Friday, July 15, 2011

உணர்வுகளை மதிக்கத் தெரியாதோர்களுக்கு.....

அனைவகுக்கும் வணக்கம்.....!!!!!!!!!!

சேர்க்கைகளின் தொடர் வாசகர்கள் நான் இடும்  “சமூகச் சீர்திருத்தவாதிகள் எனச்சொல்லிக் கொள்ளும் கோமாளிகளே......” என்ற தொடரினைப்பற்றி நன்றாகத் தெரிந்திருப்பீர்கள். 

எந்தவொரு யாழ்ப்பாணத்தவனும் தன் மனதில் அடையும் வேதனைகளையும், என் நண்பர்களுடைய மனதின் ஆழக்கருத்துக்களையும் கருத்தில் கொண்டு இந்த இடுக்கைகளை எழுதிவருகின்றேன்.

ஆனால், இந்த இடுக்கைகளை ஒரு கேலிக்குரியதாக மாற்றுவதற்கு சில மனித மனத்தினையும் உணர்வினையும்  மதிக்கத்தெரியாத ஆறறிவு ஜீவன்கள் மன்னிக்கவும் ஆறறிவு ஜீவிலிகள் முனைப்பெடுத்து வருகின்றன.
அவை தாம் வேறு மொழி பேசுபவன் அல்ல தாமும் தமிழன் தான் என சொல்லாமல் சொல்லிவருகின்றன. தமிழ்ராகிய நாம் விடும் பெரிய பிழை நாமும் ஒன்றும் செய்யமாட்டோம்... செய்பவனையும் சரிவர செய்யவிடமாட்டோம்.. இது ஆண்டாண்டுகாலமாக எம் கலாச்சாரமாகவே மாறிவிட்டது. 

நான்  நினைக்கிறேன் நாம் தமிழர் என்பதற்குரிய, எம்மை மற்றவர்களிடம் இருந்து வகைப்படுத்திக் காட்டுவதுவதற்குரிய விக்ஷேட சிறப்பியல்பு இதுவோ தெரியாது.. காரணம் அனைத்து ஜீவராசிகளையும் பிரித்துக் காட்டுவதற்கு ஒவ்வோர் சிறப்பியல்பு இருக்கும். அது போல தமிழனை தனித்துவப்படுத்திக் காட்டுவதும் இந்த இயல்போ என்று நினைக்கத் தோன்றுகிறது.

“சமூகச் சீர்திருத்தவாதிகள் எனச்சொல்லிக் கொள்ளும் கோமாளிகளே......” 
 நான் எழுதும் இந்த விமர்சனத்தை சிலர் அரசியல் ஆக்கப் பார்க்கின்றனர். சிலர் அதை கேவலப்படுத்துகின்றனர். அவர்களுக்கு இன்னும் விளங்கவில்லை இந்த பதிவின் நோக்கங்கள்.

ஓர் நோய்வாய்ப்பட்டிருக்கும் தாயை எப்படியாவது காப்பாற்றி ஆக வேண்டும் என்று ஒரு பிள்ளை துடிக்கிறது. ஆனால் அந்த தாயின் ஏனைய பிள்ளைகள் தூரத்தே நின்று வேடிக்கை பார்த்து  தமக்கு சம்மந்தம் இல்லாத விடயமாக நினைத்து விமர்சித்துவிட்டுச் செல்கின்றது. 
இதுவே நான் எழுதும் இந்த பதிவிற்கும் நிகழ்கிறது. ஒருவனின் உணர்வினை மதிக்கத் தெரியாவிட்டாலும் பரவாயில்லை. தயவு செய்து அதை கேவலமாக விமர்சிக்காதீர்கள்.

உங்களுக்கு ஒன்று கூறிக்கொள்ளவிரும்புகிறேன்!!!!!!!
என்னுடைய பதிவுகள் அரசியல் நோக்கத்திற்காகவோ... என்னுடைய முகவரிக்காகவோ.... என்னுடைய தனிப்பட்ட ஆதாயத்திற்காகவோ எழுதப்படவில்லை....

உணர்வுள்ள ஒருவனும் தன் மனதிற்குள் நினைப்பதை நான் எழுத்துரு கொடுக்கின்றேன்.. அவ்வளவு தான்.  தயவு செய்து இதை அரசியல் ஆக்காதீர்கள்.

             “ நாமார்க்கும் குடியல்லோம் நமனை அஞ்சோம்”

பதிவகள் தொடரும்............

                                           ******நன்றி********

மற்றவர்களின் உணர்வினை மதிக்கின்ற உங்கள் விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன.

Thursday, July 14, 2011

சமூகச் சீர்திருத்தவாதியுடன் ஓர் தொலைபேசி உரையாடல்....

