே அயன் பண்ணும் காணொளி..)இவர் என்ன யாழ் பேருந்துகளில் பயணிக்காதவரா?? யாழ்ப்பாணதில் எவ்வாறு பேருந்துகள் போகிறது என இவருக்கு உண்மையாகவே தெரியாதா??? இவரின் குடும்பட்த்தினர் என்ன பேருந்து வாடையே அறியாதவர்களா???( நான் இவ்வாறு இடுவதை தப்பாக எண்ண வேண்டாம்.. இது தனிய என் கருத்து கிடையாது...)

அணைவருக்கும் தெரியும் பிற மாவட்டங்கள் போல் யாழ்ப்பாணத்தில் அடிக்கடி பேருந்து கிடையாது. வெகு நேரம் காத்திருந்தால் தான் பேருந்தினை எடுக்க முடியும். அதுவும் அராசாங்க பேருந்து கிடைப்பதென்பது மிகவும் அரிது. கூடுதலாக தனியார் பேருந்து தான். தனியார் பேருந்து எனில் double door பேருந்து கிடையாது. மினிவான் எனப்படும் ஓர் சிறு பஸ். யாழ்பாணத்தில் இருந்தவர்களிற்குத் அந்த வான் பற்றித் தெரியும்.

நீங்களே சொல்லுங்கள் இவரை என்ன செய்யாலாம்??? இவருடைய இடுக்கை சரியானதா??? இவர் கூறுகிறார்....: இப்படி பாலியல் சேட்டை செய்பவைகளை தன்னுடைய இணையத்தளத்தில் பகிரங்கமாக பிரசுரிப்பாராம். ஃபேஸ்புக் கணக்கினூடாக தம்பி, தங்கை, மனைவிக்கு அனுப்புவாரம். நல்ல வேடிக்கையான மனிதர். இவர் அவ்வாறு செய்வாரெனின் இவரின் குடும்பத்தினர் படங்களையும் நாம் விரைவில் இவரின் தளத்திலேயே பார்வையிடமுடியும். ஏனெனில் இவர் குடும்பமும் யாழ்ப்பாணத்தில் இருக்கும் வரை அது போன்ற பேருந்துகளில் தான் பயணிக்க வேண்டியிருக்கும்.

இன்னும் ஓர் கவலைக்குரிய விடயம் என்னவெனில் , இதை 66 பேர் ஃபேஸ்புக்கில்(share) பங்கிட்டிருக்கிறார்கள். இப்படியானவர்கள் இருக்கும் வரை இவ்வாறான மநிதாபிமானம் அற்ற இடுக்கைகளை தடுக்கவே முடியாது. உங்கள் போன்றவர்களே போதும் அவனை இப்படி கேவலம் கெட்ட இடுக்கைகளை போட தூண்டுவதற்கு. மூடர்களே....
தவறு செய்பவனை மேலும் தூண்டிக் கொண்டிருக்கிறீர்களே!!!!!

இவர் போடும் இடுக்கைகளில் உள்ளவர்கள் தம்மை இனங்கண்டு இவரின் தளத்தின் மீது வழக்குப் பதிந்தால் என்ன நிகழும்???

தான் ஏதோ சமூகத்திற்கு நல்லது செய்வதாக நினைத்துக் கொண்டு முட்டாள்த்தனமான காரியங்களைச் செய்து வருகின்றார். இவருடைய இவ்வாறான தரக்குறைவான இடுக்கைகள் அவசியம் கண்டிக்கப்பட வேண்டியவையே!!!!
                                                                                 
என்னுடைய இந்த இடுக்கையில் ஏதேனும் பிழை இருப்பின் தயவு செய்து சுட்டிக்காட்டவும்!!!

