Wednesday, June 22, 2011

இவங்க ஏன் தான் இப்படியோ????

ஏன் பெண்கள் இவ்வாறு பேசுகிறார்கள்....?
காதல் அரும்பிய புதிதில், காதலர்கள் பேசும் பேச்சில் நேரம் போவதே தெரியாது.(அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் விடம் என அறியாதவர்கள்..) அந்த பேச்சில் அவ்வளவு சுவாரசியம் இருக்கும்.இதில் பெரிய வேடிக்கை என்னவென்றால், அவ்வளவு நேரம் என்ன பேசினோம் என்றே தெரியாவிட்டாலும் கூட, அவர்கள் தொடர்ந்து எதையாவது பேசிக்கொண்டே இருப்பார்கள். பெண்கள் பொதுவாக சுற்றி வளைத்துத்தான் பேசுவார்கள். ஒன்றை எதிர்பார்த்துக் கொண்டு வெளியே வேறு ஒன்றை பேசுவார்கள். (காரணம் அது பெண்மையின் சிறப்பம்சமாம்....)
`நீ என்னை எவ்வளவு தூரம் நேசிக்கிறாய்?' என்று காதலி கேட்டால், அங்கு ஓர் பூகம்பம் வெடிக்கப்போவதாகக் கருதலாம்.அல்லது காதலனுக்குப் பிடிக்காத ஏதோ ஒன்றை அவள் செய்திருக்கிறாள் என்று அர்த்தம். அதை காதலன் ஜீரணித்துக் கொள்ள வேண்டும் என்று எதிர்பார்த்தே இப்படி கேட்கிறாள்.
எதற்காக இப்படி ஒரு பெண் எதற்கெடுத்தாலும் மறைமுகமாகவே பேசுகிறாள்? பெண்கள் எப்போதும் தங்களது தேவைகளை நேரடியாக சொல்வதில்லை. அவற்றை மறைமுகமாக தெரிவிக்கவே விரும்புகிறார்கள். மேலும் புதியதொரு விஷயத்தைப் பற்றி ஊகித்துக் கொள்வதற்காகவும் இப்படி பேசுகிறார்கள்.
இதைப்பற்றி ஆழமாக சிந்தித்துப் பார்த்தால், அதில் பல ரகசியங்கள் புதைந்து கிடக்கின்றன.
மற்றவர்களுடனான உறவை வளர்ப்பதற்கும், போர்க் குணம், எதிர்த்து நின்றல், பிடிவாதம் போன்றவற்றைத் தவிர்க்கவும் சுற்றிவளைத்து பேசுவது உதவுகிறது. மேலும் கருத்து வேறுபாட்டைத் தவிர்க்கவும், மற்றவர்கள் மீது ஆதிக்கம் செலுத்தாமல் இணைந்து போகவும் செய்கிறது. சண்டை போடும் உணர்வு தோன்றாமல் இருக்கவும் இப்படி சுற்றி வளைத்துப் பேசுகிறார்கள்.
மறைமுகப்பேச்சை பெண்களுக்குள் பேசும்போது அவர்களுக்குள் புரிதல் ஏற்படுகிறது. பெண்கள் உண்மையான அர்த்தத்தை புரிந்து கொள்வதில் கெட்டிக்காரர்கள். ஆனால், இதையே ஆண்களிடம் அவர்கள் தெரிவிக்கும்போது எதிர்பார்த்து ஏமாந்து போகிறார்கள். பெண்கள் சுற்றி வளைத்துப் பேசுவதைப் புரிந்து கொள்ளும் ஆற்றல் ஆண்களிடம் இல்லை. இதற்கு மற்றொரு முக்கியமான காரணமும் உண்டு.
ஆண்களின் மூளையானது வேட்டையாடுவது போல தனியொரு விஷயத்தில் மட்டுமே கவனம் செலுத்துகிறது. ஆனால், பெண்களின் மூளை அமைப்பு அப்படி இருப்பதில்லை. அவர்களால் ஒரே நேரத்தில் 5 விதமான சிந்தனைகளில் கூட சுலபமாக ஈடுபட முடிகிறது. அதனால், ஆண்களுக்குப் பெண்களைப் புரிந்து கொள்வதில் சிரமம் ஏற்படுகிறது. பெண்களின் பேச்சு ஒரு கட்டுக்கோப்பாக இல்லை, எந்த ஒரு நோக்கமும் அதில் இருப்பதில்லை என்பது போல ஒரு குழப்பத்தை ஆண்களுக்கு உண்டாக்கும். அதனால், பெண்களுடன் கருத்து வேறுபாடுகள் உண்டாகின்றன. அவர்களை ஆண்கள் அடிக்கடி குற்றஞ்சாட்டுகின்றனர்.
பெண்களின் மறைமுகப்பேச்சு தொழில் புரியும் இடத்தில் பிரச்சினைகளை உருவாக்கக்கூடும். அங்கு நேரிடையான விளக்கங்கள் தான் தேவை. அப்போதுதான் தகவல்கள் எந்த வித குழப்பமும் இன்றி தேவையானவர்களிடம் ஒழுங்காகப் போய்ச்சேரும்.
அதேபோல் ஒரு பெண் ஆணிடம் தொழில் சம்பந்தமாக ஏதாவது பேசினால், அந்த ஆணுக்கு அவள் என்ன பேசினாள் என்பது புரியாவிட்டாலும் கூட, அவன் புரிந்து கொண்டதைப் போலத் தலையாட்டி விடுகிறான். இதைப் பெண் உணர்ந்து கொள்ள வேண்டும். அலுவலகத்தில் பணிபுரியும் ஒரு பெண்ணுக்கு அவளது மேலதிகாரி ஆணாக இருக்கும்பட்சத்தில், அந்த பெண் தனது கோரிக்கையை அவரிடம் கூறும்போது அவர் ஏற்றுக்கொள்ள முடியாத சூழ்நிலை உண்டாகிறது. இதற்கு காரணம் பெண்களின் மறைமுகப்பேச்சு தான். அதனால்தான் ஆண்களின் பார்வையில், பெண்கள் சுற்றி வளைத்துப் பேசுபவர் களாகத் தெரிகிறார்கள்.

