Saturday, August 20, 2011

திருமணத்திற்கு முன் ......,, திருமணத்தின் பின் ......

திருமணத்திற்கு முன்......


அவன் : இதுதான் கடைசி… இனிமேலும் என்னால காத்திருக்க முடியாது?


அவள் : என்னைக் கைவிட்டுவிடுவீர்களா..


அவன் : என்ன பேசுற நீ… நான் எப்பவுமே அப்படி நினைத்ததில்லை……..


அவள் : என்னை காதலிக்கிறீர்களா…?


அவன் : ஆமா.. அது எனக்குள்ளே உள்ள தாகம்…


அவள் : எப்பவாவது என்னை ஏமாற்ற நினைப்பீர்களா…?


அவன் : ஏன் இப்படி கேவலமா சிந்திக்கிற….


அவள் : என்னை முத்தமிடுவீர்களா…?


அவன் : ம்ம்ம்… வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம்…


அவள் : என்னை அடிப்பீர்களா?


அவன் : என்னம்மா இது… நான் அந்தமாதிரி ஆள் இல்லை….!


அவள் : நான் உங்களை நம்பலாமா?


அவன் : ம்ம்ம்.


அவள் : அன்பே…!


திருமணத்தின் பின்…. அப்படியே கீழிருந்து மேல் நோக்கிப்படிக்கவும் 
         
                                                                                                                               
                                                                                                                        படித்ததில் பிடித்தது..- நன்றி இணையம்

Tuesday, August 16, 2011

ஜாக்கிரதை இப்படியும் நடக்கலாம்...

இணையத்தில் அரட்டை அடித்தல் இளையோர்களுக்கு மிகவும் பிடித்தமான விடயம். இந்த அரட்டை காரணமாக இளையோர்கள் மத்தியில் மிகவும் பிரபலம் ஆகி இருக்கின்ற மந்திர வார்த்தை asl plz என்பதாகும். இதில் a என்பது age ஐயும், s என்பது sex ஐயும், l என்பது location ஐயும் குறிக்கின்றன. இளையோர்களின் இணைய அரட்டையை மையப்படுத்தி இந்தியாவில் குறும்படம் ஒன்று எடுக்கப்பட்டு உள்ளது. இதற்கு asl plz என்றுதான் பெயர் வைத்து உள்ளனர். இணைய உலகில் இக்குறும்படம் பிரபலம் அடைந்து வருகின்றது. இளைஞன் ஒருவர் ஒன் லைனில் யுவதி ஒருவரை கண்டு பிடிக்கின்றார். பரஸ்பரம் இணையத்தில் கண்டு கொள்ளாமலேயே இருவருக்கும் ஒருவரை ஒருவர் பிடித்து விடுகின்றது.


இருவரும் இன்ரநெட் கபே ஒன்றில் சந்திக்கின்றமைக்கு தீர்மானிக்கின்றனர். மிகுந்த ஆவலுடன் கபேயில் காத்து இருக்கின்றார் யுவதி. பல எதிர்பார்ப்புகளுடன் வந்து சேர்கின்றார் இளைஞன். ஒருவரை ஒருவர் சந்திக்கின்றமைக்கு முன்பாக இருவர் மனதிலும் எத்தனையோ எண்ணங்கள் அலை மோதுகின்றன. ஒருவரை ஒருவர் கண்டு கொள்கின்றார்கள். ஆனால் இருவரது இதயமும் சுக்கு நூறாக வெடித்து விடுகின்றது. ஏன் என்று குறும்படத்தை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.


                                        நன்றி-இணையம்.
இந்த குறும்படம் இணையத்தள சமூக வலையமைப்புக்களை தவறாகப்பயன்படுத்துபவர்களுக்கு நல்லதோர் பாடமாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.

Monday, August 15, 2011

நிழலாக நீயா...???

அனைவரும் கூறும்
கூற்று ஒன்று
என்றும் நீ கலங்காதே!!!
உன்
நிழலாக நான் என்றும் வருவேன்...

ஆனால்
நீ
நிழலானது தான் இங்கு
பிரச்சினையே!!!

வெளிச்சத்தில் மட்டுமே
என்னுடன் வரும் உன்னை
எவ்வாறு நான்
ஏற்றுக்கொள்வது...?



சந்தோசத்தில் மட்டும் தான்
என்னுடனா???
இருட்டில் என் நிலை
என்னவாவது???

ஆதலினால்
நிழலாக நீ எனக்குத் தேவையில்லை.

நேரத்திற்கு நேரம்
உருமாறும் உன்னுடன்
எவ்வாறு நான்
நின்மதியாய் இருப்பது???


ஆதலினால்
நிழலாக நீ எனக்குத் தேவையில்லை.


சில நேரங்களில்
நீ
என் காலுக்கடியில் போகநேரிடுமே!!!
உன்னால் அது முடியாதே...


ஆதலினால்
நிழலாக நீ எனக்குத் தேவையில்லை.


நிலையில்லா உருவமற்ற
நிழலே!!!!
நீ,
என்றுமே எனக்குத் தேவையில்லை.

                                                                                              இ.சுகானன்.