அன்பார்ந்த சேர்க்கையின் அபிமான வாசகர்களே!!
இங்கு ஓர் பிரபலமான ஊடகவியலாளர், மற்றும் சமூகச் சீர்திருத்தவாதி ஒருவருடன் அவரினுடைய தளத்தினைப் பற்றிய உள் நோக்கங்கள் மற்றும் உன்னதமான அவருடைய படைப்புக்கள் பற்றியும் விரிவாக அவருடனேயே கலந்தாஅலோசிக்க உள்ளோம். அவருடனான தொலைபேசியிலான உரையாடல் உங்கள் பார்வைக்கு……
சேர்க்கைகள்     : வணக்கம் சீர்திருத்தவாதியே!!
நியூயாழ்ப்பாணம் : ஆமாம், வணக்கம்! வணக்கம்! என் உடன் பிறந்த தமிழ்  இரத்தங்களே வணக்கம்!
சேர்க்கைகள்     : என்ன வணக்கமே பலமாக இருக்கிறது?? தமிழ்ப்பற்றும் தாய்ப்பற்றும் அதிகமோ??
நியூயாழ்ப்பாணம் : இல்லாமல் இருக்குமா என்ன? இவளவு குறுகின காலத்தில என்னை பிரபலமாக்கினது எண்ட மக்கள் தான.. இந்த சந்தர்ப்பத்தில அவங்களுக்கு எண்ட நன்றிய சொல்லிக்கிறன். குறிப்பா இளைஞர்களுக்கு எண்ட சொல்லிக்கிறேன்…
சேர்க்கைகள்     : இளைஞர்களுக்கா அவங்களுக்கு எதுக்கு??
நியூயாழ்ப்பாணம் : ஓமோம், அவங்களுக்குத்தான்.. என்ர நியூசுகள் எண்டு எடுத்துப் பார்த்தியல் எண்டா தெரியும் பொதுவா எல்லாத்துக்கும் அவங்கள் தான் கதாநாயகர்களா இருப்பாங்கள்... இடக்கிட பெருசுகள பத்தியும் போடுவன். பிறகு அதுகளிண்ட மனசு நோகக்கூடாது பாருங்கோ அதுதான்..
சேர்க்கைகள்     : நல்ல உயர்ந்த நோக்கம்.. ஆமாம் உங்கள் நியூஸுக் கெல்லாம் இளைஞர்கள் தான் ஹீரோ என்றீங்கள் அது எப்படி??
நியூயாழ்ப்பாணம் : ஆம். பொதுவா பாத்தீங்க என்றால்…..
சேர்க்கைகள்     : ஆ… நாங்க பார்த்திருக்கோம்..
நியூயாழ்ப்பாணம் : நான் என்னும் சொல்ல வெளிக்கிடேல….அதாவது பொதுவா பாத்தீங்க எண்டா, எங்கட பெடியல் எங்க எங்க கூட்டமா நிக்கிறாங்களோ உடன படம் எடுத்திடுவன்... பிறகு அந்த படங்களை என்ர தேவைக்கேற்ற மாதிரி மொடிஃபை பண்ணீடுவன்… எனக்கு கொஞ்சம் கற்பனைவளம் கூட…  
சேர்க்கைகள்     : ஆமாம்.. அது சரி… உங்களுக்கு கற்பனைவளமும் கூட காமவளமும் கூடத்தான்…
நியூயாழ்ப்பாணம் : என்ன!! என்ன சொல்றீங்க காமவளமா???(கோவமாக..)
சேர்க்கைகள்     : இது என்னுடைய கதையில்ல பொதுவா கதைச்சத சொன்னன்…
நியூயாழ்ப்பாணம் : நல்லா பொதுவா கதைச்சாங்க… ஏனெண்டா எங்கட ஆக்கள் சினிமா பார்க்கிறேல தானே.. அதில டபிள் மீனிங்ல சொன்னா கைதட்டி சிரிக்கிறேலயா??? அதுமாதிரி தான் இதுவும்..
சேர்க்கைகள்     : அது சினிமா… அதில ஒருத்தரயும் குத்திக்காட்டி டபிள் மீனிங்கில கதைகிறேலதானே… ஆனா நீங்க அப்பிடியா??? யாழ்ப்பாணம் எண்டீங்க.. பொம்பிளையள் எண்டிறீங்க..
நியூயாழ்ப்பாணம் : ஓம்!! யாழ்ப்பாணம் என்ர இடம் அங்க நடக்கிற அக்கிரமத்த கண்டு என்னால சும்மா இருக்கேலாது தானே.. வெளிநாட்டில இருந்தா தான் அந்த அருமவிளங்கும் உங்களுக்கெல்லாம்…
சேர்க்கைகள்     : அப்போ வெளிநாட்டுக்கு போனா தான் உங்களுக்கெல்லாம் தேசப்பற்றுவரும்… உங்கட சமூகத்தில அக்கறவரும் அப்பிடிதானே…???
நியூயாழ்ப்பாணம் : ஓம்…. எப்பவும் விலத்தி இருக்கேக்க அன்புவாறது கூடத்தானே???
சேர்க்கைகள்     : உங்களுக்கு அன்பு வந்ததுக்காண்டி றோட்டில நிக்கிறது போறதெல்லாத்தயும் படமெடுத்து உங்கட பப்பிளிசிட்டிக்காக போடிறதில என்ன நியாயம் இருக்கு…
                ஒரு பொம்பிளயும் ஆம்பிளயும் கதைச்சாலே தப்பா??? அதுவும் உங்களுக்கு கலாசாரச் சீர்ழிவோ???
நியூயாழ்ப்பாணம் : ஓ… நீங்க அப்பிடிவாறியல்… இஞ்ச பாருங்கோ… எனக்கும் தேசப்பற்று இருக்குத் தான் அதுக்காக நான் காசுகட்டி எடுத்த இணையத்தளத்த என்ன செய்யிறது.. அதுக்கு வருசம் வருசம் காசுகட்ட நான் என்ன செய்யிறது… இப்பிடி ஏதாவது போட்டா தான எங்கடயல் பாக்குதுகள்… எங்க ஒருக்கா சும்மா ஒரு ஆர்டிக்கல் போட்டுப் பாருங்கோபாப்பம்…
சேர்க்கைகள்     : அதுக்காக… யாழ்ப்பாணத்தில் இளம் பெண்ணை தன் உடம்பால் ‘அயன்’ பண்ணும் ‘கிழடு’.. இப்படியா தலயங்கம் போடுவீங்க…
நியூயாழ்ப்பாணம் : பின்ன எப்பிடி போடுறது… “ யாழ்ப்பாணத்தில் பேருந்துகளில் மக்கள் செல்வது கடினகாக உள்ளது… இ.போ.சவின் பேருந்து பற்றாக் குறையே இதற்குக் காரணம்..” இப்பிடி தலயங்கம் போட்டா எவன் வந்து பாப்பான்.. அப்பிடி (யாழ்ப்பாணத்தில் இளம் பெண்ணை தன் உடம்பால்  ‘அயன்’ பண்ணும் ‘கிழடு’..) தலயங்கம் போட்டாத்தான் சனம் வந்து என்ன ஏதெண்டு பாக்கும்.. இதெல்லாம்  ஒரு தந்திரம் தம்பி உனக்கு விளங்காது…
சேர்க்கைகள்     : சரி… அது எங்களுக்கு விளங்காமல் இருக்கும் வரைக்கும் தான் உங்களுக்கு நல்லது… ஓகே. உங்கள் ஆர்டிக்கல்களில் ஆபாசமான வரிகள் இடம் பெறுவதாகக் கூறுகிறார்களே.. அதைவிட நீங்கள் காமத்தளம் ஒன்று உருவாக்கி இருக்கலாமாம்…  இதுபற்றி உங்கள் கருத்து…
நியூயாழ்ப்பாணம் : நீங்க கேக்காட்டியும் இது சொல்லனும் எண்டுதான் இருந்தனான்… அதாவது இங்க(வெளிநாடுகள்) செக்ஸ் என்றது ஒரு சின்னவிசயம்… ஆனா எங்கட ஊருகள்ள இதப்பற்றி கதைச்சா துலஞ்சுதுகத… ஏதோ கொலபண்ணிப் போட்ட மாதிரி பாப்பாங்கள்… அதுக்காக தான் இப்பிடி எழுதினா செக்ஸ் ரீதியாயும் எங்கட சனத்த முன்னேத்தலாமெல்லோ… அது தான்.., நீங்க கேட்டியல் தானே எதுக்கு அம்பிள பொம்பிள போட்டோ எல்லாம் எடுத்து போடிறியல் எண்டு… இதுக்கு தான் இப்ப விளங்குத…

                ஒன்டு சொல்லனும் தம்பி அங்க இருந்து போட்டோ… வீடியோ எடுத்து அனுப்பிற பெடியல பாராட்டனும்… சும்மா எங்கயோ எங்கயோ எல்லாம் பூந்து பூந்து எடுக்கிறாங்கள்… இந்த நேரத்தில அவங்களுக்கும் என்ர பாராட்டுகள்… குடுக்கிற காசுக்கேற்ற மாதிரி நல்லா வேலசெய்யிறாங்கள்…

                தொழிலாளிய சந்தோசப்படுத்தினா தான் விசுவாசிகளா இருப்பாங்கள். என்ன தம்பி நான் சொல்றது சரிதானே தம்பி???

                மற்றது காமத்தளம் பற்றி சொன்னீங்க என்ன…………??? காமத்தளம் என்றால் நிறய இருக்குது… அதவிட நான் இந்த தள வாசகர்களை கேட்ட உங்க இடத்தில நடக்கிற கலாசார போட்டோ வீடியோ எதுக்கு தெரியுமா??? அதில ஆம்பிளயும் பொம்பிளயும் கிட்ட நிக்கிற மாதிரி இருந்தா சரி எனக்கு அந்த இடத்தில அப்பிடி இப்பிடி விடயம்  நடக்குதென்டு எழுதீட்டா சனம் அதையும் பார்க்கும் வாசிக்கும்… அது வாசிக்கும் போது சனத்துக்கு ஒரு கிலுகிலுப்பு வருமெல்லோ… சும்மா ஒரு நியூசெண்டா பேப்பரை வாங்கி படிக்கலாம்… மினக்கட்டு என்ர தளத்த பார்க்க வார்றவங்கள நான் திருப்திபடுத்த தான வேணும். அப்ப தான திரும்ப திரும்ப வருவாங்க…