Wednesday, July 6, 2011

கிரகங்களின் துணைக்கிரகங்கள் (Planets and Satellites)

  கிரகங்கள் படங்கள் துணைக் கிரகங்கள்
  புதன் -
  சுக்கிரன் -
  பூமி சந்திரன் (Moon)
  செவ்வாய் போபோஸ் (Phobos)
டைமோஸ் (Deimos)
  வியாழன் மெடிஸ் (Metis)
ஆட்ரஸ்டீ (Adrastea)
அமல்தியா (Amalthea)
தெபே (Thebe)
லொ (lo)
ஈரொபா (Europa)
கனிமெடெ (Ganymede)
கால்லிஸ்டொ (Callisto)
லெடா (Leda)
ஹிமலியா (Himalia)
லைசிதியா (lysithea)
எலோரா (Elara)
அனன்கே (Ananke)
கார்மே (Carme)
பசிபியா ஸினொபே (pasiphae Sinope.).
  சனி அட்லஸ் (Atlas)
ப்ரோமெதியஸ் (prometheus)
பான்டோர (pandora)
எபிமெதியஸ் (epimetheus)
ஜானுஸ் (janus)
மிமாஸ் (mimas)
என்ஸெலாடுஸ் (enceladus)
தேதிஸ் (tethys)
டெலெஸ்டோ (telesto)
கலிப்ஸோ (calypso)
டையோன் (dione)
ஹெலென் (helene)
ரேயா (rhea)
டைடன் (titan)
ஹைப்ரையோன் (hypreion)
ஐயாபெடுஸ் (Iapetus)
போயபே (phoebe.).
  யுரேனஸ் கோர்டெலியா (Cordelia )
ஒபேலியா (ophelia)
பையங்கா (bianca)
க்ரெஸ்ஸிடா (cressida)
டெஸ்டெமொன் (desdemone)
ஜுலியெட் (juliet)
போர்டியா (portia )
ரோசலின்ட் (rosalind)
பெலின்டா (belinda)
புக் (puck)
மிரன்டா (miranda)
ஏரியல் (ariel )
உம்பேரியல் (umbriel )
டைடானியா (titania )
ஒபேரொன் (oberon.).
  நெப்டியூன் நையட் (Naiad)
தலஸ்ஸா (Thalassa )
டெஸ்பினா (despina)
கலட்டீ (galatea)
லரிஸ்ஸா (larissa )
ப்ரோடியஸ் (proteus)
ட்ரிடோன் (triton)
நெரியத் (nereid).
  புளூட்டோ சரொன் (Charon).

இது காதல் ஒரு புது கவிதை .................(பாகம் 10)

மழலைப் புன்னகையும்
அழுகையும் நிறைந்திருக்கும்
அவள் வதனத்தை நோக்கி 

முகத்தில் பரவசம் பிரசவிக்க
காற்றின் ஜாடையில் 
கவிதைகள் கொஞ்ச 
பூக்களின் வதனங்களும் 

புன்னகைக்க 
நான் உன்னை மனதார காதலிக்கிறேன் சுடர் 
என்று கூறி
அதையே ஆங்கிலத்தில் தொடர்ந்தான் இனியவன்

தொடர்ந்தது மௌனம் 

இருவரின் முகமும் 
பூரித்து போய் இருந்தது 
கவலையை அடக்கலாம் 

கண்ணீர் வராமல் 
சிரிப்பை ஏன் அடக்க வேண்டும் 
சில்லறை சிதறாமல் 
என்று வாய் விட்டு சிரித்தான் அமைதியாக 

தாய் தந்தையை திருவிழாவில் 
தொலைத்த குழந்தை 
அவங்களை கண்டதும் அடையும் 
மகிழ்சி போல் இருந்தது அவன் உள்ளம் 

காதல் வந்தவுடன்
செல்ல பெருமிதம் அவனுக்கு தலைதூக்கியது !!!

சிரித்துக் கொண்டிருந்தவன்
சட்டென்று நிறுத்தினான்

என் வீட்டில் இன்னும் சொல்லவில்லையே !!!!

வீட்டில் என்ன சொல்வாங்க இனியன் ?
இரண்டு நாட்களுக்கு முன் இனியனுக்கு இருந்த
அதே பரபரப்பு.

இன்று சுடரின் விழிகளில்.

