வாலிபப் பருவம் சவால் பல நிறைந்த ஒரு பருவம். நினைத்ததை சாத்திதே ஆக வேண்டும் என திடத்துடன் சுற்றும் காலம். எனக்கு கீழே தான் உலகம் என்ற இறுமாப்புடனேயே காலம் கழியும்.
ஒருவனை உயர்ந்தவனாகவும், தாழ்ந்தவனாகவும் ஆக்கக் கூடியது இந்தக் காலப் பகுதி. இக் காலத்தில் சேரும் நண்பர் வட்டமே அதனைத் தீர்மானிக்கும்.
அதையும் மீறி அப் பருவத்தில் துளிர்விடும் காதல் மிகவும் இதமான அனுபவங்களைக் கொண்டது. அதில் வெற்றிக் கனியைச் சுவைப்பவர்களும் உண்டு. தோல்வியில் புதிய வியூகங்களை அமைப்பவர்களும் உண்டு.
காதல் என்றால்.....
“ கவிப்பேரரசு தனது பதிப்பு ஒன்றில் அதற்கான விளக்கத்தை இவ்வாறு கொடுக்கின்றார்.”
மனம் என்பது தனது கட்டுப்பாட்டை இழந்து பறக்கும் பருவம் பதினெட்டு - பத்தொன்பது வயது... அந்தக் காலப் பகுதியில் மசும் ஒரு தாவுத் தாவிவிட்டு “அது நடக்குமா/ நடக்காதா??” என்ற பரவசத்தோடும் பரிதவிப்போடும் அசைபோட்டுக் கொண்டிருக்கும். அப்படியான ஒரு நிலையே “ காதல்...” என்கிறார்.
காதலில் ஒருதலைக் காதல் என்பது அனுபவித்துப் பார்த்தவர்களுக்குத் தெரியும் எவ்வாறு இனிமையாதும் அவஸ்தையானதும் என்று..
ஒருதலைக் காதல்.....
ஓர் பெண் மீது ஆண் மட்டுமோ/ ஓர் ஆண் மீது பெண் மட்டுமோ தமது ஆசைகளையும் கனவுகளையும் தங்கள் மனதில் புதைத்து அதற்கோர் வடிவம் கொடுத்து அந்த வடிவத்துடன் ஆசை வார்த்தை பேசி அகமகிழ்ந்து உறவாடுவது “ ஒருதலைக் காதல்...”
இலக்கியங்கள் கூறும் காதல்.....
ஓர் ஆணின் மனதோடு பெண்ணின் மனதும் ஓர் பெண்ணின் மனதோடு ஆணின் மனதும் ஒன்றோடு ஒன்று இடறி விழுந்து , இடறி விழுந்த மனசுகளின் சம்மததோடு உடம்புகளும் தொட்டுக் கொண்டு இன்பம் போல ஒரு துன்பத்தையும் , துன்பம் போல ஒரு இன்பத்தையும் ஒரே நேரத்தில் அனுபவித்தால் அதனைக் “காதல்” என்கிறது.
காமம்........
‘ நீ எனக்கல்ல’ ‘ நான் உனக்கல்ல’ ஆனால் ‘ எனக்கு நீ வேண்டும்’ ‘உனக்கு நான் வேண்டும்’ உன்னால் வரும் சுகம் எனக்கு , என்னால் வரும் சுகம் உனக்கு போகிறபோக்கில் போவோம். காலம் நம்மை எங்கே பிரியச் சொல்கிறதோ அந்த இடத்தில் லாப நட்டக் கணக்குப் பார்க்காமல் பிரிந்துகொள்வோம்.
இதுவே “காமம்”.
காமம் என்பதனை நாம் எல்லோரும் ஓர் கேவலமாகவே நோக்குகின்றோம். ஆனால் பேரறிஞர் “ஓக்ஷோ” மட்டும் இதற்கு உதாரணங்களுடன் கூடிய பல விளக்கங்களைக் கொடுத்துள்ளார். “ ஓக்ஷோ” வைப் பற்றி பிறிதொரு சந்தர்ப்பத்தில் அலசுவோம்.
கல்யாணம்.....
ஒவ்வோர் கலாச்சாரத்திற்கும் போல் திருமணச் சடங்கு வேறுபடும். பொதுவக திருமணம் என்பது,
ஓர் ஆணும் பெண்ணும் உறவு கொள்ள பல சாத்திர சம்பிரதாயங்களை வகுத்து பெரியவர்கள் ஒன்று கூடி அவர்களை ஒன்று சேர்த்து வைப்பது “திருமணம்” எனப்படுகிறது.
“ நாங்களாப் போய் ஒரு கிணத்தில விழுந்தா
அது காதல்
அதுவே பெரியவங்களா சேர்ந்து தள்ளிவிட்டா
அது திருமணம் ”
இறுதியில்.........
கோவிந்தா... கோவிந்தா...கோவிந்தா... கோவிந்தா...கோவிந்தா... கோவிந்தா...
சுப்பர் article இன்னும் எதிர்பார்க்கிறம்...........வாழ்த்துக்கள்
ReplyDelete