Sunday, May 31, 2020

தாலியின் ஒன்பது இழைத் தத்துவம்...


தாலி என்பது ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே
திருமண பந்தத்தை ஏற்படுத்தும் ஓர் அடையாளம் ஆகும்.
தாலி.
குங்குமம்.
மெட்டி.
அணிந்துள்ள ஒரு பெண் திருமணமானவள் என்பதை வெளிப்படுத்துகிறது.

இந்த தாலி பொன்னால் இருக்க வேண்டியது அல்ல. மகிமை நிறைந்த மஞ்சளால் கூட ஆகியிருக்கலாம்.

இந்துக்களுக்கு மஞ்சள் நிறம் புனிதமான நிறம் என்பதால் அந்த திருமணப் பரிசும் மஞ்சள் நிறத்தில் தரப்பட்டது.
தமிழர் திருமணங்களில் ஆரம்பத்தில் தாலி இருந்ததாக இலக்கியங்களில் குறிப்பிடப்படவில்லை.

சங்க காலத்தின்போது நடந்த திருமணங்களில் புதுமணல் பரப்பி விளக்கு ஏற்றி வயதில் மூத்த பெண்கள் மண பெண்ணை நீராட்டி வாழ்த்தி அவள் விரும்பியவனுடன் அவளை ஒப்படைத்தனர். நாளடைவில் தாலம் என்ற பெயர் தான் தாலியாக மாறியிருக்கிறது.

பதினோராம் நூற்றாண்டில் தான் தாலி என்ற பெயர் உபயோகப்படுத்தப்பட்டது என்கிறது உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்டிருக்கும் தமிழர் திருமணம் என்கிற புத்தகம். மாங்கல்யச் சரடானது ஒன்பது இழைகளைக் கொண்டது.

ஒவ்வொரு இழைகளும் ஒவ்வொரு நற்குணங்களைக் குறிக்கிறது.

திருமணத்தின் போது பெண் கழுத்தில் கட்டுப்படுகிற மாங்கல்ய தாலிக் கயிறானது ஒன்பது நுல் இழைகளைக் கொண்டது.
அந்த ஒன்பது இழைகளுக்கும் ஒவ்வொரு பொருளுண்டு.

1.தெய்வீகக் குணம்.
2.தூய்மைக் குணம்.
3.தொண்டு.
4.தன்னடக்கம்.
5.ஆற்றல்.
6.விவேகம்.
7.உண்மை.
8.உள்ளதை உள்ளபடி
புரிந்து கொள்ளுதல்
9.மேன்மை.

இத்தனைக் குணங்களும் ஒரு பெண்ணிடம் இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் ஒன்பது இழைகள் கொண்ட திருமாங்கல்யச்சரடு அணியப்படுகிறது...

Tnx- Face book