Tuesday, July 21, 2020

தனிமைப்படுத்தலும் நோய்த் தடுப்பும் தொடர்பான சட்ட விதிகள் - 02


இலங்கையில் நோய்த் தடுப்பு விடயங்கள் தொடர்பாக காலத்துக்குக் காலம் பல சட்டங்கள் ஆக்கப்பட்டிருப்பினும்கூட 1897ம் ஆண்டின் 03ம் இலக்க தனிமைப்படுத்தலும் நோய்த் தடுப்பும் கட்டளைச் சட்டமே சுகாதாரத் துறையின் நோக்கெல்லையில் மிகவும் பரந்தளவிலான விதானங்களைத் தாங்கி நிற்கும் சட்ட ஏற்பாடாகவுள்ளது. இது தனிமைப்படுத்தலுக்கான சட்டமாக அறியப்படினும்கூட நோய்த் தடுப்பு தொடர்பாக ஆளும் சட்ட விதிகளையும் உள்ளடக்கியுள்ளது.
இச் சட்டத்தின் பிரிவு 02 இன்கீழ் ஒழுங்குவிதிகளை ஆக்கும் அதிகாரம் அமைச்சருக்கு உள்ளது. அமைச்சர் என்பது சுகாதாரத் துறைக்குப் பொறுப்பான அமைச்சரைக் குறிக்கும். அந்த வகையில் அமைச்சர் பிரிவு 03 இல் குறித்துரைக்கப்
-பட்டதற்கிணங்க
(*) விமான நிலையம் அல்லது துறைமுகம் வந்தடைகின்ற விமானங்கள் மற்றும் கப்பல்களை தொற்றுநீக்கம் செய்வதற்கான,
(*) விமானம் அல்லது கப்பல்களில் கொண்டு வரும் பொருட்களை தொற்று நீக்கம் செய்வதற்கான,
(*) சில விமானம் தரையிறங்குவதை அல்லது கப்பல் வந்தடைவதை நிபந்தனையுடன் அனுமதிக்கும் அல்லது முற்றாக தடைசெய்வதற்கான,
(*) சில விமானம் அல்லது கப்பல் உள் வருவதை அல்லது வெளிச் செல்வதைத் தடுப்பதற்கான,
(*) புகையிரதத்தில் பயணம் செய்வோரை சோதனை செய்தல் மற்றும் வைத்திய சாலைகளில் தொற்று நோயாளர்களை ஏனைய நோயாளர்களிலிருந்து வேறுபிரித்து வைப்பதற்கான,
(*) தொற்றுநோய் ஏற்பட்டவர்களைத் தனிமைப்படுத்தி வைப்பதற்கான,
(*) தொற்றுநோய் ஏற்பட்ட பகுதிகளைத் தனிமைப்படுத்தவும், கண்காணிப்பதற்குமான,
(*) தொற்றுநோய் ஏற்பட்ட நபர்களை அவர்களது வசிப்பிடத்திலிருந்து அகற்றி வைத்தியசாலை அல்லது தனிமைப்படுத்தி வைக்கும் இடங்களுக்கு அனுப்புவதற்கும் பராமரிப்பதற்குமான,
(*) தொற்றுநோய் காரணமாக இறந்த நபர்களின் சடலங்களை அடக்கம் (எரித்தல் அல்லது புதைத்தல்) செய்வதற்கான முறைமைகள் தொடர்பான,
(*) வசிப்பிடமொன்றில் அனுமதிக்கக்கூடிய ஆட்களின் எண்ணிக்கையை தீர்மானிக்க,
(*) சில கிணறு, குழிகளை மூடுவதற்கான,
(*) சுகநலனுக்குப் பாதகமான வீடுகள், கட்டிடங்கள், அறைகள், கால்வாய்கள் மற்றும் பிற இடங்களை தொற்றுநீக்கம் செய்வதற்கான,
(*) இச்சட்டதிலும் ஒழுங்குவிதிகளிலும் குறித்துரைக்கப்பட்ட விடயங்களை நிறைவேற்றுவதற்கும், விசாரணை செய்வதற்கும், கடமைகளைப் புரிவதற்கும் பரிசோதகர்களை நியமிக்கவும் அதிகாரம் வழங்குவதற்குமான
ஒழுங்குவிதிகளை ஆக்குவதற்கான அதிகாரம் அமைச்சருக்குள்ளது. அந்தவகையில் நோக்குமித்து மேற்படி அதிகாரத்தின் அடிப்படையில் Covid-19 நோய் நிலைக்கு முன்னர் இச் சட்டத்தின் கீழ் ஆக்கப்பட்ட பிரதான ஒழுங்குவிகளாக பினவருவனவற்றைக் குறிப்பிடலாம்.
(1) புழு வியாதியை தடுப்பதற்கான ஒழுங்குவிதிகள்
(Regulations related to Anchylostomiasis)
(2) நுளம்புகள் மூலம் பரவும் நோய்களைத் தடுப்பதற்கான ஒழுங்குவிதிகள்
(Regulations related to Mosquito borne diseases)
(3) தனிமைப்படுத்தலுக்கான ஒழுங்குவிதிகள் (Qurantine Regulations)
(4) பொது ஒழுங்குவிதிகள்
(General Regulations)

COPY FROM:

Kajenthiran Sathithasan
 

-----தொடர்ச்சி விரைவில் ------

No comments:

Post a Comment