மழலைப் புன்னகையும்
அழுகையும் நிறைந்திருக்கும்
அவள் வதனத்தை நோக்கி
முகத்தில் பரவசம் பிரசவிக்க
காற்றின் ஜாடையில்
கவிதைகள் கொஞ்ச
பூக்களின் வதனங்களும்
புன்னகைக்க
நான் உன்னை மனதார காதலிக்கிறேன் சுடர்
என்று கூறி
அதையே ஆங்கிலத்தில் தொடர்ந்தான் இனியவன்
தொடர்ந்தது மௌனம்
இருவரின் முகமும்
பூரித்து போய் இருந்தது
கவலையை அடக்கலாம்
கண்ணீர் வராமல்
சிரிப்பை ஏன் அடக்க வேண்டும்
சில்லறை சிதறாமல்
என்று வாய் விட்டு சிரித்தான் அமைதியாக
தாய் தந்தையை திருவிழாவில்
தொலைத்த குழந்தை
அவங்களை கண்டதும் அடையும்
மகிழ்சி போல் இருந்தது அவன் உள்ளம்
காதல் வந்தவுடன்
செல்ல பெருமிதம் அவனுக்கு தலைதூக்கியது !!!
சிரித்துக் கொண்டிருந்தவன்
சட்டென்று நிறுத்தினான்
என் வீட்டில் இன்னும் சொல்லவில்லையே !!!!
வீட்டில் என்ன சொல்வாங்க இனியன் ?
இரண்டு நாட்களுக்கு முன் இனியனுக்கு இருந்த
அதே பரபரப்பு.
இன்று சுடரின் விழிகளில்.
அவன் பேசவில்லை
அவளோடு கொஞ்சம் விளையாடலாம் என்பது அவன் எண்ணம்
சுடர்
என்னை மன்னிச்சுடு
வீட்டில் ஒதுக்க மாட்டாங்க
சட்டென்று கொட்டும் மார்கழி மழைபோல
அவள் விழிகள் வழிந்தன
அதை சற்றும் எதிர்பார்க்காத இனியன்
இதயம் உடைந்தான்
என்ன சுடர்
வீட்டில எல்லா மே சம்மதம் சொல்வாங்க
சும்மா ஒரு விளையாட்டுக்காய் . . .
உங்களுக்கு எல்லாமே விளையாட்டுத்தான்.
உங்கள் வீட்டைப்பற்றி எனக்கென்ன தெரியும் ?
காதல் என்பது வேப்பங்காய்
சில குடும்பத்துக்கு
கொஞ்சம் கோபம்,
கொஞ்சம் அழுகையாய் சொல்லிவைத்தாள்.
என் அப்பா கண்டிப்பானவர் தான்
ஆனாலும்
நான் இருக்கும் வருடத்தில்
தான் அவரும் வாழ்கிறார்.
என் விருப்பங்களை காயவைத்து
அவருடைய எண்ணங்களை வாழவைப்பதில்லை.
எங்கள் கிராமத்தின் தரைகள் கூட
பச்சையம் தயாரிப்பவை
பச்சையோடு அவருக்கு பரிச்சயம் அதிகம்
அதனால் தானோ என்னவோ
நம் காதலுக்கும் அவர் பச்சைக்கொடிதான் காடுவார்
என்ற நம்பிக்கை இருக்கிறது
இருந்தாலும் அங்கீகாரம் பெற
அம்மாவின் முந்தானையோடு தான் நான்
முன்னேற வேண்டும்
தொடராக சொல்லிவிட்டு சுடரைப் பார்த்தான்.
அவள் கண்களில் இப்போது கண்ணீர் சுவடு இல்லை
சிரித்தாள்.
இந்த காதல் கொஞ்சம் வித்தியாசமானது
அல்லவா? இனியன்
இது காதலா
என்று உணரவே இவளவு
நாளாகி விட்டது
இனி ஒரு கணமும் உங்கள் தூய்மையான
காதல் இன்றி என் கணங்கள் நகராது
என்று
சொல்லிவிட்டு சிரித்தாள்
சுடர்விழி
அக்காதலர்களின் சிரிபோலியும்
பறவைகளின் மாலை நேர ஒலியும்
அந்த மஞ்சள் மாலைப் பொழுதுக்கு
ஒரு புது மெட்டையே உருவாக்கியது
மஞ்சள் நிற தங்க கிண்ணமாய்
நின்ற மாலை கதிரவன்
மகரந்தம் கொண்டு
கவி எழுதினான்.
..இது காதல்... என்று .
**********முற்றும்***********
இந்த ஆக்கத்தினை எனக்கு தந்து உதவிய நண்பன் பார்த்திபனுக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன். இது போன்ற சிறந்த ஆக்கங்கள் உங்களிடம் இருந்தால் வரவேற்கப்படுகின்றன.
மின்அஞ்சல் முகவரி: sugaanan@gmail.com
No comments:
Post a Comment