Search by Image: கூகுளின் பயனுள்ள புதிய வசதி..





வாசகர்கள் பயன்பெறும் வகையில் அடிக்கடி ஏதாவது ஒரு பயனுள்ள வசதியை கூகுள் வெளியிட்டு கொண்டே உள்ளது. அந்த வரிசையில் கூகுள் இமேஜில் புதிய வசதியாக Search by Image என்ற வசதியை வெளியிட்டுள்ளனர்.நாம் ஏதாவது ஒரு புகைப்படத்தை நம் கணணியில் வைத்திருப்போம். அதே படம் அல்லது அதற்கு தொடர்பான படங்கள் வேறு அளவுகளில் நமக்கு தேவைபடும் பொழுது அந்த நேரங்களில் நாம் வைத்திருக்கும் படத்தின் குறிச்சொல்லை சரியாக கூகுளில் கொடுத்தால் அந்த படங்களை கண்டுபிடிக்க முடியும்.
குறிச்சொல் கொடுப்பதில் தவறு ஏற்ப்பட்டால் அந்த படங்களை கண்டறிய மிகுந்த சிரமம் எடுக்க வேண்டும். ஆனால் இனி இந்த பிரச்சினை இல்லை. நாம் அந்த படத்தை கூகுள் இமேஜில் கொடுத்து தேடினால் அதற்க்கு சம்பந்தமான படங்களை வெவ்வேறு அளவுகளில் சுலபமாக பெற்று கொள்ளலாம்.
உங்களுடைய புகைப்படத்தை கூகுளில் கொடுத்து தேடினால் உங்களுடைய புகைப்படம் எந்தெந்த தளத்தில் உள்ளது என சுலபமாக கண்டறியலாம்.
இந்த பயனுள்ள வசதியை பெற Google Image  இணைய தளத்திற்கு செல்லவும். அங்கு நாம் குறிச்சொல் கொடுக்கும் இடத்தில் ஒரு கமெரா போன்ற புதிய ஐகான் இருப்பதை காண முடியும். அதில் க்ளிக் செய்யுங்கள்.
அந்த ஐகான் மீது க்ளிக் செய்தவுடன் உங்களுக்கு இன்னொரு சிறிய விண்டோ ஓபன் ஆகும். அதில் நீங்கள் தேட விரும்பும் படத்தின் URL தெரிந்தால் அந்த URL அங்கே கொடுத்து தேடவும்.
புகைப்படம் உங்களுடைய கணணியில் இருந்தால் Upload an Image என்ற லிங்க் க்ளிக் செய்து உங்கள் புகைப்படத்தை பதிவேற்றம் செய்து தேடவும். உங்கள் புகைப்படத்தை டிராக்(Drag) செய்து இங்கு கொண்டு வந்தும் தேடலாம்.