சேர்க்கைகள்     : ம்ம்….ம், அப்ப போட்டோ வீடியோ எடுக்கிறது மட்டும் தான் அவங்கள்.. மிச்சமெல்லாம்…???
நியூயாழ்ப்பாணம் : அதெல்லாம் நான் தான் தம்பி.. வெட்டிறது… பொருத்திறது… எழுதிறது… எல்லாம் நான் தான்… ஒருத்தனையும் கிட்ட வைச்சிருக்கிறேல… ஒருத்தனயும் நம்பக்கூடாது… ஒன்டு சொல்லப் போனா உங்க நிக்கிறவங்களுக்கு என்ர முகம் கூட தெரியாது… பிறகு நான் உதுகல கிட்ட வைச்சுக் கொண்டு செய்ய, கடைசில நித்தியானந்தா சுவானின்ர நிலைதான் எனக்கும் வரும்…
      
                வேற என்ன தம்பி…. உங்கட தளம் எல்லாம் எப்பிடி போகுது… உங்கடயையும் பப்ளிசிட்டி பண்ணணும் எண்டால் என்ரய பார்த்து ஃபொலோ பண்ணுங்கோ…
சேர்க்கைகள்     : ம்ம்…ம் , பாப்பம், பாப்பம்….. நன்றி.
நியூயாழ்ப்பாணம் : தம்பி ஒரு சந்தேகம்….??? நான் கதைச்சத உங்கட தளத்தில போட்டிட மாட்டியல் தான….
                ……
                ……
                என்ன தம்பி சத்தத்தக் காணோம்… ஹலோ…. ஹலோ……










Tuesday, July 12, 2011

புரிதலுடனான உறவுகளே அவசியம்.


படைத்தவனுக்குத் தெரியவில்லை-இவன்

பரிதவிப்பு.....

பழகியவருக்கும் தெரியவில்லை-இவன்

மனத்துடிப்பு...

விலகியது உன் அன்பு 
 
போதாது என்று அல்ல...

நீ கொண்ட அன்பு

அளவு கடந்துவிட்டது என்பதற்காக...

“அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு”

வாழ்க்கை என்னும் நீண்டதூரப் பயணத்தை நாம் சந்தோக்ஷம் நிறைந்ததாக்கிக்கொள்ளவே எப்போதும் விரும்புகின்றோம். மனதுக்கு பாரமான எந்தவொரு கவலையான சம்பவங்களையும் மறக்கவே முயற்சிக்கின்றோம்.

சந்தோக்ஷமாயினும் சரி துக்கமாயினும் சரி புரிதலுடனான ஓர் உறவின் அல்லது உறவுகளின் அவசியத்தினை மனம் எப்போதும் உணர்த்திக்கொண்டிருக்கும். 
மனதுக்கு நிம்மதியைத் தரக்கூடிய இன்பங்களில் பங்கெடுத்து துன்பங்களில் தோள்கொடுக்கக்கூடிய உறவுகள் கிடைக்கப்பெறுவதானது அதீத சந்தோக்ஷத்தை தரக்கூடியது எனலாம். அந்த உறவுகள் தாய், தந்தை, சகோதர சகோதரிகளாகவோ, உறவினர்களாகவோ, நண்பர்களாகவோ, தொழில் நிலையானவர்களாகவோ, காதலன் காதலியாகவோ இருக்கலாம்.

சிலர் குறைவாகப் பேசுவார்கள், ஆனால் அவர்களை உறவினர்கள் நன்றாக புரிந்துகொண்டிருப்பார்கள். சிலர் அதிகமாகப் பேசுவார்கள் ஆனால் அவர்களை உறவினர்களால் சரியாகப் புரிந்துகொள்ள முடியாமல் இருக்கும்.  மேலும் சிலர் சந்தித்திருக்கவேமாட்டார்கள் ஆனால் மிகச்சரியான புரிதல் இருக்கும்.

இது எவ்வாறு நிகழ்கிறது? ஆம்!
புரிந்துணர்வு எனக் குறிப்பிடுகையில் முதல் நிலையில் வைக்கப்படுவது நம்பிக்கை தான். அது ஒருவர் மீது மற்றொருவர் வைத்திருக்கும் பாசப் பத்திரம். நம்பிக்கையின் வெளிப்பாடு அதிகமாக இருக்கையில் அங்கு எதுவித சந்தேகங்களுக்கோ அல்லது தவறான நடவடிக்கைகளுக்கோ இடமிருக்காது. 

நிறைவான  பாசத்தோடான பயணம் அனுமானிக்க முடியாத ஆனந்தத்தை தரவல்லது. ஆனால் அதே பாசம் இடை நடுவில் உடையுமாயின் அதன் வலிகளின் ஆழம் அதிகம். மனதில் ஏதோ ஒரு உருவமற்ற புள்ளியாய் எல்லா சந்தர்ப்பங்களிலும் அந்த வடு இருந்துகொண்டேதான் இருக்கும்.

உதாரணமாக : பழகிய நாடகளை என்னும் போது, பழகியவர்கள் ஞாபகப்படுத்தும் போது , நாம் பழகியது போல் வேறுயாரையும் கண்டாலோ மனதின் வலியின் கொடுமையை ஈடுகட்ட முடியாது.

ஆதலால் உறவுகள் தேவைப்படும் அதேவேளை அதற்கேற்ற புரிதல்களும் அவசியமாகிறது. 

உறவுகளை வலுப்படுத்திக்கொள்ள அன்பு விட்டுக்கொடுப்பு ஆகிய பண்புகளையும் வளர்த்துக்கொள்ள வேண்டும். அன்பைவிட சிறந்த ஆயுதம் இல்லை என்பார்கள். எதையும் அன்போடு அணுகும் போது அதன் பிரதிபலனும் அன்பாகவே கிடைப்பதை நாம் பல சந்தர்ப்பங்களில் அனுபவித்திருப்போம். 
பரிமாணங்கள் பலவற்றோடு பிறருக்கு கொடுக்கக்கூடிய உயரிய சந்தோக்ஷமான அன்பினை எந்தவித எதிர்பார்ப்புகளும் இல்லாமல் பகிர்தல் வேண்டும். அன்பு நிறைந்த தூய உள்ளம் அமைதி வாழும் திருக்கோயில் என்று சொல்லப்படுவதுண்டு. 

அதேபோல் விட்டுக்கொடுப்பதிலும் நிறைவான திருப்தியைக் காணமுடியும். ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து பழகும் போது மனம் இலகுதன்மையை உணரும். இது காலப்போக்கில் சுவையான சம்பவங்களை மனதில் இருத்திக்கொள்ள உதவும். நெருக்கமான உறவுகளை விரிசல் இன்றி பேணுவதற்கு விட்டுக் கொடுப்பு அவசியமாகும். நல்ல  உறவுகளில் விரிசல் ஏற்படுமாயின் அல்லது விரிசல் ஏற்படுவதற்கான காரணம் தெரியுமாயின் வாய்விட்டுப் பேசுவதே சிறந்தது. தவறான மதிப்பீடுகளில் இருந்து விலகிக்கொள்ளவும் நியாயமான புரிந்துணர்வை ஏற்படுத்தவும் எதையும் மறைக்காமல் பேசவேண்டும். அதிலும் கோபங்களை ஒருபுறம் ஒதுக்கிவைத்துவிட்டு மற்றவருக்குப் புரியும் வகையில் அமைதியாக எடுத்துக்கூற வேண்டும். 
 நாம் பச்சைக் கண்ணாடி அணிந்துகொண்டு பார்க்கும்போது அணைத்துமே பச்சையாகத் தெரிவது போல சந்தேகக் கண் கொண்டு பார்க்கும் போது அவ்வாறே தெரியும். ஆதலால் அவற்றிலிருந்து வெளிப்படையாக பேசித்தீர்மானிப்பது சிறந்தது.