அவன் பேசவில்லை
அவளோடு கொஞ்சம் விளையாடலாம் என்பது அவன் எண்ணம்

சுடர்
என்னை மன்னிச்சுடு
வீட்டில் ஒதுக்க மாட்டாங்க 


சட்டென்று கொட்டும் மார்கழி மழைபோல
அவள் விழிகள் வழிந்தன
அதை சற்றும் எதிர்பார்க்காத இனியன்
இதயம் உடைந்தான்

என்ன சுடர்
வீட்டில எல்லா மே சம்மதம் சொல்வாங்க 
சும்மா ஒரு விளையாட்டுக்காய் . . .

உங்களுக்கு எல்லாமே விளையாட்டுத்தான்.
உங்கள் வீட்டைப்பற்றி எனக்கென்ன தெரியும் ?
காதல் என்பது வேப்பங்காய்
சில குடும்பத்துக்கு 

கொஞ்சம் கோபம்,
கொஞ்சம் அழுகையாய் சொல்லிவைத்தாள்.

என் அப்பா கண்டிப்பானவர் தான் 
ஆனாலும்
நான் இருக்கும் வருடத்தில்
தான் அவரும் வாழ்கிறார்.

என் விருப்பங்களை காயவைத்து
அவருடைய எண்ணங்களை வாழவைப்பதில்லை.

எங்கள் கிராமத்தின் தரைகள் கூட
பச்சையம் தயாரிப்பவை
பச்சையோடு அவருக்கு பரிச்சயம் அதிகம்
அதனால் தானோ என்னவோ

நம் காதலுக்கும் அவர் பச்சைக்கொடிதான் காடுவார் 
என்ற நம்பிக்கை இருக்கிறது 

இருந்தாலும் அங்கீகாரம் பெற
அம்மாவின் முந்தானையோடு தான் நான்
முன்னேற வேண்டும் 

தொடராக சொல்லிவிட்டு சுடரைப் பார்த்தான்.
அவள் கண்களில் இப்போது கண்ணீர் சுவடு இல்லை
சிரித்தாள்.

இந்த காதல் கொஞ்சம் வித்தியாசமானது   
அல்லவா? இனியன் 
இது காதலா 
என்று உணரவே இவளவு
நாளாகி விட்டது 

இனி ஒரு கணமும் உங்கள் தூய்மையான 
காதல் இன்றி என் கணங்கள் நகராது 
என்று 
சொல்லிவிட்டு சிரித்தாள்
சுடர்விழி 

அக்காதலர்களின் சிரிபோலியும் 
பறவைகளின் மாலை நேர ஒலியும் 
அந்த மஞ்சள் மாலைப் பொழுதுக்கு 
ஒரு புது மெட்டையே உருவாக்கியது 

மஞ்சள் நிற தங்க கிண்ணமாய் 
நின்ற மாலை கதிரவன்
மகரந்தம் கொண்டு
கவி எழுதினான்.
 ..இது காதல்... என்று .

                         **********முற்றும்***********

இந்த ஆக்கத்தினை எனக்கு தந்து உதவிய நண்பன் பார்த்திபனுக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன். இது போன்ற சிறந்த ஆக்கங்கள்  உங்களிடம்  இருந்தால் வரவேற்கப்படுகின்றன. 

மின்அஞ்சல் முகவரி: sugaanan@gmail.com


........ “காதல்””காமம்””கல்யாணம்”........


வாலிபப் பருவம்  சவால் பல நிறைந்த ஒரு பருவம். நினைத்ததை சாத்திதே ஆக வேண்டும் என திடத்துடன் சுற்றும் காலம். எனக்கு கீழே தான் உலகம் என்ற இறுமாப்புடனேயே காலம் கழியும்.

ஒருவனை உயர்ந்தவனாகவும், தாழ்ந்தவனாகவும் ஆக்கக் கூடியது இந்தக் காலப் பகுதி. இக் காலத்தில் சேரும் நண்பர் வட்டமே அதனைத் தீர்மானிக்கும்.

அதையும் மீறி அப் பருவத்தில் துளிர்விடும் காதல் மிகவும் இதமான அனுபவங்களைக் கொண்டது. அதில் வெற்றிக் கனியைச் சுவைப்பவர்களும் உண்டு. தோல்வியில் புதிய வியூகங்களை அமைப்பவர்களும் உண்டு.