                                                                                                      - நன்றி இணையம்.

யூடியூப் வீடியோக்களின் திரையை மாற்றியமைப்பதற்கு.....





நாம் அனைவரும் வீடியோவினை பார்க்க அதிகமாக நாடும் தளம் யூடியூப் ஆகும். இந்த தளத்தில் எண்ணற்ற வீடியோக்கள் உள்ளன. அவற்றில் ஒரு சில வீடியோக்களை புக்மார்க் செய்து வைத்திருப்போம்.யூடியூப் வீடியோவினை நாம் முழுத்திரையிலையோ அல்லது குறிப்பிட்ட வடிவில் மட்டுமே பார்க்க முடியும். யூடியூப் வீடியோக்களை ஓன்லைனில் இருந்த படியே நமக்கு விருப்பமான வடிவில் பார்க்க முடியும். மேலும் இதனுடைய தோற்ற திரையையும் நம்முடைய விருப்பபடி மாற்றியமைத்துக் கொள்ள முடியும். இதற்கு Youtube Embeded Code என்னும் மென்பொருள் உதவி செய்கிறது.
இந்த மென்பொருளை இணையத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து பின் ஒப்பன் செய்யவும். பின் தோன்றும் விண்டோவில் உங்களுக்கு விருப்பமான யூடியூப் வீடியோவில் URLயை உள்ளிடவும்.
பின் அகலம், உயரம், நிறம் போன்றவற்றை மாற்றியமைத்துக் கொள்ளவும். பின் Generate Code என்னும் பொத்தானை அழுத்தி அந்த XHTML கோடினை கணணியில் சேமித்து வைத்துக் கொள்ளவும்.
வேண்டுமெனில் குறிப்பிட்ட திரையிலேயே Perview பார்த்துக் கொள்ளவும் முடியும். பின் சேமித்த XHTML கோப்பை உலவியில் ஒப்பன் செயதால் நீங்கள் வடிவமைத்த வடிவில் வீடியோவானது இருக்கும். இனி வழக்கம் போல வீடியோவினை காண முடியும்.

தரவிறக்க...

                                                                                     - நன்றி இணையம்.

இது கதையல்ல நிஜம்....











Tuesday, June 21, 2011

நெருக்கம் நிலையாவதற்கு....


#
மௌனத்தில் உள்ள வார்த்தைகளையும், உன் கோபத்தில் உள்ள அன்பையும் யாரல் உணர முடிகிறதோ அவர்கள்தான்...உனக்காக படைக்கப் பட்ட உண்மையான உறவுகள்....
#
இதயம் இல்லாத பெண்கள் ஏன் இன்னும் வாழ்கிறார்கள் தெரியுமா..... இதயம் கொடுக்க ஆண்கள் இருப்பதால் தான்..........
#
உண்மையை சில சமயங்களில் அடக்கி வைக்க முடியும்...ஆனால்,,, ஒதுக்கி வைக்க முடியாது....
#
இதயம் வலிக்கும்போது கண்ணீர் வந்தால் அது காதல்... கண்ணீர் வரும்போது இதயம் வலித்தால் அது நட்பு....
#
எதை உன்னால் மாற்றிக் கொள்ள முடியவில்லையோ அதை ஏற்றுக்கொள்... எதை உன்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லையோ அதை மாற்றிக்கொள்...
#
கண்களாக நீ இரு..உன் இமைகளாக நான் இருப்பேன்...இதயமாக நீ இரு... அதில் வரும் துடிப்பாக நான் இருப்பென்...
#
மழை என்பது அழகு... என் காதலியின் மீது விழும் மழையோ பேரழகு..
#
காதலோ நட்போ எந்த வித எதிர்பார்ப்பும் இல்லாமல் பயணிக்குமாயின் கவலைகள் விட்டகலும்..
#
நட்புடன் உருவாகும் காதல் எல்லைகள் தாண்டி இன்பமாக அமையும்..
#
நட்பிலும் சரி காதலிலும் சரி சந்தேகம் வருமாயின் விட்டகன்றுவிடு அதுவே சிறந்தது..

ஜாக்கிரதை நண்பர்களே...


ஒரு கடிதம் அநாதை ஆகிவிட்டது....