நடைமுறை வாழ்க்கையில் நாம் ஒவ்வொருவரும் யாரோ ஒருவரில் அல்லது பலரில் தங்கி வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இதை எவரும் மறுக்க முடியாது. பெரும்பாலும் ஒவ்வோர் சின்ன விடயங்களுக்கும் மற்றவர்களின் உதவி தேவைப்படுகிறது.

நாம் உண்ணும் உடை அணியும் ஆடை, ஆபரணங்கள் என்று அணைத்தும் நேரடியாகவோ மறைமுகமாகவோ மற்றவரின் உதவி தேவைப்படுகிறது.  உறவுகள் எமக்கு அவசியம். 

தனியான வாழ்க்கைப் பயணத்தைவிட காத்திரமான நல்ல உறவுகளோடு வாழ்க்கையைத் தொடருவது தேகத்திற்கும் இதயத்திற்கும் நிறைவான மகிழ்ச்சியைத் தரும். ஆதல்லால் உறவுகளில் விரிசல்கள் வேண்டாமே. சிறந்த முறையில் ஆனந்தமாக வாழப்பழகிக்கொள்வோம்.


அளவுகடந்த அன்பும் அளவுகடந்த எதிர்பார்ப்பும் நல்ல ஒரு புரிந்துணர்வுடனான உறவினை மேற்கொள்வதற்கு தடையாகவே அமையும். இது நான் என் அனுபவரீதியாக உணர்ந்தது.

                                                                                                                       அன்புடன் சுகானன்.

சமூகச் சீர்திருத்தவாதிகள் எனச்சொல்லிக் கொள்ளும் கோமாளிகளே......(பாகம் 3)

அனைவருக்கும் மீண்டும் ஒரு முறை எனது வண்க்கம்..


யாழ்ப்பாணதின் பெயரினைச்சொல்லி(அதாவது தன் தாயின் பெயரைச் சொல்லி..) பணம் சம்பாதிக்க ஒருவர்(புலம் பெயர் தமிழன் என்று சொல்லிக்கொள்ளும் ஓர் ஜந்து..) ஓர் இணையத்தளத்தினை பயன்படுத்தி வருகிறார். அவரின் சமூக அக்கறை அளவுகடந்து செல்கின்றது. அவரின் சமூக அக்கறையும் நகைச்சுவை உணர்வும் அனைவரையும் கவர்ந்துள்ளது போலும். ஏனெனில் அவரின் தளத்தினை ஒரு சமூகத்தளத்தில் விரும்பியுள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 9,732. என்னைப் பொறுத்தவரை இவர் இந்தியா சென்றால் தமிழ்த் திரைப்படங்களில் நகைச்சுவைப் பகுதியினை நன்றாக எழுதுவார் என நினைக்கிறேன். (காமத் தலைப்புகளில்...தப்பா நினைக்காதீங்க அதைவிட்டா அவருக்கு வேற வராது..) 

அந்த ஜந்து தனது தளத்தில் போட்டுள்ள இடுக்கைகளின் பட்டியலை உங்கள் பார்வைக்குத் தருகின்றேன்..

  • யாழ்ப்பாணப் பேருந்தில் இளம் பெண்ணை தன் உடம்பால் அயன் பண்ணும் கிழடு( இது சேர்க்கைகளில் விரிவாக ஆராயப்பட்டது.)
  • விபச்சாரிகளாக மாறும் எங்கள் தங்கைகள்
  • ஒரு காதலனுக்காக இரு பிரபல பாடசாலை மாணவர்கள் கட்டிப் புரண்டு சண்டை
  • யாழ்ப்பாணத்தில் தனியார் பஸ்களில்..( இது இங்கு ஆராயப்பட உள்ளது..)
  • அநேகமான தலைப்புக்கள் இங்கே தர முடியாதவையாக உள்ளன...( அவரின் வார்த்தை பிரயோகங்கள் அவர் வளர்ந்தவிதத்தை காட்டுகிறது)
 “நான் தான் யாழ்ப்பாணத்தின் சமூக நலனில் அக்கறை கொண்டவன். என்னால் தான் இந்த சமூகத்தினை திருத்த முடியும். மற்றவர்கள் எல்லாம் வீண். ஏனெனில் நான் தான் இருட்டில் நடக்கும் விடயங்களை திரைபோட்டு எனது தளங்களில் உலாவவிகின்றேன். அது நூறு நாட்களைத் தாண்டியும் நன்றாக ஓடிக்கொண்டிருக்கிறது. என் விசுவாசிகள் (9,731..முன்பு குறிப்பிட்டதனை விட 1 குறைந்துள்ளது.. நான் இப்பதிவினை எழுதிக் கொண்டிருக்கும் போது..) இருக்கும் வரை என்னை அசைக்க முடியாது.”

இப்படியானவரகள் இருக்கும் வரை என்னால் என்ன செய்யமுடியும். அண்மையில் எனது இடுகையினைப்(சமூகச் சீர்திருத்தவாதிகள் எனச்சொல்லிக் கொள்ளும் கோமாளிகளே......(பாகம் 2)) பார்தத ஒரு நண்பர் எதேர்ச்சியாக ஒருவருடன் ஃபேஸ்புக் அரட்டையில் ஈடுபட்டுள்ளார். அந்த நபர் நான் குத்திக்காடும் இணையத்தள நிருவனரின் நெருங்கிய நண்பர். அவரும்  என் இடுகையினை வாசித்துள்ளார். அவருக்கும் என் நண்பருக்கும் இடையில் காரசாரமான அரட்டை, அப்போது அவர் கூறியுள்ளார்: நான் பல தடவை அவரிடம்( இணையத்தள நிருவனரிடம்) கூறியுள்ளேன் ஆனால் அவர் கேட்பதாக இல்லை என்றார்.(அப்படியாயின் அவர் சமூக சீர்திருத்தவாதி என்று கூறிக்கொண்டு சமூகத்தை சீரழிக்கிறாரா???) அப்படி கூறியதுடன் அவர் அந்த தளத்தினை விட்டுவிலகினார். (ஃபேஸ்புக் like இல் இருந்து..).

இது நான் இடும் இடுக்கைக்கு கிடைத்துள்ள முதல் வெற்றியாகவே கருதுகின்றேன். அத்துடன் என் நண்பர்களும் எனது பதிவினைப் பிரசுரித்து பல்வேறு விதமாக மக்களை சென்றடைய வைக்கின்றனர். இக் கணம் எனது மனமார்ந்த நன்றியையும் அவர்களுக்கு தெரிவிக்கின்றேன். இந்த இடுக்கைகளுக் எனக்கு எதிர்ப்புகளும் வந்துள்ளன.(ஆனால் அவர்களும் உண்மை புலப்பட மனம்மாறுவார்கள் என்றென்னுகிறேன்.)


சமூகச் சீர்திருத்தவாதிகள் எனச்சொல்லிக் கொள்ளும் கோமாளிகளே......(பாகம் 3) 
இன் இன்றைய தலைப்பை ஆராய்வோம்....

அவரின் நகைச்சுவையின் தலைப்பு யாழ்ப்பாணத்தில் தனியார் பஸ்களில்....

அப்படி என்ன யாழ்ப்பாணத்தில் தனியார் பஸ்களில் நடக்கிறது... நாமும் ஒருக்கால் போய்ப்பாப்பம் என்று போனேன். 

