பொதுவாக நாம் ஆய்வுக்கூடங்களில் செய்கின்ற மரபு ரீதியான இரசாயனவியல் சோதனைகளுக்கு 5-10 mg இரசாயன பதார்த்தங்களும் 25 - 500 ml கனவளவுடைய உபகரணங்களும் பயன்படுத்தப்படுக். ஆனால் இந்த சிற்றளவிலான இரசாயனவியலில் மிகச் சிறிதளவு இரசாயனப் பதார்த்தங்களை தான் நாங்கள் பயன்படுத்த போகிறோம். இதற்கென எடுக்கும் காலம், செலவு எல்லாமே மிகக் குறைவானதாகும். இது மரபுரீதியான முறைகளை விடப் பாதுகாப்பானதாகும்.
சிற்றளவிலான இரசாயனவியலும் பாதுகாப்பும்
மிகக் குறைந்த அளவிலான இரசாயன பதார்த்தங்களைப் பயன்படுத்தி இரசாயனவியற்சோதனைகளை மேற்கொள்வது சிற்றளவிலான இரசாயனம் எனப்படும்.
பாடசாலைகளில் விஞ்ஞான பாடத்திற்குரிய சோதனைகளை மேற்கொள்ளும் போது இந்த முறை மிகச் சிறந்த இரசாயன ரீதியான பாதுகாப்பை வழங்கும். சிற்றளவிலான இரசாயனவியல் மூலமாக இரசாயன ரீதியாகவும் பாதுகாப்பு ஏற்படும் விதங்கள் வருமாறு.
1. இரசாயன பதார்த்தங்களுடன் தொடுகையுரல் இழிவாதல்
சிற்றளவிலான இரசாயனவியல் சோதனைகளை மேற்கொள்ளும் போது பயன்படுத்தப்படும் ஒட்டுமொத்த இரசாயன பதார்த்தங்களின் அளவு மிகக் குறைவானதாகும்.
மிகக் குறைவான அளவு இரசாயனப் பதார்த்தங்களை பயன்படுத்துவதால் அபாயகரமான பதார்த்தங்களை கையாள வேண்டிய சந்தர்ப்பங்கள் குறைவதனால் அவற்றை முகர நேரிடும் ஆபத்து தோலில் படுதல் அல்லது உடலில் சேருதல் குறைவடைதல் போன்றவாறான பாதுகாப்பான சூழல் கிடைக்கின்றது.
2. விபத்துக்களில் இருந்து பாதுகாத்தல் அல்லது விபத்தை முகாமை செய்தல் அல்லது விபத்து முகாமை மேம்படல்
இங்கு சிறிதளவான இரசாயன பதார்த்தங்களை பயன்படுத்தவதால் கட்டுப்பாடு மற்றும் முகாமை செய்தல் ஆகியன இலகுவானதாக காணப்படும். இதன் மூலமாக அளவீடுகளைப் பெற்றுக் கொள்வதும் அதனை கையாள்வதும் இலகுவாக அமைவதுடன் எதிர்பாராத இடைத் தாக்கங்கள் ஏற்படல் ஆகியவற்றுக்கான இயல்தகவு குறைவடையும்.
3. சூழல் தாக்கம் இழிவளவாதல் அல்லது சூழல் மாசுக்களை குறைத்தல்
இங்கு பயன்படுத்தும் இரசாயனப் பதார்த்தங்களின் அளவு மிகக் குறைவாக காணப்படுவதனால் சூழலுக்கு வெளியேற்றப்படும் கழிவுகளின் அளவு அதாவது இரசாயன கழிவுகளின் அளவும் மிகக் குறைவானதாகவே காணப்படும். சிற்றளவிலான இரசாயனவியலின் மூலமாக உருவாகும் இரசாயனப் பதார்த்தங்களின் அதாவது கழிவு பதார்த்தங்களின் அளவு குறிப்பிடத்தக்க அளவு குறைவானதாகவே இருக்கும். இதன் காரணமாக கழிக்கப்படும் இரசாயனப் பதார்த்தங்களின் அளவு குறைவடைவதால் சூழல் தாக்கம் குறைவடைவதுடன் கழிவு பதார்த்தங்களை இலகுவாக முகாமை செய்வதுடனும் இங்கு பயன்படுத்தும் இரசாயனப் பதார்த்தங்களின் அளவு குறைவாக இருப்பதனால் இரசாயன பதார்த்தங்களுக்காக செலவிடும் பணத்தின் அளவும் குறைவாகவே காணப்படும். இதன்பேறாக நிலைபேறான தன்மை, பொறுப்புணர்வுடன் கூடிய வளப் பயன்பாடு ஆகியன மேம்பாடும்.
4. சுத்தமாக்கும் செயல்முறை இலகுவாதல்
சிற்றளவிலான இரசாயனவியலில் சிறிதளவான இரசாயனப் பதார்த்தங்களே பயன்படுத்தப்படுவதால் கசிவுகள் அல்லது விபத்துகளின் போது அதனை சுத்தம் செய்யும் நடைமுறை இலகுவாக அமையும். இது அபாயகரமான பதார்த்தங்களின் பரவுகையை குறைப்பதற்கு உதவுவதுடன் விரைவாகவும் பயனுறுதி மிக்கதாகவும் சுத்தம் செய்ய முடிவதனால் ஆபத்துக்கள் குறைவாகும்.