சேரும் முகவரி சரியில்லை
அனுப்பிய முகவரி அதில் இல்லை!
ஒரு கடிதம்
அனாதையாகி விட்டது....
ஒரு கடிதம்
அனாதையாகி விட்டது....

பற்பல ஊர்திகளின்
முத்திரை பதிந்து
பற்பல தெருக்களில்
விசாரணை நடந்தது
பற்பல தினங்கள்
பறந்து கடந்தது!

பிறந்த இடத்தின்
பெயரே இல்லை
புகுந்த இடமோ
புரிய வில்லை.

அந்தக்
கடிதத்தை-
அஞ்சல் நிலையங்கள்
ஆராய்ச்சி செய்தன.

ஒட்டியிருந்த
உறையின் உள்ளே
இருந்த தாளில்-
எழுதியிருந்தது
இப்படி:
ஒரு வாரத்திற்குள்
உங்கள்
பதில் வரவேண்டும்
இல்லாவிட்டால்
உயிர்ப்பறவை சிறகடிக்கும்
கடைசி முத்தமிட என்
கல்லறைக்கு வரலாம்”

காதலு‌க்கு‌ம், ‌திருமண‌த்‌தி‌ற்கு‌ம் உ‌ள்ள ‌வி‌த்‌தியாச‌ம்

*சாலையில் கை கோர்த்துக் கொண்டு நடந்து செல்பவர்கள் காதலர்கள்.
*நீ முன்னாடி போன நான் பின்னாடி போவேன் என்று ஆளுக்கொரு பக்கம் போவது தம்பதிகள்.

...*பசி,உறக்கம் மறக்க வைப்பது காதல்.
*இதை மட்டுமே நினைக்க வைப்பது கல்யாணம்

*உறக்கத்தில் காணும் இனிமையான கனவுதான் காதல்.
*அந்த இனிமையான கனவைக் கலைக்கும் கடிகார அலறல் சத்தம்தான் கல்யாணம்

*காதலர்களுக்கு இடையே தொலைக்காட்சிக்கு இடமிருக்காது.
*டிவி ரிமோட்டிற்காக சண்டை போடுபவர்கள் தம்பதிகள்.

*எல்லா குறைகளையும் ரசிப்பவர்கள் காதலர்கள்.
*நிறைகளே கண்ணிற்குத் தெரியாதவர்கள் தம்பதிகள்.

*உயர்ந்த விடுதியில் இரவு உணவு காதல்.
*ஆறிப்போன பார்சல் உணவு தான் கல்யாணம்

*நவீன காரில் நெடுஞ்சாலைப் பயணம் காதல்.
*கல்யாணம் என்பதுபழைய வண்டியில் கரடுமுரடு சாலைப் பயணம்

*உலகத்தையே மறந்திருப்பவர்கள் காதலர்கள்.
*ஒருவரையொருவர் மறந்திருப்பவர்கள் தம்பதிகள்.

*காதலிக்கும்போது ஊர் விஷயங்களைப் பற்றி காதலர்கள் பேசுவார்கள்.
*திருமணத்திற்குப் பிறகு இவர்களைப் பற்றி ஊரேப் பேசும்.

*குழந்தைகளின் செல்லக் கொஞ்சல் காதல்.
*அவர்களின் முரட்டுப் பிடிவாதம்கல்யாணம்.

*ஒவ்வொன்றையும் கேட்டுவிட்டு செய்வது காதல்
*செய்துவிட்டு தெரிவிப்பது கல்யாணம்.

*எல்லா தவறுகளையும் ரசிப்பவள் காதலி.
*எல்லா செயல்களையும் குறைசொல்பவள் மனைவி.

*அவர் இல்லாத இடம் நரகமாக இருக்கும்.
*கல்யாணத்திற்குப் பின் அவர் இல்லாத இடமே சொர்க்கம் என்றிருக்கும்.

*பல மணி நேர தொலைபேசி உரையாடல்
*திருமணத்திற்குப் பின்பும்தான்,அவரவர் நண்பர்களுடன்.

*போட்டி போட்டுக்கொண்டு விட்டுக் கொடுப்பார்கள்.
*போட்டி போட்டுக் கொண்டு சண்டை போடுவார்கள்.

Monday, June 20, 2011

காத்திருப்பு தந்த பரிசு...



காத்திருக்க சொல்லிவிட்டுச் சென்றாய்
வருவேன் என்று-வந்தாய்
என் காதலியாக அல்ல
இன்னொருவன் மனைவியாக!!!!