 “முதலில் இ.போ.ச க்கு(இலங்கைப் போக்குவரத்து சபை) சொந்தமான பஸ்ல போவம் எண்டு நினைச்சுதான் போனன். ஏனென்டால் அது பெருசும் வடிவா நிண்டும் போகலாம்.( மினிவான்ல போனா குனிஞ்சு நிக்கனும்.. அது பரவாயில்லை இப்ப யாரோ ஒருத்தன் எங்கட சனம் நிக்கிறது, இருகிறது, படுக்கிறது எல்லாத்தையும் படமெடுத்து போடுறானாம்!!! ஏதோ கலாச்சாரம் கெட்டுப்போகும் என்ற பெயரில.. சின்ன பெடியல் பற், விக்கட்டோடயும் நிக்க வழியில்லயாம்!!!!!  காலாற தெரிஞ்ச பெடியன் வீட்டு கேட்டிலயும் நிக்க விடுறானில்லயாம்!!!!! உடன அதுகல படம் எடுத்து யாழ்ப்பாணக் கலாசாரம் கெட்டுபோச்சு என்றானாம்... நான் ஒன்டு கேக்கிறன் உங்களிட்ட அவனுக்கு மண்டேல ஏதாச்சும் பலமா அடிபட்டு போச்சுதுபோலகிடக்கு... பிறகு அதையும் படம் பிடிச்சிட்டானெண்டா..) நானும் பஸ்ஸ பாத்துக் கொண்டு நிக்கிறன்.. தெரிஞ்ச பெடியல் எல்லாம் மினிபஸ்ல இருந்து கைகாட்டிக் கொண்டு போறாங்கள். கன நேரமா நிண்டாச்சு.. பஸ்ஸ கானல , கைகாட்டிட்டு போனவனெல்லாம் திரும்பி போறான்.. நானும் பார்த்து பார்த்து களைச்சுப் போய் வீட்ட போனதுதான் மிச்சம்.  அதுக்கு பிறகு இ.போ.சாவ பாக்கிறதே இல்ல. என்ன நடந்தாலும் மினிவான் தான்..” 

யாழ்ப்பாண போக்குவரத்து லட்சணம் எல்லோரும் அறிந்ததே. அந்த முட்டாள் தனது பதிவில் குறிப்பிட்டது போல் யாழ்ப்பாணத்தில் அதிகளவான மோட்டார் வண்டிகளும் துவிச்சக்கர வண்டிகளும் உள்ளன. அதற்கு என்னசெய்ய சொல்றார்... 

யாழ் நகரில் இருந்து சுமார் 7 அல்லது 10 கி.மீ தூரத்தில் உள்ளவர்கள் அவர் குறிப்பிட்டதுபோல் வருவதில் நிஜாயம் இருக்கு. அதுக்காக காரைநகர், பளை, சாவகச்சேரி, தெல்லிப்பளை, வடமராட்சிப் பகுதி மற்றும் வேறு இடங்களில் இருந்து வருபவர்கள் என்ன செய்வது??? 

சமூக அக்கறை கொண்டவன் தானே நீ????  
நீயும் உன் வாலுகளும் சேர்ந்து யாழ்ப்பாணத்திற்கு சிறந்த ஓர் போக்குவரத்து வழியினை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டியது தானே. அல்லது  உரியவர்களின் கவனத்திற்கு ஓர் மணுவினை அனுப்ப வேண்டியது தானே....பிறகு உனக்கு எதற்கு உந்த தேவையில்ல துளவாரங்கள் எல்லாம்..

நீ உன்னுடைய இணையத்தளம் எப்போது முளைத்தது.?? 
அப்படியாயின் யாழ்ப்பாணத்தில் காலம்காலமாக இயக்கிவரும் பத்திரிகை நிருபர்கள் என்ன முட்டாள்களா?? உனக்கே இப்படியான தகவல்கள் கிடைக்கும் போது அவர்களுக்கு கிடைக்காதா என்ன??? உன்னைப் போல அவர்களுக்கு செய்திகள் போடத்தெரியாதா என்ன??? அவர்கள் ஏன் போடவில்லை??? சற்றே சிந்திக்கத் தெரியாதா??? மூடனே!!!!!!!!! 

என் பதிவில் உனக்கு அடிக்கடி ஒரு விடயத்தை ஞாபகப்படுத்தி வருகின்றேன். நீ வெளிச்சத்திற்கு கொண்டு வருவதாக போடும் ஒவ்வோர் பதிவும் புதிய தவறுகளைத்தூண்ட வைக்கும் என்பதில் ஐயமில்லை..

தயவு செய்து நீ உன் இடத்திற்கு நன்மை செய்யவிரும்பின் இப்படியான இடுக்கைகள் போடுவதை நிறுத்திக் கொள்!!!! 

இது உனக்கு விடுக்கும் எச்சரிக்கை!!!!!!!!!!!!

இவனுக்கு எதிராக இந்தியாவிலுள்ள எனது நண்பன் எழுதிய பதிவு உங்கள் பார்வைக்கு.. 

தண்ணீர் தேசம்...........1



கடல்...
உலகின் முதல் அதிசயம்.
சத்தமிடும் ரகசியம்.
காலவெள்ளம்
தேங்கிநிற்கும் நீலப் பள்ளம்.

வாசிக்கக் கிடைக்காத
வரலாறுகளைத் தின்றுசெரித்து
நின்றுசிரிக்கும் நிஜம்.

கடல்...
ஒருவகையில் நம்பிக்கை.
ஒருவகையில் எச்சரிக்கை.

கடல்குடித்துக் கொண்டிருந்த
கலைவண்ணன் மடியில்கிடந்த
தமிழ்ரோஜாவை மறந்துபோனான்.

அவள் அழகின் நவீனம்.
சிறகுகளைந்து சுடிதார்கொண்ட
சொப்பனதேவதை. ரத்தஓட்டம்
பாயும் தங்கம் அவள் தேகம்.
பொறுக்கி எடுத்த உலக
அழகுகளை நெருக்கித் தொடுத்த
நேர்த்தியான சித்திரம். குமரி
வயதுகொண்ட குமரி அவள்.

அவன் அழகன். இளைய அறிஞன்.
காதலிக்கும்போதும் கம்பீரம்
குறையாதவன்.

என்ன யோசனை?
என்றாள் தமிழ்.
கலைவண்ணன் மனது
கரையேறியது.

இந்தச் செவிட்டுக் கரைகளோடு
அந்த அலைகள் இத்தனை
யுகங்களாய் அப்படி என்னதான்
பேசும் என்று யோசிக்கிறேன்.

பூமியில் கிடந்துகொண்டே இந்தக்
கடல் தூரத்துவானத்துக்குத்
தூரிகையில்லாமல் எப்படி
வர்ணமடிக்கிறது என்று
யோசிக்கிறேன்.

மடியில் கிடந்தவள் நொடியில்
எழுந்தாள்.

நீங்கள் கடல்பைத்தியம்.

இல்லை. நான் கடற்காதலன்.

கடல் உங்களுக்குச் சலிக்கவே
சலிக்காதா?

காதலியும் கடலும் சலிப்பதில்லை தமிழ்ரோஜா.
அவள் மல்லிகைக்கரம் தொட்டு
மணிக்கட்டில் முத்தமிட்டான்.
நேசமின்சாரம் நெஞ்சுக்குள் பரவியது.

அவளை இழுத்து வளைத்து
இறுக்கி இறுக்கி உருக்கி உருக்கி
மடியில் ஊற்றிக் கொண்டான்.

ஓர் அலை அவர்கள் மீது அட்சதை தூவியது.

காதுமடல்களின் வெயில்மறைவுப்
பிரதேசங்களில் விளையாடி
அவன் விரல் நன்னம்பிக்கை முனைநோக்கி
நகர்ந்தபோது வெடுக்கென்று விலகிக்
கொண்டவள் பொய்க் கோபத்தில் பூத்தாள்.

