Tuesday, July 5, 2011

இது காதல் ஒரு புது கவிதை .................(பாகம் 9)

கேள்வியாய் ...                               
நாம் காதலித்தால் 
நட்பு என்னாவது இனியவன்?
தொடர்ந்தாள் சுடர்விழி .. 

இனியவன் உற்சாகமாய் 
காதலோ,
கல்யாணமோ
புரிந்துணர்வில் தானே 
உயிர் வாழ்கிறது 

நம் நட்பை அதற்கு ஒரு 
பாலமாக 
அமைப்போமே 
என்றான் 

சுடரின் முகத்தில் 
ஒரு புதிய பரவசம் 
பிரகாசமாவதை 
உணர்ந்தான் இனியவன் 

தன்னுள்ளும் 
காதல் பிரசவிக்க 
தொடங்கி விட்டது என்பதை 
உணர்ந்தாள் சுடர்விழி ...

நானும் உன்னை காதலிக்கிறேன் 
இனியவன் என்று சொல்ல
அவள் மனம் ஒரு ஆராய்ச்சி தேடலில்
இறங்கியது,
எப்படி காதலை இனியவனிடம்
சொல்லலாம் என்று ..

இரண்டு முகங்களும் 
பிரகாசமாக,

 

சூரியன் அந்த 
மாலைப் பொழுதில் 
தன் வர்ண ஜாலத்தை
வான வேடிக்கையாய்  காட்டினான் 

மகிழ்ச்சியில் 
வாய் இரண்டும் ஊமையானது 

இனியவன் அவள் 
பதிலை எதிர்பார்த்து
அவளையே பார்த்து 
மனகவிதை புனைந்தவாறு 
இருந்தான் 

கொட்டும் மழையிலே 
சில்லென்று தூவுகின்ற
சாரல் காற்று போல் 
இருந்த அவள்
நீண்ட கரும் கூந்தலையும் 

அவள் காதோரம்
தவழ்கின்ற சிறு கூந்தல் 
அவனை நோக்கி 
பறப்பதையும் 

 ஒவ்வொரு முறையும் 
அவன் குட்டி பிள்ளைகளை
அள்ளி அணைக்கையிலே 

நெற்றியிலுலுள்ள
சிறு புள்ளி பொட்டு 
அவன் நினைவில் சுட்டிய 

அவள் காதோரத்தில்
உள்ள குட்டி மச்சதையும் 

அடுத்து அவள் அகன்ற
முகத்தில் அழகான கண்களையும் 

பார்த்து ரசித்தவாறே 
இருந்தான் அவன் 

அந்த கணம் மீண்டும் 
வராது 
என்பதற்காகவே பதிலை 
தாமதமாக்கினாள் சுடர்விழி..

சூரியன் கீழிறங்கவே 
சுதாகரித்த அவள் 
இனியவன் நான் உங்களை காதலிக்கிறேன் 
என்று அழகிய தமிழிலேயே சொன்னாள் 

இப்போதல்ல 

சில மாதங்களாகவே 
உங்களை காதலிக்கிறேன் 
என் குழப்பங்களே எனக்கு 
வேலியாய் 
கொணர்ந்து என்னையே 
சிறை படுத்தி விட்டேன் 

உங்களை காயபடுத்தி 
இருந்தால் மன்னியுங்கள் 

என்று தொடர்ந்து கொண்டே 
போனாள் சுடர்விழி ..................

                                                                                         பார்த்தியின் பதிவு தொடரும்.....

No comments:

Post a Comment