காத்திருக்கும் காதலனை
மறக்காத மங்கையவள்
கணவனைவிட்டு
தனியாகத்தானே வந்திருப்பாள்!!!!


கணவனை விட்டுத்தான் வந்தாள்-ஆனால்
அவனை மறக்காமல் இருக்க 
அவன் கொடுத்த
குழந்தையை தூக்கிவந்தாள்!!!!

அப்படி இருக்காது
நாகரீக நங்கையவள்
கொடுத்தவனிடமே 
கொடுக்கவந்திருப்பாள்
குழந்தையை!!!! 



இசைப்புயலின் அவதாரம்..........

ஒஸ்கார் உட்பட ஏராளமான விருதுகளைக் குவித்திருக்கும் எம் இசைப்புயல் அனைத்திலும் வித்தியாசமானவர். அதனால் தான் என்னவோ தெரியவில்லை தன் குரு பக்தியின் மேலீட்டால் அவரின் பாடல்களை/பாடல்களின் மெட்டை தன் மூலமாக வைத்து அநேமான சூப்பர்ஹிட் பாடல்களைக் கொடுத்துள்ளார்.இப்படி ஓர் மாணவன் கிடைக்க அந்த குரு மிகவும் பெருமைப்பட்டே  ஆக வேண்டும். இசைப்புயலின் குருபக்தி மேலும் வளர எனது வாழ்த்துக்கள்.....

என் முதற் காதல்

முகவரி
சரியாக எழுதப்படாத
ஒரு கடிதம்
எங்கெங்கோ சென்று
முட்டி மோதி அலைந்து விட்டு
என்னிடமே திரும்பிவிட்டது!!!

                                              - மு.மேத்தா

Sunday, June 19, 2011

சமூகச் சீர்திருத்தவாதிகள் எனச்சொல்லிக் கொள்ளும் கோமாளிகளே......

அனைவருக்கும் வணக்கம்!!!!!!!!!!!!!!!!
குறிப்பாக தம் விளம்பரங்களுக்காக தம் சமூகத்தை சீர்திருத்துவதாக எண்ணிக்கொண்டு சமூகத்தை படுகுழிக்குள் தள்ளிக் கொண்டிருக்கும் சமூகச்சீர்திருத்தக் கோமாளிகளிக்குச் சிறப்பு வணக்கம்.....!!!!

அண்மையில் ஏற்பட்டுவரும் திடீர் நாகரீகமாற்றங்களினால் எம் சமூகம் பெரும் பாதிப்பினை எதிர் நோக்கிவருவது யாவரும் அறிந்த ஓர் வேதனைப்படக்கூடிய விடயம். ஆனால், இதனையே தம் ஆதாயத்துக்காகவும்  சுயநலங்களுக்காகவும் சிலர் இணையத்தளத்தில் ஓர் விளம்பரப்படுத்தி வருகின்றனர்.இது எவ்வளவு கவலைகுரிய விடயமாகும்.தன் சமூகத்தினை தாமே கொச்சைப்படுத்தும் ஓர் நிகழ்வாகும்.

உதாரணத்திற்கு, யாழ்ப்பாணத்தில் இடம் பெற்ற சில நிகழ்வுகளை தமது சுயநலனுக்காக திரிவுபடுத்தி தம் இணையத்தளங்களில் பிரசுரித்து வருகின்றனர்.இது மிகவும் கேவலம் கெட்ட கீழ்த்தரமான செயலாகவே நான் கருதுகின்றேன்.

அண்மையில் இணையத்தளத்தில் வரும் விடயங்கள் வாசிப்பதற்கு மிகவும் வேதனைப் படக்கூடியதாக இருந்தது.அதில் குறிப்பிடப்பட்டவை சில வேளைகளில் உண்மையாக இருந்தாலும் அவற்றை மூடிமறைப்பதால் சில நன்மைகள் உண்டாகும் என்பதே எனது உள் கருத்து.

சரி!! நீங்கள் இச் சமூகத்தின் நலனில் அக்கறை கொண்டவர்களாகவே வைத்துக் கொள்வோம். நீங்கள் சொல்ல விரும்பும் விடயங்களை சூட்சுமமாக சொல்லி விளங்கப்படுத்துவீர்களேயானால் உங்கள் வெற்றி அதில் தங்கி இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

எல்லோராலும் கலாசார பூமி என சித்தரிக்கப்படும் யாழ் மண்ணின் புணிதத்தன்மையினை சீர்குலைக்கும் வகையில் சில துர்க்குணம் கொண்ட ஜந்துக்கள் செயற்பட்டு வருகின்றன.அந்த ஜந்துக்கள் நாகரீகம் என்ற போர்வையின் கீழ் இத்தகய செயற்பாடுகளை செய்தவண்ணம் உள்ளனர்.