காதல் என்றால்.....

“ கவிப்பேரரசு தனது பதிப்பு ஒன்றில் அதற்கான விளக்கத்தை இவ்வாறு கொடுக்கின்றார்.”

மனம் என்பது தனது கட்டுப்பாட்டை இழந்து பறக்கும் பருவம் பதினெட்டு - பத்தொன்பது வயது... அந்தக் காலப் பகுதியில் மசும் ஒரு தாவுத் தாவிவிட்டு “அது நடக்குமா/ நடக்காதா??” என்ற பரவசத்தோடும் பரிதவிப்போடும் அசைபோட்டுக் கொண்டிருக்கும். அப்படியான ஒரு நிலையே “ காதல்...” என்கிறார்.
 
காதலில் ஒருதலைக் காதல் என்பது அனுபவித்துப் பார்த்தவர்களுக்குத் தெரியும் எவ்வாறு இனிமையாதும் அவஸ்தையானதும் என்று..


ஒருதலைக் காதல்.....

ஓர் பெண் மீது ஆண் மட்டுமோ/ ஓர் ஆண் மீது பெண் மட்டுமோ தமது ஆசைகளையும் கனவுகளையும் தங்கள் மனதில் புதைத்து அதற்கோர் வடிவம் கொடுத்து அந்த வடிவத்துடன் ஆசை வார்த்தை பேசி அகமகிழ்ந்து உறவாடுவது  “ ஒருதலைக் காதல்...”



இலக்கியங்கள் கூறும் காதல்.....

ஓர் ஆணின் மனதோடு பெண்ணின் மனதும் ஓர் பெண்ணின் மனதோடு ஆணின் மனதும் ஒன்றோடு ஒன்று இடறி விழுந்து , இடறி விழுந்த மனசுகளின் சம்மததோடு உடம்புகளும் தொட்டுக் கொண்டு இன்பம் போல ஒரு துன்பத்தையும் , துன்பம் போல ஒரு இன்பத்தையும் ஒரே நேரத்தில் அனுபவித்தால் அதனைக்   “காதல்”  என்கிறது.
 
  
காமம்........

 ‘ நீ எனக்கல்ல’ ‘ நான் உனக்கல்ல’ ஆனால் ‘ எனக்கு நீ வேண்டும்’ ‘உனக்கு நான் வேண்டும்’ உன்னால் வரும் சுகம் எனக்கு , என்னால் வரும் சுகம் உனக்கு போகிறபோக்கில் போவோம். காலம் நம்மை எங்கே பிரியச் சொல்கிறதோ அந்த இடத்தில் லாப நட்டக் கணக்குப் பார்க்காமல் பிரிந்துகொள்வோம்.
இதுவே “காமம்”. 

காமம் என்பதனை நாம் எல்லோரும் ஓர் கேவலமாகவே நோக்குகின்றோம். ஆனால் பேரறிஞர் “ஓக்ஷோ” மட்டும் இதற்கு உதாரணங்களுடன் கூடிய பல விளக்கங்களைக் கொடுத்துள்ளார். “ ஓக்ஷோ” வைப் பற்றி பிறிதொரு சந்தர்ப்பத்தில் அலசுவோம்.


கல்யாணம்.....

ஒவ்வோர் கலாச்சாரத்திற்கும் போல் திருமணச் சடங்கு வேறுபடும். பொதுவக திருமணம் என்பது,

ஓர் ஆணும் பெண்ணும் உறவு கொள்ள பல சாத்திர சம்பிரதாயங்களை வகுத்து பெரியவர்கள் ஒன்று கூடி அவர்களை ஒன்று சேர்த்து வைப்பது  “திருமணம்” எனப்படுகிறது.   


 “ நாங்களாப் போய் ஒரு கிணத்தில விழுந்தா 
   அது காதல்
   அதுவே பெரியவங்களா சேர்ந்து தள்ளிவிட்டா
   அது திருமணம் ”  
 

 இறுதியில்.........
  கோவிந்தா... கோவிந்தா...கோவிந்தா... கோவிந்தா...கோவிந்தா... கோவிந்தா...