அவன் அறிவான் - ஊடல் என்பது
பசிதூண்டும் பந்தி. பந்திக்கு முந்தியவளை
வம்புக்கிழுத்தான்.

வா. கொஞ்ச நேரம் கடலோடு கால்நனைப்போம்.

அய்யோ. கடலுக்குள்ளா? நான் மாட்டேன்.

கலாபமயில் கூட்டுப்புழுவானது குறுகிக் குறுகி.
ஏன்? என் மீது நம்பிக்கையில்லையா?

இல்லை, கடல்மீது நம்பிக்கையில்லை.

எதனால்?

ஆக்டோ பஸ அலைகள் என்னை அள்ளிக்
கொண்டோ டிவிட்டால்?

அப்படியாவது கடல்நீர் குடிநீராகட்டுமே.

சிரித்தது அவன் நுரைத்தது கடல்

தள்ளி நின்றாள் தமிழ்ரோஜா,
தான்மட்டும் அலைதாண்டிக் கடல்புகுந்தான்
கலைவண்ணன்.

வா

மாட்டேன். எனக்கு பயம் தண்ணீர் பயம்.
குடிநீர் குளிநீர் தவிர எல்லாம் பயம்.
வெள்ளித்திரையில் வெள்ளம் பார்த்தாலே
விழிமுடிக் கொள்வேன்.

ஆறோ ஏரியோ கடலோ என் கனவுகளில்
ததும்பும்போது என் படுக்கையில் நான்
வியர்த்து விழிக்கிறேன்.

மாட்டேன் கடலாட மாட்டேன். என்னை
ஆபத்துக்குள் அழைக்காதீர்கள்.

ஒரே ஒரு பயம்
எனக்கு தண்ணீர் பயம்

பேசப் பேச அவள்
படபடப்பைப் பறைசாற்றின
கண்களில் உடைந்துவிழுந்த
மின்மினி மின்னல்கள்.

கலைவண்ணன் கரைமீண்டான்.
அவளை ஆதரவாய் அணைத்து
அங்கவஸதிரமாய்த் தோளில்
அணிந்து அவள் சுட்டுவிழி தாழும்
வேளை கன்னத்தில் சுட்டுவிரல்
கையெழுத்திட்டான்.

காதல் மண்டியிட்டான். காதில்
ஓதினான்....



                                                                                            கவிப்பேரரசின் பதிவு தொடரும்...

Monday, July 11, 2011

முல்லாவின் கதைகள் (நீதிக் கதைகள்) தொடர்ச்சி....

Mulla Nasruddin


முல்லாவின் தந்திரம்


ஓரு நாள் முல்லா குளத்தில் நீந்திக்கொண்டிருந்த வாத்துக்களில் ஒன்றைப் பிடிக்க முயற்சி செய்தார்.

வாத்துக்கள் கரை ஒரமாக வரும்போது முல்லா அதனை எட்டிப் பிடிக்க முயற்சி செய்தார். வாத்துக்களோ அவர் கையில் அகப்படுவதுபோல பாவனை செய்து நழுவி கொண்டிருந்தன. அந்தச் சமயத்தில் முல்லாவின் நண்பர் ஒருவர் அந்தப் பக்கமாக வந்தார்.

வாத்தைப் பிடிக்க முல்லா எடுக்கும் பிரயாசையையும், அதில் அவர் அடிக்கடி தோல்வியடைவதையும் கண்ட நண்பருக்குச் சிரிப்பு வந்தது.

" என்ன முல்லா அவர்களே வாத்து வேட்டை நடக்கிறது போலிருக்கிறது" என்று சிரித்துக் கொண்டே கேட்டார்.

முல்லா உடனே தமது பையிலிருந்த ரொட்டித் துண்டை எடுத்து குளத்து நீரில் நனைத்துச் சாப்பிடத் தொடங்கினார்.

" என்ன செய்கிறீர்கள் முல்லா அவர்களே" என நண்பர் கேட்டர்.

" வாத்து சூப்பில் ரொட்டியை நனைத்துச் சாப்பிடுகிறேனஞ் என்று தனது ஏமாற்றத்தை மறைத்துக் கொண்டு கூறிச் சமாளித்தார் முல்லா.

ஆண் பெண் நட்பு................

 நட்பு...கடவுளால் கொடுக்கப்பட்ட அற்புதமான ஓர் உறவு. தாய் போல ஒருவனை சுமக்க முடியுமெனின் அது நட்பைத் தவிர வேறு ஒன்றாலும் இயலாது.. அப்படிப் பட்ட நட்பு ஓரு ஆணுக்கும் ஆணுக்கும் இடையிலோ, ஓர் பெண்ணுக்கும் பெண்ணுக்கும் இடையிலோ அல்லது ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையிலோ காணப்படலாம். இதில் எந்த தவறும் உண்டாக வாய்ப்பில்லை. ஆனால் தற்சமயம் சமூகத்தில் ஏற்பட்டுள்ள சில மாற்றங்களினால் ஆண் பெண் நட்பினை சந்தேகத்துடன் பார்க்கும் நிலை ஏற்பட்டுவிட்டது. இது படிக்காத சமூகத்திடம் மட்டுமல்ல, படித்த சமூகத்திடமும் அதிகளவாகப் பெருகிவிட்டது. ஓர் ஆணும் பெண்ணும் நெருங்கி பழகினால் போதும், நட்பென்ற உன்னதமான உறவினைக் களங்கப்படுத்தி இருவருக்கும் இடையில் சம்மந்தமில்லாத கதைகளை அவிழ்த்துவிட்டு வேடிக்கை பார்ப்பது வழக்கமாகி விட்டது. பெரும்பாலான பெற்றோரும்  இப்போது தமது பிள்ளைகளை சந்தேகப்பட ஆரம்பித்துவிட்டனர்.

 பிள்ளைகள் பால் வேற்றுமையின்றி நட்புடன் பழகுவதை, நட்பு என்ற கண் கொண்டு பார்க்காமல் “ எங்கே பிள்ளைகள் தவறி விடுவார்களோ.....” என்று அச்சப்பட்டு அச்சப்பட்டே தமக்குத்தாமே மன உளைச்சலை ஏற்படுத்திக் கொண்டு வாழ்கின்றார்கள்.

நான்கு சுவர்களுக்குள் வளர்க்கப்படும் பிள்ளைகள் காதல் வலையில் விழவில்லையா ? தவறுகள் அங்கு நடக்கவில்லையா ? என்பதைப் பெற்றோர்கள் நன்கு சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

இதிலிருந்தாவது பெற்றோர்கள், பிள்ளைகளைக் கட்டி வைப்பதால், அவர்கள் மனதையோ உணர்வுகளையோ கட்டிவைக்க முடியாது என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும். அத்தோடு இப்படி வளர்க்கப்படும் பெண்பிள்ளைகள் உலகத்தைக் காணத்தவறிவிடுகிறார்கள். மனிதர்களின் நியாயமான குணங்களைப் புரிந்துகொள்ள முடியாமற் போய்விடுகிறார்கள்.

ஆண்கள் கெட்டவர்கள், பெண்கள் நல்லவர்கள் என்றில்லை. நல்லவர்களும் கெட்டவர்களும் இருபகுதியிலும் உள்ளார்கள். அந்தக் கெட்டவர்கள் ஏன் உருவானார்கள் என்பதைதான் நாம் ஆராய்ந்து பார்க்கவேண்டும்.

சின்ன வயதிலிருந்தே பால் பாகுபாடின்றி ஒன்றாக நட்புடன் வளரும் பிள்ளைகள் மத்தியில் ஏற்படும் தவறுகளை விட, “ நீ ஆண், நீ பெண்” என்று பிரித்து தனிமைப்படுத்தப்பட்டு வளர்க்கப்படும் பிள்ளைகளின் மத்தியில்தான் தவறுகள் அதிகமாக ஏற்படுகின்றன.