5. அணுகுமுறை அதிகரித்தல்
இன்றளவும் பாடசாலைகளில் இரசாயனப் பதார்த்தங்கள் இல்லை என காரணம் காட்டி ஆய்வுகூடப் பரிசோதனைகளை தவிர்க்கின்றமையை காணக்கூடியதாக இருக்கின்றது. ஆனால் இங்கே மட்டுப்படுத்தப்பட்ட வளங்கள் கொண்ட அல்லது ஆய்வு கூட வசதிகளை போதிய அளவில் கொண்டிடாத பாடசாலைகளுக்கு கூட சிற்றளவிலான இரசாயனவியல் மிகவும் பயனுள்ளதாக அமையும். காரணம் இரசாயனப் பதார்த்தங்கள், உபகரணங்கள் மற்றும் வளங்கள் சிறிதளவில் தேவைப்படுவதால் பாடசாலை முறையில் போதிய அளவு பாதுகாப்பு தர நியமங்களை பேணியவாறு செயல்முறை ரீதியாக இரசாயனவியலை கற்பதற்கும் இதனைப் பயன்படுத்தலாம். அதே நேரத்தில் இங்கு மிக சொற்ப அளவிலான இரசாயனப் பதார்த்தங்களை பயன்படுத்துவதனால் இரசாயனவியல் பரிசோதனைகளை மேற்கொள்ளும் போது ஏற்படும் விபத்துக்கள் தொடர்பான அச்ச உணர்வு இன்றி இந்த பரிசோதனைகளை மேற்கொள்ளக் கூடியதாக இருக்கும்.
6. மாணவர்களது பங்கேற்பினை அதிகரித்தல்
மரபு ரீதியான ஆய்வுகூடப் பயன்பாடுகளில் அதாவது இரசாயனவியல் பாடங்களின் போதான செயற்பாடுகளின் போது ஆசிரியர் மையமாகவே இந்த பரிசோதனைகள் இடம்பெறுவது வழமை. ஆனால் சிற்றளவிலான இரசாயனவியல் சோதனைகளின் மூலம் மாணவரது பங்கேற்பனை அதிகரித்துக் கொள்ள முடியும். மாணவர்களால் அண்மித்த வகையிலும் நேரடியாகவும் சோதனைகளை செய்ய முடிவதுடன் அதிக விளக்கத்தையும் பெற்றுக் கொள்ள முடியும். சிறிய அளவு இரசாயன பதார்த்தங்களின் பயன்பாடு காரணமாக அதிகளவானோருக்கும் அதிக எண்ணிக்கையிலான சிறு குழுக்களுக்கும் சோதனைகளை மேற்கொள்வதற்கு வாய்ப்புகள் கிட்டுவதால் பாதுகாப்பான சூழலில் மாணவரது பங்கேற்பு மற்றும் இடைவினைகளை மேம்படுத்திக் கொள்ள முடியும்.
7. எண்ணக்கரு உருவாக்கம் உறுதிபெறுதல்
சிற்றளவிலான இரசாயனவியலின் பயன்பாட்டின் மூலமாக பெரிய அளவிலான செய்து காட்டல்களின் மீது தங்கி இருக்காது இரசாயன தாக்கங்களின் அடிப்படை கோட்பாடுகள் மற்றும் என்ன கருக்கல் பற்றிய சுயதர்க்கத்திற்கு வழி கிடைக்கும். இந்த அணுகுமுறை மாணவர் பாதுகாப்பிற்கு முதலிடம் வழங்குவதுடன் இதன் மூலம் இரசாயனவியல் தொடர்பான ஆழமான எண்ணக்கரு ரீதியான விளக்கத்தை விருத்தி செய்துகொள்ளச் சந்தர்ப்பம் கிடைப்பதுடன் மாணவர் பாதுகாப்பானதும் கட்டுப்பாடானதுமான சூழலில் இரசாயன தாக்கங்களை ஆய்ந்தறிந்து அறிய முடிவதுடன் அவர்களது கற்றல் அனுபவங்களையும் விருத்தி செய்து கொள்ள வழி ஏற்படும்.
சிற்றளவிலான இரசாயனவியல், இரசாயன ரீதியான பாதுகாப்பை அதிகரிப்பதுடன் அதன் போது சரியான பாதுகாப்பு நடைமுறைகள் மற்றும் நியமங்கள் கடைப்பிடிக்க வேண்டி ஏற்படும். தனியார் பாதுகாப்பு உபகரணங்களைப் பயன்படுத்தல் பாதுகாப்பு வழிகாட்டல்களைப் பின்பற்றல், போதிய காற்றோட்டம் உள்ள சூழலில் சோதனைகளை மேற்கொள்ளல், இரசாயன பதார்த்தங்களை சரியாக களஞ்சியப்படுத்தல் ஆகியன இதில் உள்டங்கும். பாதுகாப்பான சூழலைப் பேணுவதற்கு ஆசிரியர்கள் மற்றும் போதனாசிரியர்கள் நாள்தோறும் பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்றுதல் மற்றும் கண்காணிப்பை மேற்கொள்ளல் ஆகியன மிக முக்கியமானதாகும்.
Sample Videos and Photos
1. Inter diffusion of Gases| Small Scale Chemistry Techniques
2. Electrolysis of water | Small Scale Chemistry Technique
தாய்லாந்திலிருந்து வந்த குழுவினர் எமக்கான இப் பயிற்சியினை வழங்கியிருந்தனர். அவர்களுடனான சில பதிவுகள்,
No comments:
Post a Comment