இவ்வாறான கெட்ட சம்பவங்களை தமது இணையத்தளங்களில் பிரசுரிக்கும் என் இனமே...!!!!!!
உன்னை ஒன்று கேட்டுக் கொள்கின்றேன்...’
நீ போடும் செய்திகள் அணைத்தும் உண்மை என்றே வைத்துக் கொள்வோம்..உன் செய்திகள் அணைத்தும் உறுதிப்படுத்தப்பட்டவை என்று சொல்வாயெனில்...அச் சமூகவிரோதிகளை நீ நன்கு அடயாளம் கண்டிருப்பாய். நீ உன் சமுதயத்தில் அக்கறை கொண்டுதான் உன் செய்திகளை இடுகிறாய் எனில்,அவர்களை களை எடுக்கும் நிகழ்வினை தொடங்கிவிடு...அது எதுவாக இருக்க வேண்டும் என்பது உன் ஆளுமையில் உள்ளது.

அதைவிடுத்து அவற்றை பகிரங்கப்படுத்துவதில் எவ்வித பயனும் இல்லை.சமூகத்தில் அக்கறை கொண்டோர் வேதனைப்படுவர்.சிலர் இதையே சாதகமாகப் பயன்படுத்தி மேலும் தப்பு செய்யக்கூடிய வாய்ப்புக்களும் உண்டு.காரணம்”காணாததைக்கண்டதும் ஆசைவருவது”மனித இயல்பு.
 யாழ்ப்பாணத்தில் புளுரூத் (Bluetooth) படும் பாடு, யாழ் பஸ் நிலைய ஆட்டோக்களின் இரகசியம்
இவ்வாறான இடுக்கைகள் தேவைதானா????????????இவ்வாறான இடுக்கைகள் புதிய ஓர் பிழைக்கு இடம் கொடுக்காதா???சற்று சிந்தித்துப்பாருங்கள்.!!!

”””http://www.newjaffna.com/fullview.php?id=NDEwNQ==,http://www.newjaffna.com/fullview.php?id=Mzk5Mg==,http://www.newjaffna.com/fullview.php?id=MzkyOQ==.. ””
இவை தேவையான இடுக்கைகள் தானா????

இந்த இணையத்தள நிறுவனர்களை ஒன்று கேட்கிறேன்????????????????

 உன்வீட்டில் ஒரு அசம்பாவிதம் நிகழ்ந்தால் இவ்வாறுதான் செய்வாயா???
வீட்டிற்குள்ளேயே பேசி ஓர் தீர்வெடுக்கமாட்டாய்??? 

 நீ போடும் செய்திகளே சில சமயங்களில் புதிய தவறுகளைச் செய்ய வழிவகுக்கும்.ஜாக்கிரதை!!!!!!!!

 

 

விடுகதையாகிப் போகுமோ???

என் தவறுகளை திருத்திக்
கொள்ளும் வாய்ப்பை
எனக்களித்தால்......

நான் முதலில் காதலை
தான் கைவி டுவேன்....
ஏனெனில்
சிறுகதை என்று
நினைத்தே
காதலில் விழுந்தேன்
ஆனால்...
பலரைப் போலவே அது
எனக்கும் விடையளிக்காத
விடுகதையாகிப் போகுமோ
என்ற பயம் இப்போது....



ஏக்கம்

படைத்தவனுக்குத் தெரியவில்லை-இவன்
பரிதவிப்பு.....
பழகியவளுக்கும் தெரியவில்லை-இவன்
மனத்துடிப்பு...

விலகியது உன் அன்பு
போதாது என்று அல்ல...
நீ கொண்ட அன்பு
அளவு கடந்துவிட்டது என்பதற்காக...

“அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு”

மெளனம்

மௌனமே வார்த்தையாக்கும்
அவள்
மஞ்சத்தில்
என்ன மயக்க மொழிகள்
மறக்கவா போகிறாள்..

கனவு

 
விழியில் பிறந்த நீர் துளி 
என்னை எழுப்பிய பின் தான் தெரியும்.....

உன்னுள் மூழ்கிய தருணம் நனவல்ல கனவென்று...