பெண் பிள்ளைகளும் உலகத்தைப் பார்க்க பெற்றோர்கள் அனுமதிக்க வேண்டும். அதற்காக அளவுக்கு மீறி எச்செயலிலும் ஈடுபடவும் விடக்கூடாது. அதைவிடுத்து பெண்பிள்ளைகளை ஆண்களுடன் பழகவிடாது வீட்டுக்குள் வைத்து வளர்ப்பதன் மூலம் பிள்ளைகளையும் மனரீதியாக வதைத்து, தாமும் வருந்தி கொண்டு, ஏதோ, “ நெருப்பைக் கட்டிக்கொண்டு வாழ்கின்றோம் .” என்று சொல்வதில் நியாயம் இல்லை.


Sunday, July 10, 2011

பூமித்தாயின் மடியில் புதிதாய் ஒரு குழந்தை...

 தென்சூடான் ஒரு பார்வை.....

 தென் சூடான் அடக்குமுறைக்கு எதிராகப் பல ஆண்டுகள் போராடி வந்துள்ளது.  ஆபிரிக்காவின் எண்ணெய் வளமிக்க நாடான சூடானுக்கு 1956 ஆம் ஆண்டு சுதந்திரம் கிடைத்தது.  1989 ஆம் ஆண்டு நடந்த இராணுவப் புரட்சியை அடுத்து  ஒமர் அல் பக்ஷீர் ஆட்சியைப் பிடித்தார். இஸ்லாமிய சட்டத்தை நாடு முழுவதும் நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுத்தார். இதற்கு தென்பகுதியில் கடும் எதிர்ப்பு எழுந்தது. இனக் கலவரம் வெடித்தது. வடக்கில் அரபு முஸ்லிம்களும், தெற்கில் பழங்குடி இன மக்களும், கிறிஸ்துவர்களும் பெரும்பான்மையாக வசித்து வருகிறார்கள். வடக்குத் தங்களைப் புறக்கணிப்பதாக தெற்குவாசிகள் கருதினர்.

தெற்கில் ஏற்பட்ட இனக்கலவரத்தைத் தொடர்ந்து உருவான சூடான் மக்கள் விடுதலை இயக்கம் தெற்கு சூடானைத்  தனியாகப் பிரித்துத் தனி நாடாக அறிவிக்க வேண்டும் என்று கூறி ஆயுத போராட்டத்தை கையில் எடுத்தது. அது முதல் தென் சூடானியர்கள் தங்களது சுதந்திரத்துக்கும் இறைமைக்கும் போராடி வந்திருக்கிறார்கள்.  2005 ஆண்டில்தான் முழுமையான அமைதி உடன்படிக்கை எழுதப்பட்டது. அதன்படி 2011 இல் நேரடி வாக்கெடுப்பு (referendum)  நடத்தி நாட்டை பிரிப்பது என்று முடிவானது.  2011 சனவரி 15 இல் நடந்த வாக்கெடுப்பில் 99  விழுக்காடு மக்கள்  தெற்கு சூடான் தனியாகப் பிரிவதற்கு  ஆதரவு தெரிவித்தார்கள்.

தென் சூடான் விடுதலைப் போரில் 20 இலட்சம் மக்கள் கொல்லப்பட்டார்கள். பல இலட்சம் மக்கள் இடம்பெயர்ந்தார்கள். பலர் நாட்டைவிட்டு ஒடி வேறுநாடுகளில் அரசியல் தஞ்சம் புகுந்தார்கள்.  அளவிட முடியாதவாறு நாட்டின் உள்கட்டமைப்பு அழிவுக்கானது.  சமூக, பொருளாதார வாழ்க்கை சிதைக்கப்பட்டது.  பள்ளிக்கூடங்கள் மூடப்பட்டதால் கல்வி தடைபட்டது.  பல தலைமுறைகள் பள்ளிக்கூடங்களுக்கே போகவில்லை. மருத்துவமனைகள் இல்லாததால் ஆயிரக்கணக்கான மக்கள் இறந்துபட்டார்கள். தென் சூடான் அமெரிக்கா இரண்டு நூற்றாண்டுக்கு முன்னர் இருந்த நிலைக்குப் பின்தள்ளப்பட்டு விட்டது எனலாம்.

கடந்த மே மாதம் வட சூடானின் படைகள்  எல்லையில் உள்ள சர்ச்சைக்குரிய  எண்ணெய் வளம் கொண்ட அப்யேய் (Abyei) நகரத்தைக் கைப்பற்றியது. அப்போது மூண்ட சண்டையில் 100,000 மக்கள் இடம் பெயர்ந்தார்கள்.  கடந்த மாதம்  தென் கோர்டொபொன் (South Kordofan) என்ற  பகுதியில் சண்டை நடந்தது.  அதன்போது  பல்லாயிரக்கணக்கான மக்கள் இடம் பெயர்ந்தார்கள்.

சுதந்திரத்துக்குப்  பின்னர் நாடு செழிக்கும் வாழ்வு மலரும் என மக்கள் நம்புகிறார்கள். புதிய அரசு இலேசில் தீர்வுகாண முடியாத பல சிக்கல்களுக்கு முகம் கொடுக்க வேண்டியுள்ளது. முதலில் நிலம் தொடர்பான தகராறுகள்,  வட  சூடானுக்கும் தென் சூடானுக்கும் இடையிலான எல்லைபற்றிய  பூசல்கள தீர்க்கப்பட வேண்டும்.   மக்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பட வேண்டும். புதிய சட்டங்கள் இயற்றப்பட்டு  புதிய  நீதி முறைமை உருவாக்கப்பட  வேண்டும்.  சிதைந்த உள்கட்டமைப்பு  மீள்கட்டியெழுப்ப வேண்டும். வெளிநாட்டு உதவிகளில் தங்கியிருப்பதை ஒழிக்க வேண்டும்.  இவற்றைப் பன்னாட்டுச் சமூகத்தின் ஆதரவோடும் நல்லெண்ணத்தோடும் செய்து முடிக்கலாம் என தென் சூடானின் தலைவர்கள் நினைக்கிறார்கள்.

தென் சூடானின் விடுதலைப் போராட்டத்தின் போது அமெரிக்காவில் உள்ள பலர்  ஆதரவு வழங்கினார்கள்.  பன்னாட்டு மீட்பு குழு (International Rescue Committee) மருத்துவம் மற்றும் தூயநீர் போன்ற அவசர உதவிகளை வழங்கியது.

தென் சூடானின் சுதந்திர நாளான யூலை 09  நள்ளிரவில் தேவாலயங்களில் மணி அடிக்கப்படும். பறைகள் கொட்டப்படும். பொது இடங்களில் மெழுகுவர்த்தி ஏற்றப்படும். புதிய தென் சூடானிய குடியரசு செழிப்புற பிரார்த்தனைகள்  செபிக்கப்படும்.

சூடானின் ஆட்சித்தலைவர் ஓமர் ஹசன் அல்-பஷீர் மற்றும் அய்யன்னா மன்றத்தின் செயலாளர் நாயகம்,  தென் சூடானின் ஆட்சித்தலைவர் சல்வா கிர் (Salva Kirr) ஆகியோர் உரையாற்றுவார்கள்.

