Wednesday, June 22, 2011

யூடியூப் வீடியோக்களின் திரையை மாற்றியமைப்பதற்கு.....





நாம் அனைவரும் வீடியோவினை பார்க்க அதிகமாக நாடும் தளம் யூடியூப் ஆகும். இந்த தளத்தில் எண்ணற்ற வீடியோக்கள் உள்ளன. அவற்றில் ஒரு சில வீடியோக்களை புக்மார்க் செய்து வைத்திருப்போம்.யூடியூப் வீடியோவினை நாம் முழுத்திரையிலையோ அல்லது குறிப்பிட்ட வடிவில் மட்டுமே பார்க்க முடியும். யூடியூப் வீடியோக்களை ஓன்லைனில் இருந்த படியே நமக்கு விருப்பமான வடிவில் பார்க்க முடியும். மேலும் இதனுடைய தோற்ற திரையையும் நம்முடைய விருப்பபடி மாற்றியமைத்துக் கொள்ள முடியும். இதற்கு Youtube Embeded Code என்னும் மென்பொருள் உதவி செய்கிறது.
இந்த மென்பொருளை இணையத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து பின் ஒப்பன் செய்யவும். பின் தோன்றும் விண்டோவில் உங்களுக்கு விருப்பமான யூடியூப் வீடியோவில் URLயை உள்ளிடவும்.
பின் அகலம், உயரம், நிறம் போன்றவற்றை மாற்றியமைத்துக் கொள்ளவும். பின் Generate Code என்னும் பொத்தானை அழுத்தி அந்த XHTML கோடினை கணணியில் சேமித்து வைத்துக் கொள்ளவும்.
வேண்டுமெனில் குறிப்பிட்ட திரையிலேயே Perview பார்த்துக் கொள்ளவும் முடியும். பின் சேமித்த XHTML கோப்பை உலவியில் ஒப்பன் செயதால் நீங்கள் வடிவமைத்த வடிவில் வீடியோவானது இருக்கும். இனி வழக்கம் போல வீடியோவினை காண முடியும்.

தரவிறக்க...

                                                                                     - நன்றி இணையம்.

No comments:

Post a Comment