Wednesday, June 22, 2011

Search by Image: கூகுளின் பயனுள்ள புதிய வசதி..





வாசகர்கள் பயன்பெறும் வகையில் அடிக்கடி ஏதாவது ஒரு பயனுள்ள வசதியை கூகுள் வெளியிட்டு கொண்டே உள்ளது. அந்த வரிசையில் கூகுள் இமேஜில் புதிய வசதியாக Search by Image என்ற வசதியை வெளியிட்டுள்ளனர்.நாம் ஏதாவது ஒரு புகைப்படத்தை நம் கணணியில் வைத்திருப்போம். அதே படம் அல்லது அதற்கு தொடர்பான படங்கள் வேறு அளவுகளில் நமக்கு தேவைபடும் பொழுது அந்த நேரங்களில் நாம் வைத்திருக்கும் படத்தின் குறிச்சொல்லை சரியாக கூகுளில் கொடுத்தால் அந்த படங்களை கண்டுபிடிக்க முடியும்.
குறிச்சொல் கொடுப்பதில் தவறு ஏற்ப்பட்டால் அந்த படங்களை கண்டறிய மிகுந்த சிரமம் எடுக்க வேண்டும். ஆனால் இனி இந்த பிரச்சினை இல்லை. நாம் அந்த படத்தை கூகுள் இமேஜில் கொடுத்து தேடினால் அதற்க்கு சம்பந்தமான படங்களை வெவ்வேறு அளவுகளில் சுலபமாக பெற்று கொள்ளலாம்.
உங்களுடைய புகைப்படத்தை கூகுளில் கொடுத்து தேடினால் உங்களுடைய புகைப்படம் எந்தெந்த தளத்தில் உள்ளது என சுலபமாக கண்டறியலாம்.
இந்த பயனுள்ள வசதியை பெற Google Image  இணைய தளத்திற்கு செல்லவும். அங்கு நாம் குறிச்சொல் கொடுக்கும் இடத்தில் ஒரு கமெரா போன்ற புதிய ஐகான் இருப்பதை காண முடியும். அதில் க்ளிக் செய்யுங்கள்.
அந்த ஐகான் மீது க்ளிக் செய்தவுடன் உங்களுக்கு இன்னொரு சிறிய விண்டோ ஓபன் ஆகும். அதில் நீங்கள் தேட விரும்பும் படத்தின் URL தெரிந்தால் அந்த URL அங்கே கொடுத்து தேடவும்.
புகைப்படம் உங்களுடைய கணணியில் இருந்தால் Upload an Image என்ற லிங்க் க்ளிக் செய்து உங்கள் புகைப்படத்தை பதிவேற்றம் செய்து தேடவும். உங்கள் புகைப்படத்தை டிராக்(Drag) செய்து இங்கு கொண்டு வந்தும் தேடலாம்.

                                                                                                      - நன்றி இணையம்.

No comments:

Post a Comment