முப்பது ஆபிரிக்க  நாடுகளின் அரச தலைவர்கள்,  வெளியுறவு அமைச்சர்கள், தூதுவர்கள் இந்த வரலாற்றுப் புகழ்படைத்த நிகழ்ச்சியில் நேரில் கலந்து கொள்வார்கள்.  தென் சூடான் நாட்டுத் தொலைக்காட்சி சுதந்திர நாள் நிகழ்ச்சியை  நேரடி ஒளிபரப்புச் செய்யவுள்ளது.  குழப்பங்கள் எதுவும்  நடைபெறுவதைத் தடுக்குமுகமாக தென் சூடானின் பாதுகாப்புப் பலப்படுத்தப்பட்டுள்ளது.

தென் சூடானின் சுதந்திரத்தை தென் சூடானிய சட்டமன்ற அவைத்தலைவர் ஜேம்ஸ் வானி இகா (James Wani Igga) 21 துப்பாக்கி வேட்டுக்கள் மத்தியில் பிரகடனப்படுத்துவார்.  ஆட்சித்தலைவர் தென் சூடான் குடியரசின் ஆட்சித்தலைவராக பதவி உறுதிமொழி எடுத்துக் கொள்வார். அதனைத் தொடர்ந்து இராணுவ அணிவகுப்பு இடம்பெறும்.

தென்  சூடான் குடியரசு ஆபிரிக்காவில் 54  ஆவது நாடாகவும் அய்யன்னா அவையில் அதன் 193 ஆவது உறுப்பினராகவும் மலரப் போகிறது.

1800 லும் 1900 லும் சூடானில் எண்ணெய் கண்டு பிடிக்கப்பட்டது. அதனை அடுத்து அந்த எண்ணெய் வளத்தைக் கையகப்படுத்த அமெரிக்கா, அய்ரோப்பா மற்றும் சீனா தங்களுக்குள் போட்டி போடுகின்றன. மேற்கு நாடுகளை நம்பாதஓமர் ஹசன் அல்-பஷீர் தனது நாட்டின் எண்ணெய் வளத்தையும் அது தொடர்பான உரிமைகளையும் சீனாவுக்குக் கொடுத்துவிட்டார். ஒரு முதலாளித்துவ நாட்டுக்குள்ள பெரும் உற்சாகத்தோடு அந்த எண்ணெய் வளத்தை சீனா சுரண்டிக் கொண்டிருக்கிறது.

மேலே குறிப்பிட்டது போல் தென் சூடான் கிறிஸ்தவ கருப்பு இன ஆபிரிக்க மக்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதியாகும்.  அவர்கள் நீண்ட காலமாக வட சூடானில் பெரும்பான்மையாக வாழும்  அராபியர்களால்  ஒடுக்குமுறைக்கு உள்ளாகி வந்தனர்.   வட சூடானின் ஒடுக்குமுறையின் உச்சக்கட்டமாக சூடானின் டாவூர் மாகாணத்தில் கொடூரமான இனப்படுகொலைகள் 2003 இல் தொடங்கியது.  ஆனால் இது தொடர்பான தகவல்கள் மிகவும் காலம்கடந்தே உலகுக்குத் தெரிய வந்தது.  டாவூர் மாநிலத்தில் இதுகாலவரை சுமார் 2 இலட்சம் மக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளார்கள். அப்போது இரண்டு போராளிக் குழுக்கள் டாவூர் மக்கள் திட்டமிட்ட புறக்கணிப்புக்கு உள்ளாக்கப்படுவதாகக் குற்றம் சாட்டி சூடானுக்கு எதிராகத் தாக்குதல் தொடுத்தார்கள். சூடான் பதில் தாக்குதல் தொடுத்தது. சூடானிய வான்படை வான் தாக்குதலை நடத்தியது. சூடான் இராணுவம்  அராபு ஜன்ஜாவீட் (Janjaweed)  ஆயுதக் குழுவுக்கு ஆயுதங்கள்  வழங்கியது.  இரு குழுக்களுக்கும் இடையிலான சண்டை இரண்டரை ஆண்டுகள் நீடித்தது.

டாவூர் இனப்படுகொலை தொடர்பாக பன்னாட்டு குற்றவியல் நீதிமன்றம் சூடான் ஆட்சித்தலைவர் உமர் அல் பசீருக்கு பிடியாணை பிறப்பித்துள்ளது. அராபிய நாடுகளும் ஆபிரிக்க நாடுகளும் அவர் கைது செய்யப்படுவதற்கோ  பன்னாட்டு குற்றவியல் நீதிமன்றத்திடம் கையளிப்பதற்கோ விரும்பவில்லை. அதனால் அவர் சுதந்திரமாக நடமாடுகிறார். அண்மையில் அவர் சீனாவுக்கு உத்தியோகச்  செலவு ஒன்றை மேற்கொண்டு திரும்பியுள்ளார்.  சீனா சூடானின் மொத்த மசகு எண்ணெய் உற்பத்தியில் பாதியை இறக்குமதி செய்கிறது.  அதனால் சூடான் அரசை  எந்த நிபந்தனையும் இன்றி ஆதரிக்கிறது. சீனா சூடானில் மசகு எண்ணெய், பதனிடும் நிலையங்கள்,  விவசாய மேம்பாடு ஆகிய துறைகளில் அதிகளவு முதலீடுகளைச் செய்துள்ளது.

பன்னாட்டுக் குற்றவியல் நீதி மன்றம் பிடியாணை பிறப்பிக்கப் போவதாகத் தெரியவந்ததும் சூடானின் டாவூர் மானிலத்தில் இயங்கி வந்த மேற்குலக உதவி நிறுவனங்கள் பலவற்றின் செயற்பாடுகளை நிறுத்தும்படி சூடான் உத்தரவிட்டது. சூடான் அரசினால் கைவிடப்பட்ட டாவூர் மக்களுக்கு உணவு தண்ணீர் மருந்து வசதிகளை வழங்கிவந்த இந்தத் தொண்டு நிறுவனங்கள் உடனடியாக வெளியேற நிர்ப்பந்திக்கப்பட்டன.

தென்சூடானின் மலர்வு............

உலகின் 193வது தேசமாக பிறப்பெடுக்கின்றது தெற்கு சூடான்.ஆபிரிக்க கண்டத்தில் அளவில் பெரியதும் – கனிம வளம் கொண்டதுமான நாடு சூடான். பல்லாண்டுகளாக வடக்கு – தெற்காக பிளவுண்டு உள்நாட்டு போராக வெடித்து, விடுதலைப் போராக முடிவுக்கு வந்தபோது 1.5 மில்லியன் மக்கள் தம் உயிர்களை இழந்திருந்தனர்.
2005ம் ஆண்டில் ஏற்படுத்தப்பட்ட அமைதி உடன்பாடு குருதி தோய்ந்த இந்த உள்நாட்டுபோரை முடிவுக்கு கொணர்ந்தது. அத்துடன் சூடானை இரண்டாக பிரிக்க மக்கள் வாக்கெடுப்பு நடத்த வேண்டும் எனவும் முடிவு செய்யப்பட்டது.
பல்வேறு நெருக்கடிகள் தோன்றியபோதும் அமைதி உடன்பாடு முறிபடாமல் பேணபட்டதால் 2011-ம் ஆண்டு ஜனவரி மாதம் வாக்கெடுப்பு நடத்தப்பட்டு அதில் மக்கள் ஆணையும் பெறப்பட்டது.
அதன்படி யூலை 9ம் நாள் ‘தென் சூடான்’ என்னும் புதிய தேசம் பிறப்பெடுத்தது.
அதனை வட சூடானும் ஏற்று ஒப்புதல் வழங்கியுள்ளது.
அதன் தலைநகரம் Juba.

தென் சூடானின்  அதிகாரபூர்வமான தேசிய கீதம்(வீடியோ இணைப்பு)



சில புகைப்படங்கள் உங்களுக்காக.........
   
 


                                                                                                         நன்றி - இணயம்.